Monday, December 7, 2009

நீயா நானா


ஆண்கள் பேசும் பத்து பாயிண்ட்ஸ் 
1.நீ சொல்றது மூளை கெட்டதனமாய் இருக்கிறது.
2.உப்புச் சப்பு இல்லாத விஷயத்துக்கு கவலைப் படுகிறே.
3.ஒண்ணுமில்லாததை ஊதிப் பெரிசாக்கரே.
4.நீ சொல்றது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
5.நான் அதைச் சொல்லவே இல்லே.
6.ஆனா அந்த அர்த்தத்திலே சொல்லலே.
7.இது இவ்வளவு பிரச்சனையாக ஆக்கி இருக்கவேண்டாம்.
8.இது நியாயமே இல்லே .
9.ஏன் இதை நாம் அனுபவிக்கவேணும்?
10.பேசாம விவாகரத்து பண்ணிக்கலாம்.


பெண்கள் பேசும் பத்து பாயிண்ட்ஸ் 
1.நான் சொல்றதை காதுலே போட்டுக்கவே மாட்டேங்கறீங்க.
2.என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க.
3.நீங்க எப்படி ….அப்படிச் சொல்லலாம்.
4.நீங்க நெனைச்ச மாதிரி நான் நினைக்கலே 
5.ஒரு பொண்ணோட இடத்துலே இருந்தாதான் என் ப்ரச்சனைய புரிஞ்சிக்க முடியும் 
6.ஒங்க கூட பேசவே பயமா இருக்கு.
7.……….வீட்டுகாரரெல்லாம் எத்தனை வேலையை இழுத்துப் போட்டுண்டு பண்றார்.
8.நீங்க ஏன் பண்ணலை
9.நீங்க அதை என்கிட்டே ஏன் சொல்லலை.
10.உங்ககூட இனிமே என்னாலே குப்பை கொட்ட முடியாது.


உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்கும் ஆண் மூளைக்கு பெண்ணின் ஒவ்வோர் செயலும் கேலிக்கு உரியதாகி விடுகிறது. உணர்வு ரீதியாக எதையும் எதிகொள்ளும் பெண்ணின் மூளைக்கு ஆணும் தன்னைப்போலவே சிந்திப்பான் என்ற எதிர்பார்ப்பும், அதனால் ஏமாற்றமும் மிஞ்சி சண்டையும் பின் விவாகரத்து வரை கொண்டு செல்லும் விளைவும் ஏற்படுகிறது  உணர்வுகளை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டால் பெண் மனம் அமைதி அடைந்து விடுகிறாள். உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுக்காமல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது ஆணுக்குப் பிடிக்கும். கவலைப் படவும் ஆதங்கப் படவும் உனக்கு உரிமை இருக்கு. மொதல்ல நீ சொன்னதை யோசிச்சுப் பார்கிறேன். அப்புறம் இதைப்பத்தி ரெண்டுபேரும் பேசுவோம். எனக்கு கொஞ்சம் டைம் கொடு. இது போன்ற வார்த்தைகள் பிரச்சனையை எளிதாக்கும். 
கல்கி இதழிற்காக Dr.A.V.ஸ்ரீனிவாசன் கூற அதனை கற்கண்டாக லக்ஷ்மி மோகன் எழுத்தில் கொடுத்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

1 comment:

  1. ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுத்த பத்து POINTS தேவைக்கு ஏற்றாற்போல் பயன் படுத்தலாம்

    ReplyDelete