பர்த்துஹரி மூர்கர்களைப் பற்றி பத்து பாடல்களில் அருமையாக தொகுத்துள்ளார். அப்பாடல்களையும் அதன் பொழிப்புரையையும் இங்கு காண்போம்.
Criticism About Fools (moorkhanindaa)
बोद्धारो मत्सरग्रस्ताः प्रभवः
स्मयदूषिताः ।
अबोधोपहताः चान्ये जीर्णमङ्गे
सुभाषितम् ॥ १.२ ॥
அறிவுள்ளவர்கள்
பொறாமையாலும், பணக்காரர்கள் கர்வத்தினாலும் தோஷமுள்ளவர்களாகி மற்றவர்கள்
அக்ஞானத்தினால் ஆக்ரமிக்கப்பட்டு நன் மொழியானது சரீரத்திற்குள்ளேயே
மறைந்துவிடுகிறது.
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते
विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि
तं नरं न रञ्जयति ॥ १.३ ॥
அறிவில்லாதவனை
ஸுலபமாக த்ருப்திசெய்யப்படக்கூடியவன். நல்ல அறிவாளியும் ஸுலபமா த்ருப்திசெய்யலாம்.
ஆனால் அற்ப ஞானத்தினால் துர்புத்திகொண்டவனை ப்ருஹ்மதேவனாலும் கூட த்ருப்தி
செய்துவைக்க முடியாதவன்.
प्रसह्य
मणिमुद्धरेन्मकरवक्त्रदंष्ट्रान्तरात्
समुद्रमपि
सन्तरेत्प्रचलदूर्मिमालाकुलम् ।
भुजङ्गमपि कोपितं शिरसि
पुष्पवद्धारयेत्
न तु
प्रतिनिविष्टमूऋखजनचित्तमाराधयेत् ॥ १.४ ॥
முதலையின் வாய்பல் இடுக்கிலிருந்து ரத்னத்தை பலாத்காரமாக எடுக்கலாம். அலைகள் வேகமாக அடித்து கொந்தளிக்கும் கடலையையும் கடந்துவிடலாம். கோபமாய் உள்ள பாம்பையும் தலையில் புஷ்பம் போல் தரிக்கலாம். துர்ஜன மூர்க மனிதனின் சித்தத்தை என்றுமே த்ருப்தி செய்யமுடியாது.
लभेत
सिकतासु तैलमपि यत्नतः पीडयन्पिबेच्च
मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।
क्वचिदपि पर्यटन् शशविषाणमासादयेत्
तु प्रतिनिविष्टमूर्खचित्तमाराधयेत्
॥ १.५ ॥
மிகவும்
ப்ரயாசைப்பட்டு மணலை அரைத்து தைலம் அடையலாம். தாகத்தினால் பீடித்தவன் ஒரு சமயம்
கானல் நீரோட்டத்தினிலிருந்தும் கூட ஜலத்தைக் குடிக்கலாம். அலைந்து சுற்றி முயல்
கொம்பைக் கூட அடையலாம். ஆனால் துராக்ரஹம் பிடித்த மூர்க்கனின் சித்தத்தை
எப்பொழுதும் த்ருப்தி செய்ய முடியாது.
व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं
समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं
शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं
क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान् पथि सतां
सूक्तैः सुधास्यन्दिभिः ॥ १.६ ॥
எந்த
மனிதன் முட்டாள்களை அம்ருதப் பெருக்குள்ள வார்த்தைகளால் மிகவும் வாஞ்சையுடன்
விரும்புகிறானோ அந்த மனிதன், இளம் தாமரைத்தண்டு நூல்களால் துஷ்ட யானையை
கட்டுவதற்கு முயற்சித்தவன் ஆகிறான். வஜ்ர மணியை வாகைப் புஷ்பத்தின் நுனியால்
பிளப்பதற்கு முயற்சி செய்தவனாகிறான். உப்பு ஸமுத்திரத்தில் தேன் சொட்டினால்
தித்திப்பை உண்டு பண்ண இச்சிப்பவனாகிறான்.
स्वायत्तमेकान्तगुणं विधात्रा विनिर्मितं
छादनमज्ञतायाः ।
विशेषाअतः सर्वविदां समाजे विभूषणं
मौनमपण्डितानाम् ॥ १.७ ॥
மூடர்களுடைய
அறியாமையை மூடிவைப்பதற்கே ப்ரும்மதேவன் பெருமைபொருந்திய மௌனத்தைப் படைத்துள்ளான்.
