Saturday, July 31, 2010

ஜகதோத்தாரணா

ஸங்கீத பிதாமகர் புரந்தரதாசர் ஒரு சமயம் தொட்டமளூர் திருத்தலத்திற்கு சென்றார். காலதமாதமாக வந்ததால் கோவில் நடை மூடப்பட்டது. மனம் வருந்தி கோவிலுக்கு வெளியே நின்று “ஜகதோத்தாரணா" என்ற பாடலைப் பாட, கோவில் கதவு திறந்து தவழ்ந்த கோலக் கண்ணன் தன் முகத்தை திருப்பி புரந்தரதாசருக்கு காட்சியளித்தார். இந்தக் கண்ணன், காண்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மோகனப் புன்னகையுடன் இத்தலத்தில் காட்சி தருகிறார். பிள்ளைப்பேறு வேண்டுவோர் இக்கண்ணனை வேண்டி பலன் பெறலாம். 
நவநீத கிருஷ்ணனை மேலும் அறிய/அனுபவிக்க இங்கே காணலாம்.

Tuesday, July 13, 2010

நந்தகதர நந்த கோப நந்தன

தாளப்பாக்கம் சின்னண்ணா, அன்னம்மாச்சார்யாவின் பௌத்ரன், “த்விபாதா என்ற குரள் போன்ற ஓர் அமைப்பு வகைப் பாடல்கள் மூலம் அன்னம்மாச்சார்யர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை நமக்கு அளித்துள்ளார்கள். தொண்ணுற்றைந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமைய்யா சர்வதாரி வருடத்தில் (May 9, 1408) பிறந்து துந்துபி வருடத்தில் (February 23, 1503) இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இவர் வேங்கடேஸ்வர பெருமாளின் நந்தக அல்லது வாளின் ஸ்வரூபமாக கருதுகிறார்கள். இவரது மூதாதையர்கள் “நந்தவரிகாஸ் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஆண்ட அரசனை நந்தா என்றும் அழைத்தனர். அன்னமைய்யாவைவிட எழுவது அகவை சிறியவரான புரந்தர தாசரைப் பற்றிய பல விவரங்கள் சின்னண்ணா எழுதிய முப்பத்திரண்டு ஆயிரம் குரள்களில் பல இடங்களில் வருவதாக ஆராய்ந்து உள்ளனர்.
அன்னமைய்யாவின் இந்தப் பாடலை “பாக்யஸ்ரீ என்ற ராகத்தில் திரு. நேதநூரி அவர்கள் அமைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்

Monday, July 12, 2010

காஞ்சி வரதர் பரிவேட்டை

நீங்கள் இங்கு ரசிக்கும் வீடியோ தொகுப்பு, பழைய சீவரத்தில் கனுப் பொங்கல் அன்று நடந்த திருவிழா. அன்று காஞ்சி வரதர் சீவரத்தின் மலை மேல் வந்து நமக்கு சேவை தருகிறார். இதனை பரிவேட்டை என்று அழைப்பர். மேலும் கஞ்சி வரதரின் பரிவேட்டையை லக்ஷ்மி நரசிம்ஹர் வரவேற்பதை இங்கு காணலாம். இருவரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையும் இங்கு காணலாம். 
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில் இந்த அபிமானஸ்தலம், பாலார், செய்யார் மற்றும் வேகவதி என்ற மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது. வெகு காலத்திற்கு முன்பு  இந்த மலைக் குன்றினை பத்மபுரம் என்று அழைத்து வந்தனர். மகாலக்ஷ்மியின் உறைவிடமானதால் இது பிற்காலத்தில் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்பட்டது. அது சீவரமாக மருவி பின் பழைய சீவரமாக அழைக்கப்படுகிறது.
அத்ரி, மார்கண்டேயர், ப்ருகு மகரிஷிகளுக்கு பகவான் லக்ஷ்மி நரசிம்ஹர் தனது அருள் பாலிக்க இங்கு வந்து ஆசி வழங்கினதாக ப்ரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது

அன்றும் இன்றும்

"Listen, please don’t evesdrop";
யார் சொல்கிறார்? யாரை சொல்கிறார்?
மேற்கண்ட செய்தியைப் படித்தேன். ஒரு கசப்பான இன்றைய நினைவு.
நான் முப்பத்தைந்து வருடங்கள் பின் சென்று பார்த்தேன். ஒரு இதமான நினைவு.
திரு.எஸ்.ராமநாதன் அவர்களின் சங்கீத வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது.. ஒரு ஆறு வயது குழந்தை சரளி வரிசை ஜண்டை வரிசை கற்றுக்கொள்ள வருகிறாள். அதற்கான புத்தகத்துடன் ஒரு சிறிய ஒலி நாடா பதிவு செய்யும் (Tape Recorder) கணினியும் கொண்டு வருகிறாள். சிறிதும் தயக்கமின்றி ஒலி பதிவு செய்துகொள்ள அனுமதிக்கிறார். அந்த ஸங்கீத மகானிடம் அப்பொழுது அந்த கணினி இல்லை. அப்பொழுது வேடிக்கையாக அவரது குருநாதரிடம் எப்படி கற்றுக் கொண்டார் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவர் கற்ற ஸங்கீத செல்வத்தை எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு வாரி வழங்கினார். அதே போல் திரு வைரமங்கலம்  லக்ஷ்மி நாராயணன் அவர்களும் ஸங்கீத செல்வத்தை தனது சிஷ்யர்களுக்கு வாரி வழங்கினார்.
கலி புருஷன் வளர்ந்து வருகிறான். உண்ணும உணவு, குடிக்கும் தண்ணீர், நல்ல இசை, நல்ல சொற்பொழிவு எல்லாவற்றிக்கும் ஒரு விலை உள்ளது.
We are now in a materialistic world. 

aaradhanam-25.07.2010