Tuesday, June 12, 2012

Vishnu's Viswarupam


இசைக்காக எழுதிய நாமவளி

மின் வலை பதிவுகளை 2010ல் பிப்ரவரி மாதத்தில் பதிந்து வந்த போது, அருணாசல சிவ என்ற பாடலை பாடி அந்தப் பாடலின் ராகத்தின் குறிப்பையும் எழுதியிருந்தேன்.
அருணாசல சிவ  அருணாசல சிவ
அருணாசல சிவ  அருண சிவா
அக்ஷய லிங்கா ஆத்ம லிங்கா
தேஜோமய விக்ரஹ லிங்கா
இக பர ஸுக தாயகா  ஈசா
இக பர ஸுக தாயகா
ஒரு மாதம் முன் அந்த பாடலின் ராகத்திற்கு ஏற்றாற்போல் உள்ள பின் இழைந்து வரும் இசையினை தொகுத்திருந்தேன். அந்த இசையினை எனது நண்பர் திரு ராகவேந்த்ர ராவ் அவர்களுக்கு இசைத்து காண்பித்து, விளையாட்டாக இதற்கு தகுந்தாற் போல் ஹரியின் பேரில் ஒரு நாமாவளியினை எழுதமுடியுமா என்று கேட்டதற்கு அவர் எழுதிய இந்த வரிகள் பாடலின் மெட்டிற்கு தகுந்தாற் போல் நன்றாக இசைந்துள்ளது.
கருணாகர ஹரி ஸுகுணாமய  ஹரி
அருணாம்புஜ ஹரி அனந்தா ஹரே
ஸஜ்ஜன ரக்ஷக ஜய பாண்டுரங்கா
ஸத்குண ரூபா ஹரி பாண்டுரங்கா
ஸுரபதி ஹரி மாதவா வாமனா
ஸ்ரீபதி ஹரி கேசவா


திரு ராகவேந்தர் ராவ் “குருநாத சித்தர்என்ற பெயரில் புனைந்த பல பாடல்கள் இசைநாடாக்களாகவும், குருந்தகடுகளாகவும் வந்துள்ளது. மேலும் அவர் திரைத்துறையில் ப்ரசித்தமான மெல்லிசை மன்னர் விச்வநாதன் அவர்களின் இசைக்கு தகுந்தபடி பல பாடல்களை புனைந்துள்ளார்.

1 comment: