Sunday, August 5, 2012

L.Krishnan's Captivating Music

ராகு தோஷ நிவர்த்தி
ராகு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக பலர் அறிந்தது திருநாகேஸ்வரமும், காளஹஸ்தீயும். திருப்பாம்புரம் என்ற தேவார ஸ்தலமும் ஸர்ப தோஷ நிவாரஸ்தலமாகும். வினாயகப் பெருமாள் சிவனை வழிபடும் போது ஆதிசேஷன் தன்னை வழிபடுவதாக நினைந்து இறுமாப்புக் கொண்டாரம். அதனை அறிந்த சிவபெருமான் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஸர்ப்பங்களின் வீரியம் போக சபித்தார். பயந்த நாகங்கள் அவரை அணுக அவரே அதற்கு ஒரு பரிகாரம் சொன்னார். அதன்படி ஆதிசேஷன், ராகு, கேது என்று பல நாகங்கள் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரத்தில் உள்ள ஈசனை மஹா சிவராத்ரி அன்று வழிபட்டு சாப விமோசனம் நீங்கியதாக ஒரு ஐதீகம்.

பலர் திரை மறைவில் இருந்து கொண்டு மிகவும் அடக்கமாக பல அறிய செயலகளைச் செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் திரு.L.க்ருஷ்ணன் அவர்கள். வானொலி நிலையத்தில் சேர்ந்திசையில் MBஸ்ரீனிவசனுடன் பணியாற்றியவர். இன்றுள்ள பல முன்னணி கர்நாடக விதூஷகர் / விதூஷிகளின் இசை நாடாக்கள், இசை தட்டுகளின் பாடல்கள் அமைப்பை உருவாக்கியவர். 
அதே போல் நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களை புனந்தவர் திரு.ராகவேந்த்ர ராவ். அவர் “குருநாதசித்தர்என்ற அங்கிததில் பல பாடல்களை எழுதி வெளியுட்டுள்ளார். ராகு தோஷ நிவர்த்திஎன்ற தலைப்பில் அவர் அமைத்த பாடல்களுக்கு திரு க்ருஷ்ணன் அவர்கள் இசை அமைத்து வெளியிட்ட பாடல்களை இங்கு வலையில் சேர்த்துள்ளேன். 
1. பகவான் ராகு பக்வான்
2.ராகு காலம் ராகு காலம்
3.ஸ்வர்ணபானுவெனும்
4.யோகம் வந்திடும்
5.காலம் நேரம் பார்த்து
6.அமுதம் உண்டிட
7.ராகுவும் கேதுவும்
8.ராகுவின் தரிசனம்
9.நலம் தரும் நவக்கிரகம்
10.சரணம் சரணம்
11.அனுக்கிரகம் செய்யும்

No comments:

Post a Comment