இன்றய விஞ்ஞானம் உடல் உறுப்புகளையும், உடலில்
ஏற்படும் உபாதைகளயும், நாம் உண்ணும் உணவு, உடலில் எனைய உடற்கூறுகள், அதனை எவ்வாறு
உறிஞ்சி தக்கவைத்துக் கொள்கிறது என்ற எனைய செய்திகளை ஒளி ஒலி வடிவில் நாம் காண ஏதுவாக
உள்ளது. இது போன்ற தொகுப்புகளை எந்தவிதமான விஞ்ஞானக் கருவிகள் இல்லாமலேயே வேத காலம் தொட்டு நாம் அறிந்துள்ளோம்.
நம்மால் உட்கொள்ளப்படும் கடினமான உணவுப்பொருளே
மனதாக மாறுகிறது, நம்மால் அருந்தப்படும் நீரே, ப்ராணனாகிறது என்பதை எங்ஙகனம்
அறிந்து கொள்வது என்று ச்வேதகேது என்ற ரிஷி குமாரன் அவரது தகப்பனார் உத்தாலக
முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் குமாரனை பதினாறு நாட்கள் அன்னமின்றி நீரை
மாத்திரம் அருந்தி வந்தால் அதன் உண்மையை அறியலாம் என்றார். பதினாறாவது நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் ச்வேதகேது
வந்தபோது உத்தாலகர் ரிஷி குமாரனை வேதம் ஓதச்சொன்னார். குமாரன், எனது மனத்தில் ஒன்றும்
தோன்றவில்லயே என்றான். அதற்கு உத்தாலகர் “உன்
மனத்தில் பதினாறு அம்சங்கள் கொண்ட பலத்தில் பதினைந்து அம்சங்கள் அழிந்து விட்டன.
அதனால் வேதங்கள். ஓத மனதில் தோன்றவில்லை. நீரை பருகியதால் உயிரை இழக்கவில்லை” என்று
பதிலளித்தார். மேலும் கூறலானார் “எவ்விதம் சிறிய நெருப்புத்துண்டில் முதலிலேயே
பெரிய விறகுகளைப் போடாமல், உரிமட்டை நார், சிறிய சிறாத்துகள்கள், சிறிய
எரிமுட்டைகளைக் கொண்டு பெரிதாகச் செய்கின்றோமோ அது போல் உன் மனதில் உள்ள அன்ன சக்தியின்
ஒரு அம்சத்தை சிறிது சிறிதாக அன்னத்தை உட்கொண்டு பூர்ண சக்தி பெற்று மந்திரம்
ஓதுவாயாக” என்றார். அவ்வாறே செய்தபின்,
தயக்கமின்றி வேதங்களை ஸ்வரத்துடன் கூறினான் என்பது வேத காலச் செய்தி.
அன்னஸலிலே அபவதாம சித பீதே
ப்ராணமானஸபரிணதே பரமஸூக்ஷ்மே
வாகபவதப்யசிதமல்பபரிணாமி
ஜ்யோதிரவதாரயத ஸத்யமிதி மாமோம்
अन्नसलिले अभवथा मशितपीते
प्राणमान सपरिणते परमसूक्ष्मे
वागभवदष्य शितमल्पपरिणामि
ज्योतिरवधारयत सत्यमितिमामोम
நாம்
உண்ணும் உணவை மூன்று விதமாகப் பிரித்து அந்தமூன்றும் எவ்வாறாக நமது உடலில் உட்க்ரகித்து
எங்கெல்லாம் செல்கின்றது என்பதை நாராயண தீர்த்தரின்
இந்த் ஸ்லோகம் உணர்த்துகிறது.
மண்ணிலிருந்து தோன்றிய நெல்,
கோதுமை, உளுந்து, பயிறு, மொச்சை முதலிய தானியங்களை சமைத்து, கடினமான உணவை
உட்கொள்கிறோம். தாகத்தை தீர்த்துக்கொள்ள நீரைப் பருகுகிறோம். அதனை தைஜஸம் என்போர்.
எள், கடலை, தேங்காய் முதலிய எண்ணைகளிலிருந்தும், பசு, எருமை, ஆடு முதலான
விலங்குளின் பாலிருந்து வரும் எண்ணை, நெய் முதலிய த்ரவப் பொருள்களையும்
உட்கொள்கிறோம். நம் வயிற்றினுள் இருக்கும் தீ அதனை சமைக்கிறது. இந்த உணவிலிருந்து
வரும் முதல் தரமான உணவு நமது மனதாக (மூளையின் பரிணாம்மாக) அமைகிறது. நடுத்தரமான
அம்சம் உடலில் உள்ள மாமிசமாகிறது (திசுக்களாகிறது). மட்டமான அம்சம் மலமாகிறது
(கழிவுப் பொருளாகிறது). பருகுகின்ற நீர் ப்ராணனாகிறது (மூச்சுக் காற்றுக்கு
ஏதுவாகிறது). நடுத்தரமான அம்சம் ரத்தாமிகிறது. மட்டமான அம்சம் சிறு நீராகிறது.
அவ்விதமே நாம் உண்ணும் எண்ணை நெய் போன்ற வஸ்துக்களின் முதல் அம்சம் ஒலி, ஒளி
எழுப்பும் புலன்களை வலுப்படுத்துகிறது. நடுத்தரமான அம்சம் எலும்பிற்க்குள் உள்ள
ம்ஞ்ஜையாகிறது. மட்டமான அம்சமே எலும்பாகிறது. மனிதனுக்கு மிகவும் உதவி புரியும்
உள்ளம், உயிர், வாக்கு ஆகியவை நிலம், நீர், நெருப்பு ஆகிய பூதங்களே தோற்றி வைத்தன.
அத்தகைய பூதங்களே “ஸத்” என்ற பரம் பொருள். அதுவே ஒங்காரமாகும். அதுதான் கடவுள் என்கின்ற
ஸ்வரூபம்.
நான்கு
வரியில் உள்ள இந்த வடமொழிச் செய்யுளுக்கு இவ்வளவு உட்கருத்துகள் இருந்தால், இந்தப்
புதையலில் இருந்து மேலும் நாம் தேடுவோம் அல்லது தேடி எடுத்த முத்துக்களை நாம்
அனைவரும் பகிர்ந்துகொள்வோம்.
Very nice.
ReplyDelete