श्रीभर्तृहरियोगीन्द्रविरचिता विद्वत्पद्धति:
शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः
शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य
प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं
विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो
यैरर्घतः पातिताः ॥
சாஸ்திரங்களால்
அலங்கரிக்கப்பட்டவைகளும், வியாகரண சாஸ்திரத்தால் மனோஹரமாயுள்ள சொற்களை
உடையவர்களும்,
சாஸ்திரங்கள்
அனைத்தையும் சிஷ்யர்களுக்கு வ்யாக்யான ரூபமாய்க் கொடுக்கத்தக்க
சாஸ்திரங்களையுடையவர்களும்,
நன்மாணாக்கர்களுக்கு
நயமாகக் கற்பிக்கவல்லோரும்
எங்கும்
புகழ் பெற்ற வித்வான்கள் ஆவார்கள்.
அரசன்
இத்தகைய வித்வான்களின் வறுமையைப் போக்கி பெருமையை உண்டாக்கி ஆதரிக்கவேண்டும்.
அதனால் அவர்கள் திறமைக்கு ஒருபோதும் குறை ஏற்படாது.
சிறந்த
கல்விச் செல்வத்தை பெற்றுள்ள வித்வான்கள் நீர்க்குமிழி போன்ற பொருட் செல்வத்தைப்
பெறாவிடினும் பூஜிக்கத்தக்கவர்கள். ரத்னத்தின் மதிப்பறியாத வணிகன் அதைக் குறைவாக
மதிப்பானாயின் அது அவனது அறியாமையேயன்றி அந்த ரத்னத்திற்கு குறைவருமோ?
हर्तुर्याति न गोचरं किमपि शं
पुष्णाति यत्सर्वदाऽप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानमनिशं
प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं
विद्याख्यमन्तर्धनं
येषां तान् प्रति मानमुज्झत नृपाः
कस्तैः सह स्पर्धते ॥
கல்விப்பொருளுக்கும்
செல்வப்பொருளுக்கும் மிகுந்த வித்யாசங்கள் உண்டு.
1.செல்வம்
கள்வரால் கவரப்படும். கல்வி களவுபோகாதது
2.செல்வம்
துன்பத்தைக் கொடுக்கும். கல்வி பேரின்பத்தைத் தரும்
3.செல்வம்
அள்ளிக் கொடுக்க குறையும். கல்வி குறையாமல் வளரும்.
4.செல்வம்
வெள்ளத்தால் அழியும். கல்வி என்றும் அழியாது.
வித்வான்களுக்கு
கல்வி கல்பகவ்ருக்ஷம் போன்றது.
அரசர்களும்
தனிகர்களும் இவர்களுக்கு ஒப்பாகாதார். இவர்கள் வித்வான்களை ஆதரித்தல் வேண்டும்.
விவேகமுள்ள எந்த அரசனோ ப்ரபுவோ, தனிகனோ வித்வான்களை பகைத்துக் கொள்ளமாட்டான்.
अधिगतपरमार्थान् पण्डितान्मावमंस्थास्
तृणमिव लघु लक्ष्मीर्नैव तान् संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥
ஒ
அரசே! சாஸ்திரங்களின் உண்மைப்பொருள்களை அறிந்துள்ள பண்டிதர்களை உனது செல்வச்
செருக்கால் அவமதிக்காதே. மதம் பொழியும் யானையை நுண்ணிய தாமரை நூலால் கட்டுவது
எங்ஙனம் கூடும்? அதுபோல் அழிவற்ற கல்விச் செல்வதைப் பெற்ற வித்வான்களை நிலையற்ற
புல்போன்ற செல்வம் கட்டுப்படுத்தாது. புலவர்களைப் பகைத்துக் கொள்பவனது வாழ்க்கை மிருகவாழ்க்கைக்கு
ஒப்பானது.
अम्भोजिनीवनविहारविलासमेव हंसस्य
हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां वैदग्धीकीर्तिमपहर्तुमसौ
समर्थः ॥
பிரும்ம
தேவன் அன்னப்பறவையின் மீது கோபம் ஏற்படின் அது களித்து விளையாடும் தாமரை ஓடையின்
நீரை வற்றச் செய்து அது அங்கு விளையாடமுடியாமல் செய்யாலாம். ஆனால் அதனிடம்
இயற்கையாக உள்ள தன்மையான பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை அகற்ற அவரால்
முடியாது. (அது போல் பிரபுக்கள் அரசர்கள் செல்வச் செருக்காலோ, துர்மந்திரிகள்
உபதேசத்தாலோ குற்றமற்ற வித்வான்களிடம் கோபம் கொண்டு கெடுதல் செய்வது
மூடத்தனமாகும்)
केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं
नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या
संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं
वाग्भूषणं भूषणम् ॥
மனிதன்
வளைகள் அணிவதாலோ, சந்திரன் போல் ப்ரகாசிக்கும் முத்து ஹாரங்களாலோ, ஸ்நானம்
செய்வதாலோ, சந்தனம் பூசிக்கொள்வதாலோ, புஷ்பம் தரிப்பதாலோ, தலைமுடியை வாரி
அலங்கரிப்பதாலோ தன்னை அழகுபடுத்திக் கொள்ளமுடியாது. எந்த வித்தை நல்ல
பரிசுத்தமடைந்ததாக தரிக்கப்படுகிறதோ அந்த வித்தை தான் மனிதனை அலங்கரிக்கச்
செய்கிறது. மற்ற எல்லா அலங்காரங்களும் நசித்துப் போகின்றன. வித்தையுள்ள வாக்குதான்
ஸாஸ்வதமான அலங்காரமாகும்
विद्या नाम नरस्य रूपमधिकं
प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या
गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या
परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं
विद्याविहीनः पशुः ॥ १.२० ॥
வித்தை
என்பது மனிதனுக்கு மிகுந்த அழகாகும். மறைவாகவும் நன்கு காக்கப்பட்டதுமான
செல்வமாகும். வித்தை என்பது ஐஸ்வர்கங்களைக் கொடுக்கக் கூடியது. கீர்த்தியையும்
சுகத்தையும் கொடுக்கக் கூடியது. குருவிற்கே குருவாகும். வெளியூர் செல்லுகையில்
பந்துஜனம் போன்றது. உயர்ந்த தேவதையாக பூஜிக்கவல்லது. அரசர்களிடமும் வித்தைதான்
கொண்டாடப்படுகிறது. செல்வமல்ல. ஆதலால் வித்தை இல்லாதவன் மிருகமே.
