இசை மதம், மனிதன் என்ற வறையரைக்கு
அப்பாற்பட்டது. அன்று தஞ்சாவூர் ஸமஸ்தானத்தில் மான்பூண்டியா, கஞ்சிரா என்ற
அபூர்வமான இசைக்கருவியை உலகிற்கு அர்பணித்தார். இங்கு கஞ்சிரா போன்ற ஒரு
வாத்தியத்தைக் கேட்கலாம்/காணலாம். ”யாருக்குத்தான் தெரியும்” இந்த தேவமனோஹரி ராகம். இதோ இங்கே
காணும் ஐரிஷ் இசைக் குழுவின் பாடல் தொகுப்பினை கேளுங்கள். அவர்கள் நன்றாகவே தெரிந்துவைத்துள்ளார்கள்.
வடநாட்டின் ராகமான
ஹமீர்கல்யாணியில் அமைந்த ஒரு கவ்வாலி பாடல். ஆனால் பாடுவதோ ஒரு ஐரோப்பியர்.
அல்ஜீரிய நாட்டின் அழகான மனதிற்கு இதமான
மத்யமாவதி பாடல்
இது ஒரு ஆப்ரிக்க இசை. அபரிமிதமான
தொகுப்பு. நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்தும் ப்ருந்தாவன சாரங்கா. MSS அம்மா அவர்கள்
பாடிய ஸ்ரீரங்கபுர விஹாரா பாடல் கேட்கும் பொழுது, நான் அந்த பாடலை பாடி விடும் ஒரு
துடிப்பு எழும். ஆனால் பாடும் பொழுது அவர் பாடிய நுணுக்கம் நம்மிடம் வராதபோது ஒரு
மலைப்பான அனுபவம் தோன்றும். அதே போல் இந்த ஆப்ரிக்கர் கிதார் வாசிக்கும் பொழுது
எவ்வளவு சுலபமாக வாசித்துள்ளார் என்று தோன்றுகிறது. நீங்களும் முயற்சியுங்கள்.
சுலபமா அல்லது கடினமா என்பதை நீங்களே உணர்வீர்கள்.
இசைக்கு நாடு மொழி என்ற பேதம் ஒன்றும் இல்லை.மனதிற்கு மகிழ்வளிப்பதே அதன் இலக்கு. தாங்கள் அடைந்த இன்பத்தை நாங்களும் அடைந்து மகிழ்ந்தோம்.தங்கள் பணிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களது பாராட்டுக்கள் எனக்கு, மேலும் பல இது போன்ற மின் அஞ்சல்களை பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. மிகவும் நன்றி
ReplyDelete