தாளப்பாக்கம் சின்னண்ணா, அன்னம்மாச்சார்யாவின் பௌத்ரன், “த்விபாதா” என்ற குரள் போன்ற ஓர் அமைப்பு வகைப் பாடல்கள் மூலம் அன்னம்மாச்சார்யர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை நமக்கு அளித்துள்ளார்கள். தொண்ணுற்றைந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமைய்யா சர்வதாரி வருடத்தில் (May 9, 1408) பிறந்து துந்துபி வருடத்தில் (February 23, 1503) இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இவர் வேங்கடேஸ்வர பெருமாளின் “நந்தக” அல்லது “வாளின்” ஸ்வரூபமாக கருதுகிறார்கள். இவரது மூதாதையர்கள் “நந்தவரிகாஸ்” என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஆண்ட அரசனை நந்தா என்றும் அழைத்தனர். அன்னமைய்யாவைவிட எழுவது அகவை சிறியவரான புரந்தர தாசரைப் பற்றிய பல விவரங்கள் சின்னண்ணா எழுதிய முப்பத்திரண்டு ஆயிரம் குரள்களில் பல இடங்களில் வருவதாக ஆராய்ந்து உள்ளனர்.
அன்னமைய்யாவின் இந்தப் பாடலை “பாக்யஸ்ரீ” என்ற ராகத்தில் திரு. நேதநூரி அவர்கள் அமைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்
பழமையான பாடலை தாங்கள் ரசித்து பாடியமையால் அதை புதிய பாடலாக நாங்கள் கேட்டு ரசித்தோம்
ReplyDelete