Sunday, February 14, 2010

சொல்லின் வலிமை

ஆஸ்ரமம் ஒன்றுக்கு விஜயம் செய்த மன்னன ஒருவன் “அரசாங்க காரியங்களைச் செய்யும் ஆற்றல் துறவிகளுக்கு இல்லை என்று அகந்தையுடன் சொன்னான். அதற்கு அங்கிருந்த தலைமைத் துறவி “கழுதையைப் போல பொதி சுமக்க குதிரைக்கும் சக்தி உண்டு. ஆனால் சுமக்க சம்மதிப்பதில்லை. அதற்கென்று உள்ள முக்கியமான பணிகளை மட்டுமே குதிரைக்கு அளிப்பர். அதே போல் துறவிகளுக்கு அரசாங்க காரியங்களைச் செய்யும் ஆற்றல் உள்ளது. அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லை.
அவர்களுக்கென்று இதைவிட முக்கியமான பணிகள் அவர்களுக்கு இருப்பதால் அதனைச் தான் செய்வார்கள்என்றார். 
சொல்லிற்கும் சுவைக்கும் நாவை அடக்கவில்லை என்றால் நாம் அதற்கு அடிமையாக வேண்டும்; அவலமும் பட வேண்டும்.  

1 comment:

  1. சாதாரண மனிதர்கள் அகந்தையை சுமக்கிறார்கள்

    ஞானிகள் ஆண்டவனை நினைக்கிறார்கள்
    நாவை ஆள்பவர்கள் நற்கதி அடைகிறார்கள் நாவிற்கு சுமை நாதனின் நாமமே

    ReplyDelete