ஆகையால் அன்னார் மடமையை மறைத்துக் காப்பது சாலச் சிறந்தது. ஆதலால் மூடர்களனைவரும்
எல்லாமறிந்த பண்டிதர்களுடைய சபையில் வாய்திருவாது மௌனமாய் இருத்தல் நல்லது. அதுவே
அவர்களுக்கு ஆபரணமாகும். இல்லாவிடில் அவர்கள் பரிஹாஸத்துக்கு பாத்திரமாவார்கள்.
यदा किञ्चिज्ज्ञोऽहं द्विप इव
मदान्धः समभवं
तदा सर्वज्ञोऽस्मीत्यभवदवलिप्तं मम
मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खोऽस्मीति ज्वर इव मदो मे
व्यपगतः ॥ १.८ ॥
சிற்றறிவுடைய
நான், அற்ப அறிவைப்பெற்றதுமே மதயானைப் போல் இறுமாந்து நான் எல்லாம் அறிந்தவன்
என்று எண்ணி மிகுந்த கர்வத்துடன் இருந்தேன். பிறகு சிறந்த வித்வாங்களுடைய
சங்கமத்தினால் நிறைந்த அறிவை சிறிது சிறிதாகப் பெற்று மூர்கனாகியா நான் முழுமூடனாய்
இருந்ததை உணர்ந்து, பாகனிடும் நல் மருந்தால் மதம் ஒழிந்து அடங்கி நிற்கும்
யானையைப் போலும், மருந்தால் ஜுரம் ஒழிந்தது போல் கர்வம் ஒழிந்தும், நின்றேன்.
कृमिकुलचित्तं लालाक्लिन्नं
विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि
निरामिषम् ।
सुरपतिमपि श्वा पार्श्वस्थं विलोक्य
न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः
परिग्रहफल्गुताम् ॥ १.९ ॥
புழுநிறம்பி,
ஊனீரில் நனைந்து, துர்நாற்றம் மிகுந்து, மாம்ஸமற்று அருவருக்கதக்கதான கழுதை
எலும்பை, ஒப்பற்ற இன்சுவையுள்ளதெனக் கருதி, அதிக ஆவலுடன் கழுத்தை நீட்டி கடிக்கும்
நாய், தேவேந்திரனே அருகில் வந்து நின்றாலும் அவனை ஒரு பொருளாக மதியாது. அதைப் போல்
மூர்க்கனும், வெட்கமும் அச்சமுமின்றி நிந்திக்கத்தகும் செயல்களைச் செய்வர். உலக
நிந்தனையக் கண்டு அஞ்சாத மூர்கன் எத்தகையதான இழிவான கார்யங்களையும் செய்வான்.
அதுபொழுது தன் அருகில் உள்ள உயர்வு தாழ்வினை அறியாதார்.
शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः
क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिमवनेश्चापि
जलधिम् ।
अधोऽधो गङ्गेयं पदमुपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः
शतमुखः ॥ १.१० ॥
ஸ்வர்கத்திலிருந்த
கங்கைநதி சிவன் முடியை அடைந்து, அங்கிருந்து நேராய் இமயமலைக்கு வந்து, பிறகு
உயர்ந்த அம்மலையிலிருந்து, பூலோகத்துக்கு வந்து, பின் கடலை அடைந்து, அதிலிருந்து
பாதாளத்திற்குப் பாய்ந்து கீழ்நிலையை அடைந்தது. அவ்வாறே விவேவகம் கெட்டவன், நிலைதவறியவன்
கீழ்மையுறுவான். என்றும் பலவிதமான துன்பங்களை அடைவான் என்பதை உணரலாம்.
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण
सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो
दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च
विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधमस्ति शास्त्रविहितं
मूर्खस्य नस्त्यौषधिम् ॥ १.११ ॥
கொழுந்துவிட்டு எறியும் தீயை நீரால் அணைக்கலாம். சூரியனது
வெய்யிலை முறத்தால் மறைக்கலாம். மதயானையைக் கூரிய மாவெட்டியால் அடக்கலாம். எருது,
கழுதை முதலியவற்றை தடியால் தடுக்கலாம். கொடிய நோயை மருந்தால் ஒழிக்கலாம். ஆகையால்
எல்லாவற்றிற்கும் சாஸ்திரத்தில் மருந்து அல்லது மாற்று உண்டு. இவ்வாறு
ஒவ்வொன்றிற்கும் பரிகாரம் தேட வகையுள்ளது. ஆனால் அற்ப அறிவுள்ள மூர்க்கனை
சீர்படுத்த எந்த சாஸ்திரத்திலும் மருந்து அல்லது கருவி அல்லது பரிஹாரம் இல்லை.
No comments:
Post a Comment