Friday, December 11, 2009

சங்கீத ஞானம்







தென் இந்தியாவில் எந்த ஒரு கோவிலை எடுத்துக்கொண்டாலும் அங்கு பிரமிக்கத் தக்க வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலையின் திறமையை காட்டுவதற்காக அமைக்கப்பட்டு உள்ளதா அல்லது தெய்வீக ஞானத்தை உள் உணர்த்துகிறதா? இரண்டுமே சரிதான்.  அன்றைய நாளிலிருந்து இன்றுவரை கோவிலின் பின்னணியில் சங்கீதக் கலையின் மூலமாக தெய்வீக ஞானத்தை நமக்கு பெரியவர்கள் உணர்த்தினர். சங்கீதத்தைக் கலையென்று பயிலும் மாந்தர்களுக்கு ஸ்ரீ த்யாகராஜ சுவாமிகள் ஓர் எச்சரிக்கை விடுகிறார்.




ந்யாயான்யாயமு தெலுஸுனு ஜக3முலு
4மாயாமயமனி தெலுஸுனு து3ர்கு3
5காயஜாதி3 ஷட்-ரிபுல 4ஜயிஞ்சு 
கார்யமு தெலுஸுனு4த்யாக3ராஜுனிகி6 (ஸங்கீ3த)
எது செய்ய தகுந்தது, எது தகாது, அநித்தியம் எது, நித்யம் எது, மாயை எது, மாயை அகல வழி எது, ஆறு சத்ருக்களான காம குரோதங்களை ஜெயிக்கும் உபாயம் எது. பகவத் பக்தியே. அதற்கான உபாயம் சங்கீத ஞானமே. பக்தியோடு பாடு என்றார் தியாகராஜ ஸ்வாமி.
தியாகராஜர் அருளிய சங்கீத ஞானத்தை இப்படிப்பருகினாலும் நன்றாகவே உள்ளது.  இந்தச் சுவையை நான் அனுபவித்தேன். நீங்களுமா?









2 comments:

  1. பக்தியுடன் இணைந்த சங்கீதமே பரமனின் வழிபாட்டிற்கு உரியது

    ReplyDelete
  2. Dear Nambi Sir,
    If you hear the whole song, you will forget yourself and enjoy.
    Chingan

    ReplyDelete