“யாதொரு
ப்ரும்மம் ஊண்டோ அதனை அறிந்தீர். தருமங்களோடு கூடிய மிகப் பெரிய அபூர்வமான
பாரதத்தை செய்துள்ளீர். இருப்பினும் ஏன் உமக்கு இந்தக் கவலை?” என்று நாரதர்
வ்யாசரைப் புகழ்ந்தார். வ்யாஸர் அதற்கு பதில் அளிக்கயில் அவர் நாரதரை இரண்டே
வரிகளில் எவ்வாறு புகழ்கிறார் என்பதை பின் வரும் ஸ்லோக மூலம் அறியாலாம்.
த்வம்
ப்ரியடந்நர்க இவ த்ரிலோகி
மந்தஸ்சரோ வாயுரிவாத்மஸாக்ஷி
பராவரே
ப்ரஹ்மணி தர்மதோ வரதை:
ஸ்நாதஸ்ய மே ந்யூனமாலம் விசக்ஷ்வ:
“சூரியபகவானைப்
போன்று மூன்று உலகங்களையும் சுற்றுகிறவராயும், வாயு பகவானைப் போன்று உள்ளே மூச்சுக்
காற்றாய் ஸ்ஞ்சரிக்கின்றவராயும், அதனால் புத்தி வ்ருத்தி அறிந்தவராயும்,
பரப்ரம்மதிலும், வேதத்திலும், யோகாப்யாஸத்திலும் கரைகண்டவர்” எங்கிறார்,
பின் அவரது கவலையைப் போக்க தனது அவதாரச் சுருக்கத்தை ஐந்து ஆறாவது அத்யாயத்தில் வயாசருக்கு அருளுகிறார்.
ப்ரும்மாவின்
மானஸீகப் புத்திரர்கள் ஸனகர், ஸநந்தனர்,ஸநாதனர், ஸனத்குமாரர். ப்ரபஞ்சத்தை
விஸ்தரிக்க ப்ராஜபத்யம் செய்யதூண்டினார். அருவருக்கத்தக்க இச்செயலை நாங்கள்
செய்யமாட்டோம் என்று சொல்லி நாரயண சரணாரவிந்தத்தை அடையச் சென்றனர். வெகுண்ட
ப்ரும்மாவின் கோபக்கனல் ஏகாதச ருத்ரர்களைப் படைத்தது. பிறகு தனது ஒவ்வொரு
உருப்புகளிலுருந்தும் ப்ரபமஞ்சத்தின் மூல புருஷர்களான பதின்மரைப் (புலஸ்த்யர்,
புலஹர்,அத்ரி, க்ருது, மரீசி, அங்கீரஸ், ப்ருகு, தக்ஷர், கர்தமர், வஸிஷ்டர்)
படைத்தார். இவர்கள் வளர்த்த ப்ராஜாபத்யம் இன்றும் ப்ரபஞ்சத்தில் நிலை கொண்டுள்ளது.
ப்ரும்மாவின் கழுத்திலிருந்து தோன்றியவர் நாரதர். இவர் ப்ராஜாபத்யம் செய்யாது
தகப்பனுக்கே உபதேசம் செய்தார். வெகுண்ட ப்ரும்மா சாபம் கொடுக்க நாரதரின் பல
அம்சங்கள் நமக்குத் தெரியவருகிறது.
புஷ்கரக்ஷேத்திரத்தில்
கந்தர்வன் ஒருவன் சிவனைக் குறித்து தவம் செய்து பரமவைஷ்ணவனான ஒரு பிள்ளையை வேண்டி
நாரதரை அடைந்தான். இப்பிறவியில் உபஹர்ணன் என்ற பெயருடன்
யௌவனப் பருவத்தை அடைந்தான். கந்தர்வப் பத்தினிகள் அவனிடம் காமமுற்று அவனை அடைய
தங்கள் உயிரைத்துறந்து அடுத்த பிறவியில் சித்ரரதன் என்ற கந்தர்வனுக்கு ஐம்பது
பெண்களாகப் பிறந்து உபஹர்ணனை மணந்தனர். இவ்வாறு இருந்தும் ஹரிபக்தியை விடாது
கையில் வீணையுடன் ஹரிநாமத்தை சொல்லியவண்ணம் இருத்தார். ஒருசமயம் ப்ரும்மாவின்
சபைக்குச் செல்ல அங்கு ரம்பை இவரைப் பார்த்து மோஹித்து நாட்டியத்தை பாதியில்
நிருத்தியதால் பூவுலகில் வேளாளனாகப் பிறக்குமாறு சாபத்துடன் பூவுலகை அடைந்தார்.
கன்யாகுப்ஜத்தின்
அரசனான ஆயனுக்கும், கலாவதிக்கும் மகனாய்ப் பிறந்தார். பஞ்சத்தால் வாடிய அந்த
நாட்டைல் இவர் பிறந்தவுடன் மழை பெய்து பஞ்சம் நீங்கியதால் இவருக்கு நாரதர் என்ற
பெயர் சூட்டினார்கள். நாரம் என்றால் ஜலம் என்ற பொருள். நாரதன் என்றால் ஜலத்தைக்
கொடுத்தவன் என்று பொருள். நாரதர் ஐந்து வயது பாலகனாய் இருந்த போது அந்தணர்கள் பலர்
வந்தனர் அப்போது ஆயன் கலாவதி தம்பதிகள் அதிதி பூஜை செய்தனர். அதன் எஞ்சிய உணவை நாரதன்
உட்கொண்டதாலும், அவர்கள் உபதேசித்த விஷ்ணு மந்திரப் ப்ரயோகத்தாலும் பழைய நாராயண
பக்தி மேலிட அவர்களுடன் கானகம் சென்றார்.
No comments:
Post a Comment