எல்லா மொழிக்கும் பல சிறப்புகள் உள்ளன. சொற்களை கையாள்வதிலும், சொற்களின் பதங்களை பிரிப்பதிலும் அர்த்தங்கள் வேறுபடலாம். சில சமயங்களில் அனர்த்தமாகவும் முடியும்.
"வேங்கடநாதனை வேதாந்த கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கட மென்றே விரகறியாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறியாரே "
திருமூலரின் திருமந்திரத்தில் பத்தாவது திருமறை
மேற் குறிப்பிட்ட பாடலை அப்படியே கையாண்டால் வேங்கடத்தில் உள்ளவர் யார் என்ற கேள்விக் குறியை எழுப்பும். ஆனால் சொல்லைப் பிரித்தால் அதன் உள் அர்த்தம் வெளிப்படும். இந்த திருமந்திரத்தில் உள்ள சொல் "வேங்கடநாதனை" மேலும் "வேங்கடத்துள்ளே" மற்றும் "வேங்கட" என்கின்ற சொற்களை "வெம்" "கடம்" என்று பிரித்தால் இது சிவனை அல்லவா கூறுகிறது.
The human body which is continually scorched by the animal heat is compared to a burning ground where siva is eternally dancing. He is also addressed as “Vedhanta Koottan” that is, reveler in “Vedhantha” and “venkatanaadha”. Those who do not realize the Siva who is continually dancing in their own body are ignorant of the true way of winning Eternal life. (Vem = that which is scorched, gadam=human body).
மனிதனுக்குள் இருக்கும் இச்சை என்கின்ற தீ எரிந்து கொண்டிருக்கும் இடுகாட்டினை ஒத்தது. அங்கு சிவ பெருமான் நடனமாடுவதை இந்த திருமந்திரத்தில் கூறுகிறது. அவரை வேதாந்தக் கூத்தன் என்றும் அழைப்பர். மனிதனின் உள் எரியும் இச்சை என்கின்ற தீயினை அறியாதார் வேதாந்தக் கூத்தனை அறியார். இங்கு வேங்கடம் என்கின்ற சொல்லை "வெம்" "கடம் " என்று பிரித்து அர்த்தம் கொள்ளாவிட்டால், திருவேங்கடம் சர்ச்சைக் குரியதாக மாறிவிடும்
வார்த்தைகள் சேர்ந்திருந்தால் ஒரு அர்த்தம் பிரிக்கப்பட்டால் வேறு அர்த்தம்
ReplyDeleteவாழ்க்கையிலும் சேர்த்திருந்தால் ஒரு விளைவும் பிரிந்திருந்தால் ஒரு விளைவும் ஏற்படுகிறது எனவே விளைவுகளுக்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்
Dear Nambi Sir
ReplyDeleteExcellent wordings. Your response for the blog posts give me more energy and tonic to come out with more such topics.
Thank you
Chingan
arputham chitha,makes us understand that nothing should be taken at face value,but should be put thru a thorough thought process first.
ReplyDelete