நாற்பது
வருடங்களுக்கு முன் எங்கள் குருநாதருக்கு வெள்ளித்திரையின் ப்ரபல இசையமைப்பாளர்
ஒருவர், பீம்சிங் ஜோஷியின் அபங்கப்பாடல்களின் இசை நாடாக்களை கொடுத்து, எங்களது
சனிக்கிழமை ஸம்ப்ரதாய பஜனையில் பாட ஊக்குவித்தார்கள். பாடல் பதிவும் செய்யும் மின்
கருவியில் பல தடவைகள் இசைத்து இந்தப் பாடல்களின் வரிகளை, மாதவன் என்பவரின்
தந்தையார் மூலம் சிட்டைப்படுத்திக் கொண்டோம். பல வருடங்கள் இந்தப் பாடல்களைக்
கேட்டுப் பாடும் பொழுது, என்றாவது ஒரு நாள், ஜோஷி அவர்கள் பாடுவதைப் போல் சிறிதளவு
சாயலிலாவது பாடவேண்டும் என்று நினைத்தது உண்டு. இதோ ஒரு (விசேஷ) விஷப் பரிக்ஷை.
நீங்கள் அளிக்கும் மதிப்பீட்டிலிருந்து மற்றய பாடல்களையும் இவ்வாறு பாடலாமா கூடாதா
என்பதை நான் முடிவு செய்ய ஏதுவாக இருக்கும்.
Friday, June 29, 2012
Narayana Theertha Tarangam Teaches digestive system
இன்றய விஞ்ஞானம் உடல் உறுப்புகளையும், உடலில்
ஏற்படும் உபாதைகளயும், நாம் உண்ணும் உணவு, உடலில் எனைய உடற்கூறுகள், அதனை எவ்வாறு
உறிஞ்சி தக்கவைத்துக் கொள்கிறது என்ற எனைய செய்திகளை ஒளி ஒலி வடிவில் நாம் காண ஏதுவாக
உள்ளது. இது போன்ற தொகுப்புகளை எந்தவிதமான விஞ்ஞானக் கருவிகள் இல்லாமலேயே வேத காலம் தொட்டு நாம் அறிந்துள்ளோம்.
நம்மால் உட்கொள்ளப்படும் கடினமான உணவுப்பொருளே
மனதாக மாறுகிறது, நம்மால் அருந்தப்படும் நீரே, ப்ராணனாகிறது என்பதை எங்ஙகனம்
அறிந்து கொள்வது என்று ச்வேதகேது என்ற ரிஷி குமாரன் அவரது தகப்பனார் உத்தாலக
முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் குமாரனை பதினாறு நாட்கள் அன்னமின்றி நீரை
மாத்திரம் அருந்தி வந்தால் அதன் உண்மையை அறியலாம் என்றார். பதினாறாவது நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் ச்வேதகேது
வந்தபோது உத்தாலகர் ரிஷி குமாரனை வேதம் ஓதச்சொன்னார். குமாரன், எனது மனத்தில் ஒன்றும்
தோன்றவில்லயே என்றான். அதற்கு உத்தாலகர் “உன்
மனத்தில் பதினாறு அம்சங்கள் கொண்ட பலத்தில் பதினைந்து அம்சங்கள் அழிந்து விட்டன.
அதனால் வேதங்கள். ஓத மனதில் தோன்றவில்லை. நீரை பருகியதால் உயிரை இழக்கவில்லை” என்று
பதிலளித்தார். மேலும் கூறலானார் “எவ்விதம் சிறிய நெருப்புத்துண்டில் முதலிலேயே
பெரிய விறகுகளைப் போடாமல், உரிமட்டை நார், சிறிய சிறாத்துகள்கள், சிறிய
எரிமுட்டைகளைக் கொண்டு பெரிதாகச் செய்கின்றோமோ அது போல் உன் மனதில் உள்ள அன்ன சக்தியின்
ஒரு அம்சத்தை சிறிது சிறிதாக அன்னத்தை உட்கொண்டு பூர்ண சக்தி பெற்று மந்திரம்
ஓதுவாயாக” என்றார். அவ்வாறே செய்தபின்,
தயக்கமின்றி வேதங்களை ஸ்வரத்துடன் கூறினான் என்பது வேத காலச் செய்தி.
அன்னஸலிலே அபவதாம சித பீதே
ப்ராணமானஸபரிணதே பரமஸூக்ஷ்மே
வாகபவதப்யசிதமல்பபரிணாமி
ஜ்யோதிரவதாரயத ஸத்யமிதி மாமோம்
अन्नसलिले अभवथा मशितपीते
प्राणमान सपरिणते परमसूक्ष्मे
वागभवदष्य शितमल्पपरिणामि
ज्योतिरवधारयत सत्यमितिमामोम
நாம்
உண்ணும் உணவை மூன்று விதமாகப் பிரித்து அந்தமூன்றும் எவ்வாறாக நமது உடலில் உட்க்ரகித்து
எங்கெல்லாம் செல்கின்றது என்பதை நாராயண தீர்த்தரின்
இந்த் ஸ்லோகம் உணர்த்துகிறது.