क्षान्तिश्चेत्कवचेन किं किमरिभिः क्रोधोऽस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किमु धनैर्विद्याऽनवद्या यदि
व्रीडा चेत्किमु भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥
மனிதனுக்கு
பொறுமை இருந்தால் ஆயுதங்களிலிருந்து காக்க கவசம் எதற்கு; மனிதனுக்கு கோபம்
இருந்தால் வேறு பகைவன் எதற்கு; ஒருவனுக்கு தாயாதிகள் இருந்தால் நெருப்பு எதற்கு;
துர்ஜனங்கள் அருகில் இருந்தால் பாம்பு எதற்கு; குற்றமற்ற வித்தை என்பது இருந்தால்
செல்வத்தினால் என்ன சௌகர்யம்; லஜ்ஜை என்பது இருந்தால் அலங்காரத்தினால் பயன் என்ன;
உயர்ந்த கவிதா சக்தி என்பது இருந்தால் ராஜ்யத்தினால் என்ன பயன்? அரசனது செங்கோன்மை
குடிமக்களையும் வசப்படுத்துவது போல் சிறந்த கவி தனது புலமையால் எல்லோரையும்
வசப்படுத்தலாம்.
दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं
सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने
विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने
कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु
कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥
நம்மைச்
சார்ந்தவர்களிடம் வலிந்து தலையிட்டு பரிந்து இருப்பது; நமது வேலைக் காரர்களிடம் கருணையுடன்
இருத்தல்; தீயவர்களிடம் எப்பொழுதும் தந்திரமுடன் இருப்பது; நல்லோர்களிடம் அன்பாக
இருத்தல்; அரசனிடத்தில் கவனத்துடன் இருத்தல்; வித்வான்களிடம் நேர்மையாக நடத்தல்; சத்ருக்களிடம்
துணிவுடன் இருப்பது; பெரியவர்கள் / குருவினடம் பொறுமையாக இருத்தல்; மனைவியைச் சார்ந்தவர்களிடம்
கண்டிப்பாக இருத்தல் இவ்வாறு எந்த மனிதர்கள் மேற்சொல்லப்பட்ட கலைகளில் தேர்ச்சிபெற்றவர்களாக
இருக்கிறார்களோ அவர்களிடத்தில் தான் இந்த லோகம் நிலைபெற்றுள்ளது.
जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं मानोन्नतिं
दिशति पापमपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं सत्सङ्गतिः
कथय किं न करोति पुंसाम् ॥
மனிதர்களுக்கு
நல்லவர்களின் ஸஹவாசம் எதைத்தான் செய்யாது. சொல் புத்தியின் மந்தத்தை போக்கும்;
வாக்கில் ஸத்யத்தை ஊற்றுவிக்கும்; உயர்ந்த கௌரவத்தை கொடுக்கும்; பாபத்தை
போக்கடிக்கும்; மனதை தெளிவாக்கும். நான்கு திசைகளிலும் கீர்த்தியை பரவச் செய்யும்.
साहित्यसङ्गीतकलाविहीनः साक्षात्पशुः
पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस् तद्भागधेयं
परमं पशूनाम् ॥
இலக்கியப்படைப்புகளைப்
பற்றிய அறிவு, சங்கீதத்தின் இன்னிசையைப் பற்றிய ஞானம் போன்றவைகள் இல்லாத மனிதன்
வாலும் கொம்பும் இல்லாத மிருகமாவான். இலை தழைகள் புல்லிற்காக அவைகளுடன்
போட்டியிடமாட்டன் ஆகையால் நல்ல வேளை மிருகங்கள் தப்பின.
येषां न विद्या न तपो न दानं ज्ञानं
न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण
मृगाश्चरन्ति ॥
கல்வி,
தவம், கொடை, ஞானம், நல்ல குணங்கள், தர்ம சிந்தனை இவைகளற்றவன் மனிதரூபத்தில் உள்ள
மிருகமாவான். அவன் இந்த உலகிற்கு ஒரு சுமையாகும்
वरं पर्वतदुर्गेषु भ्रान्तं
वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः सुरेन्द्रभवनेष्वपि ॥
நல்ல
அறிவு இல்லாதவர்களது சமூகம் இந்திர லோகத்திலேயே இருந்தாலும், அதனைவிட அடர்ந்த
காட்டிலோ அல்லது கடினமான மலைப்பகுதியில் உள்ள கொடிய மிருகங்களுடன் இருப்பதே மேல்.
जयन्ति ते सुकृतिनो रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये जरामरणजं भयम् ॥ १.२४ ॥
அதிர்ஷசாலிகளும், கருணாதிரஸங்களில் தேர்ந்தவர்களான அந்த கவிசிரேஷ்டர்கள் உயர்ந்து விளங்குகிறார்கள். அவர்களுடைய கீர்த்தி / புகழ் என்கின்ற உடலிற்கு கிழத்தன்மை, மரணம் என்ற பயமானது கிடையாது.
No comments:
Post a Comment