நீங்கள் இங்கு ரசிக்கும் வீடியோ தொகுப்பு, பழைய சீவரத்தில் கனுப் பொங்கல் அன்று நடந்த திருவிழா. அன்று காஞ்சி வரதர் சீவரத்தின் மலை மேல் வந்து நமக்கு சேவை தருகிறார். இதனை பரிவேட்டை என்று அழைப்பர். மேலும் கஞ்சி வரதரின் பரிவேட்டையை லக்ஷ்மி நரசிம்ஹர் வரவேற்பதை இங்கு காணலாம். இருவரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையும் இங்கு காணலாம்.
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில் இந்த அபிமானஸ்தலம், பாலார், செய்யார் மற்றும் வேகவதி என்ற மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது. வெகு காலத்திற்கு முன்பு இந்த மலைக் குன்றினை பத்மபுரம் என்று அழைத்து வந்தனர். மகாலக்ஷ்மியின் உறைவிடமானதால் இது பிற்காலத்தில் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்பட்டது. அது சீவரமாக மருவி பின் பழைய சீவரமாக அழைக்கப்படுகிறது.
அத்ரி, மார்கண்டேயர், ப்ருகு மகரிஷிகளுக்கு பகவான் லக்ஷ்மி நரசிம்ஹர் தனது அருள் பாலிக்க இங்கு வந்து ஆசி வழங்கினதாக ப்ரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment