"Listen, please don’t evesdrop";
யார் சொல்கிறார்? யாரை சொல்கிறார்?
மேற்கண்ட செய்தியைப் படித்தேன். ஒரு கசப்பான இன்றைய நினைவு.
நான் முப்பத்தைந்து வருடங்கள் பின் சென்று பார்த்தேன். ஒரு இதமான நினைவு.
திரு.எஸ்.ராமநாதன் அவர்களின் சங்கீத வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது.. ஒரு ஆறு வயது குழந்தை சரளி வரிசை ஜண்டை வரிசை கற்றுக்கொள்ள வருகிறாள். அதற்கான புத்தகத்துடன் ஒரு சிறிய ஒலி நாடா பதிவு செய்யும் (Tape Recorder) கணினியும் கொண்டு வருகிறாள். சிறிதும் தயக்கமின்றி ஒலி பதிவு செய்துகொள்ள அனுமதிக்கிறார். அந்த ஸங்கீத மகானிடம் அப்பொழுது அந்த கணினி இல்லை. அப்பொழுது வேடிக்கையாக அவரது குருநாதரிடம் எப்படி கற்றுக் கொண்டார் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவர் கற்ற ஸங்கீத செல்வத்தை எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு வாரி வழங்கினார். அதே போல் திரு வைரமங்கலம் லக்ஷ்மி நாராயணன் அவர்களும் ஸங்கீத செல்வத்தை தனது சிஷ்யர்களுக்கு வாரி வழங்கினார்.
கலி புருஷன் வளர்ந்து வருகிறான். உண்ணும உணவு, குடிக்கும் தண்ணீர், நல்ல இசை, நல்ல சொற்பொழிவு எல்லாவற்றிக்கும் ஒரு விலை உள்ளது.
We are now in a materialistic world.
No comments:
Post a Comment