மண்ணிலிருந்து தோன்றிய நெல்,
கோதுமை, உளுந்து, பயிறு, மொச்சை முதலிய தானியங்களை சமைத்து, கடினமான உணவை
உட்கொள்கிறோம். தாகத்தை தீர்த்துக்கொள்ள நீரைப் பருகுகிறோம். அதனை தைஜஸம் என்போர்.
எள், கடலை, தேங்காய் முதலிய எண்ணைகளிலிருந்தும், பசு, எருமை, ஆடு முதலான
விலங்குளின் பாலிருந்து வரும் எண்ணை, நெய் முதலிய த்ரவப் பொருள்களையும்
உட்கொள்கிறோம். நம் வயிற்றினுள் இருக்கும் தீ அதனை சமைக்கிறது. இந்த உணவிலிருந்து
வரும் முதல் தரமான உணவு நமது மனதாக (மூளையின் பரிணாம்மாக) அமைகிறது. நடுத்தரமான
அம்சம் உடலில் உள்ள மாமிசமாகிறது (திசுக்களாகிறது). மட்டமான அம்சம் மலமாகிறது
(கழிவுப் பொருளாகிறது). பருகுகின்ற நீர் ப்ராணனாகிறது (மூச்சுக் காற்றுக்கு
ஏதுவாகிறது). நடுத்தரமான அம்சம் ரத்தாமிகிறது. மட்டமான அம்சம் சிறு நீராகிறது.
அவ்விதமே நாம் உண்ணும் எண்ணை நெய் போன்ற வஸ்துக்களின் முதல் அம்சம் ஒலி, ஒளி
எழுப்பும் புலன்களை வலுப்படுத்துகிறது. நடுத்தரமான அம்சம் எலும்பிற்க்குள் உள்ள
ம்ஞ்ஜையாகிறது. மட்டமான அம்சமே எலும்பாகிறது. மனிதனுக்கு மிகவும் உதவி புரியும்
உள்ளம், உயிர், வாக்கு ஆகியவை நிலம், நீர், நெருப்பு ஆகிய பூதங்களே தோற்றி வைத்தன.
அத்தகைய பூதங்களே “ஸத்” என்ற பரம் பொருள். அதுவே ஒங்காரமாகும். அதுதான் கடவுள் என்கின்ற
ஸ்வரூபம்.
நான்கு
வரியில் உள்ள இந்த வடமொழிச் செய்யுளுக்கு இவ்வளவு உட்கருத்துகள் இருந்தால், இந்தப்
புதையலில் இருந்து மேலும் நாம் தேடுவோம் அல்லது தேடி எடுத்த முத்துக்களை நாம்
அனைவரும் பகிர்ந்துகொள்வோம்.
Thursday, June 14, 2012
Tuesday, June 12, 2012
Vishnu's Viswarupam
இசைக்காக எழுதிய நாமவளி
மின் வலை பதிவுகளை 2010ல் பிப்ரவரி மாதத்தில் பதிந்து வந்த போது, ”அருணாசல சிவ” என்ற பாடலை பாடி அந்தப் பாடலின் ராகத்தின் குறிப்பையும் எழுதியிருந்தேன்.
அருணாசல சிவ அருணாசல சிவ
அருணாசல சிவ அருண சிவா
அக்ஷய லிங்கா ஆத்ம லிங்கா
தேஜோமய விக்ரஹ லிங்கா
இக பர ஸுக தாயகா ஈசா
இக பர ஸுக தாயகா
ஒரு மாதம் முன் அந்த பாடலின்
ராகத்திற்கு ஏற்றாற்போல் உள்ள பின் இழைந்து வரும் இசையினை தொகுத்திருந்தேன். அந்த
இசையினை எனது நண்பர் திரு ராகவேந்த்ர ராவ் அவர்களுக்கு இசைத்து காண்பித்து, விளையாட்டாக
இதற்கு தகுந்தாற் போல் ஹரியின் பேரில் ஒரு நாமாவளியினை எழுதமுடியுமா என்று கேட்டதற்கு
அவர் எழுதிய இந்த வரிகள் பாடலின் மெட்டிற்கு தகுந்தாற் போல் நன்றாக இசைந்துள்ளது.
கருணாகர ஹரி ஸுகுணாமய ஹரி
அருணாம்புஜ ஹரி அனந்தா ஹரே
ஸஜ்ஜன ரக்ஷக ஜய பாண்டுரங்கா
ஸத்குண ரூபா ஹரி பாண்டுரங்கா
ஸுரபதி ஹரி மாதவா வாமனா
ஸ்ரீபதி ஹரி கேசவா
திரு ராகவேந்தர் ராவ் “குருநாத
சித்தர்” என்ற பெயரில் புனைந்த பல பாடல்கள் இசைநாடாக்களாகவும்,
குருந்தகடுகளாகவும் வந்துள்ளது. மேலும் அவர் திரைத்துறையில் ப்ரசித்தமான மெல்லிசை
மன்னர் விச்வநாதன் அவர்களின் இசைக்கு தகுந்தபடி பல பாடல்களை புனைந்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)