Thursday, November 4, 2010

Happy Deepavali

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்றைய நன்னாள் பகவான் க்ருஷ்ணர் நரகாசுரனை வென்று வதைத்த நாள். நம்மை தீமைகளிலிருந்து காத்த நன்நாள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதர் 1835ம் வருடம் அவரது சிஷ்யர்கள் “மீனாக்ஷி மே முதம் என்ற கமகக்ரியா ராக க்ருதியினை பாடும் பொழுது “மீன லோசனி பாச மோசினி என்று பாடும் பொழுது “சிவே பாஹி என்று சொல்லிய வண்ணம் இறைவன் திருவடியை அடைந்த நாள். அவரது நோட்டுஸ்வரம் மிகவும் ப்ராபல்யமானது. ஸோமாஸ்கந்தம் என்ற நோட்டு ஸ்வரபாடலை முயற்சி செய்துள்ளேன்.

1 comment:

  1. முத்துஸ்வாமி தீக்ஷிதர் இறைவன் திருவடியை அடைந்த நாள் அன்று அவர் பாடிய நோட்டு ஸ்வரத்தை நீங்கள் பாடியது மிகவும் பொருத்தமாக அமைந்தது. இசை அமைத்த விதம அதாவது இணை வாத்தியங்களைக்கொண்டு இணைத்து அமைத்து பாடிய விதம வரவேற்கத்தக்கது.

    ReplyDelete