"த்வாபரே ஸமனுப்ராப்தே த்ருதீயே யுகபர்ய்யே
ஜாத: பராஸராத் யோகீ வாஸவ்யாம் கலயா ஹரே:"
ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 4 ஸ்லோகம் 14
ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 4 ஸ்லோகம் 14
-----------------------------------------------------------------------------------------------------------
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியவதி மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார். இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டன் சாந்தனுவின் இரண்டாவது மனைவி. வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவருமான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய். மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா.
உபரிசரன் ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது தன் மனைவியோடு இன்பமாக இருப்பது போல் நினைத்துக்கொள்ள உடனே அவரிடமிருந்து விந்து வெளிபட்டுவிடவே அதை வீணாக்க மனம் இன்றி ஓர் இலையில் விட்டு ஒரு கிளியிடம் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கக் கேட்டுக் கொள்ள, அதை எடுத்துக் கொண்டு கிளி பறந்த போது கிளியை ஒரு பருந்து தாக்கிவிட, இலையிலிருந்த விந்து கடலில் விழுந்து விட, அதை ஒரு மீன் உண்டு விடுகிறது. அந்த மீன் பிரம்மாவின் சாபத்தால் மனித குழந்தைகளைப் பெறும் வரை மீனாக இருந்த அப்ஸர கன்னிகையாகும்.
சில நாட்களுக்குப் பின் செம்படவ மீனவர்கள் அந்த மீனை பிடித்தபோது அதன் வயிற்றில் ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக் கொண்டு பெண் குழந்தையை மீனவர்கள் வசம் வளர்க்க கூறிவிட்டார். அந்த மீனவத்தலைவன் சத்தியவதி என்றே அழைத்து வந்தான். அவளிடமிருந்து மீன் வாடை வீசியதால் மத்ஸ்யகந்தா எனப் பெயரிட்டு கிண்டலாக கொஞ்சுவான்.
மத்ஸ்யகந்தா கங்கையின் இக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு படகில் மக்களை ஏற்றியும், எதிர்கரையிலிருப்பவர்களை இக்கரைக்கும் ஏற்றிச் செல்வாள். ஒரு நாள் படகில் முனிவர் பராசரர் பயணம் செய்தார். பாதி பயணத்தின் போது சத்தியவதியின் மீது மோகம் கொண்டு படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி யாரும் அறியாமல் தாயாகிப் பின்னர் கன்னியும் ஆகி விடுவாய் என்றும் அவளிடமுள்ள மீன் வாடையும் போகுமென்றும் உறுதியளித்தார். சத்தியவதி உடன்படவே அவரது தந்திரவலிமையால் படகு எதிர்கரையை அடையும் முன் மத்ஸயகந்தா தாயாகியும், பின் கன்னியும் ஆனாள். படகு பயணத்தின் போது மத்ஸ்யகந்தாவுக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவரே கிருஷ்ண த்வைபாயனன் என்ற வியாசர் ஆவார். இவரை சத்தியவதி யமுனை ஆற்றின் ஒரு தீவில் பெற்றெடுத்தார். பின்னாளில் இவரே மகாபாரதத்தை எழுதினார். இச்சம்பவத்திற்குப் பின் மத்ஸ்யகந்தாவின் புதிய வாசனை மிகுந்த உடல் அத்தினாபுரத்தின் அரசரான சாந்தனுவை ஈர்த்தது. சத்தியவதியை மணந்துகொள்ள விரும்பினார். மணம் செய்துகொண்டால் தனது பிள்ளைகள் நாடாள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சத்தியவதி சந்தனுவை மணம் செய்துகொண்டார். சித்திராங்தனும், விசித்திரவீரியனும் இவர்களுடைய மகன்கள் ஆவர்.
No comments:
Post a Comment