யோகீஸ்வரென்று
போற்றப்படும் ஸ்ரீபர்த்ருஹரி மஹாகவி ஸுபாஷித த்ரிஸதி என்ற முன்னூறு ஸ்லோகங்களில்
நீதி ஸதகம், ஸ்ருங்கார ஸதகம், வைராக்ய ஸதகம் என்ற மூன்று பிரிவின் கீழ் ஸுபாஷிதம்
மூலமாக ஜன ஸமூஹத்திற்கு செய்துள்ள ஸன்மார்க்க
உபதேசங்களை இந்த பதிவின் மூலமாக அளிக்க உள்ளேன். இது ஸம்ஸ்க்ருத பாஷா
பரிச்சயம் அற்றவர்களுக்கும், பாஷையை கற்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன் பெற
அளிக்க உள்ளேன். 1949வது வருடம் பிப்ரவரி மாதம் திரு.கல்யாணஸுந்தரம் ஸ்ரீ ஜனார்தன
ப்ரிண்டிங் ஒர்க்ஸ் மூலமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். மிகவும் அரிதான புத்தகம்.
அந்தப் புத்தகம் விற்பனையில் இல்லை. அந்த புத்தகத்தின் ப்ரதியினை “COPY RIGHTS“ காரணத்தினால்
வலைத்தளத்தில் போட இயலாது. ஆகையால் ஸமஸ்க்ருத ஸ்லோகம் அதன் தமிழ் உரையை எனது
கணினியில் பதிவு செய்து, அதனை இந்த வலைத் தளத்தின் மூலம் அளிக்க உள்ளேன்.
ஸன்மார்க்க
நெறியை சிக்ஷித்துக் கொடுக்க வந்த இந்த காவ்யத்தில் வித்வான், மூர்க்கன், ஸஜ்ஜனம்,துர்ஜனம்,
பரோபகாரம், வைராக்கிய மஹிமை, காம-மஹிமை,சிவபக்தி போன்ற பற்பல் விஷயங்களைப் போல “ஸ்ருங்கார”
விஷயத்தைப் பற்றியும் கவி ப்ரஸ்தாபித்துள்ளார். இது தவறு, ஸ்ருங்காரம் என்றால்
ஸன்மார்க்கம் குறைவு என்று நினைக்கலாகது என்கிறார்கள் நமது பெரியவர்கள். தர்ம,
அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்குவித புருஷார்த்தங்களில், காமமும் மனித ஸமூஹத்திற்கு
தர்மமாக நமது மதம் அங்கீகரித்துள்ளது. சாஸ்திரத்திற்கு விருத்தமில்லாத காம
புருஷார்த்தத்தை ஸகல் க்ருஹஸ்தர்கலும் அனுபவிக்க நமது சாஸ்திரம்
அனுமதியளித்துள்ளது. ஏக தார வ்ருதத்துடன் சாஸ்திர நியமங்களுக்குள் சிருங்கார
ரஸானுபவத்தை பர்த்ருஹரியின் வர்ணனையிலிருந்து அறியவேண்டும். ஸ்ருங்கார ரஸானுபவம்
செயத பிறகே, அதில் வெறுப்புத் தோன்றி ஸாஸ்வத வைராக்யம் ஏற்பட ஹேதுவாகும் என்பதால்
வைராக்ய மஹிமையையும் வரிசைப்படுத்திக் கூறியுள்ளார். “ஹரி காரிகை” என்ற தர்க்க
வியாகரணாதி விஷயங்களைப் பற்றியும் ப்ரஸித்தமான சாஸ்திரம் இவரால் எழுதப்பட்டது என்ற
ஒரு கூற்றும் உண்டு. இவர் ஒரு மஹா சிவபக்தர். “மஹேஸரனிடமும், ஜகந்நாதனிடமும்
உண்மையில் பேதமில்லை என்று நாம் நம்பியபோதும், “பரமசிவனித்தினிலே எனது பக்தி
இயற்கையாக உள்ளது” என்கிறார் கவி பர்த்துஹரி.
दिक्कालाद्यनवच्छिन्नानन्तचिन्मात्रमूर्तये ।
स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे
॥ १.१ ॥
दिक् திக் काल மூன்று
காலம் முதலியவைகளாலும் अनवच्छिन அளவிடப்படாததும்
चिन्मात्रमूर्तये ஆனந்தஸ்வரூபியும்
स्वानुभूति தனது அனுபவமாகிற एकमानाय
ஒரே ப்ரமாணத்தைக் கொண்டதும் शान्ताय
அமைதியாய் இருப்பதுமான तेजसे தேஜஸ்ஸைப்பொருட்டு
नमः நமஸ்காரம்.
.............அடுத்த பதிவில் நாம் மேலும் ஆராயலாம்
No comments:
Post a Comment