வாயுகுமாரனின் வாலில் பொட்டு வைத்து வணங்குவதன் பெருமை என்ன?
அனுமன் சூரியனிடம் சிக்ஷை பெற்று பாடம் கேட்டு வலம் வந்த போது மற்ற க்ரகங்கள் சூரியனையும் அனுமனையும் வலம் வந்தன.
இலங்கையில் ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது சீதாபிராட்டி வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை ஆராதியிங்கள்.
ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ராவணின் கர்வத்தை அடக்கினார்.
பீமன் திரௌபதிக்காக சௌகந்திமலர் கொண்டுவர சென்ற போது அனுமன் பீமனின் கர்வத்தை தன் வாலின் மூலம் உணர்த்தி அவன் வீரம் பெருக ஆசீர்வதித்தார்.
அனுமனின் பெருமை அவரது வாலைப் போலே நீண்டுள்ளது.
இந்தப் பெருமைகள் பக்தியில் நான் பக்தியோடு படித்தது.
அனுமனின் வாலிற்கு மேலும் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. நீங்களும் இதனுடன் சேர்க்கலாம்.
இதுவரை ஹனுமானின் வாலின் பெருமையை அறியாதிருந்தோம் இதன் மூலம் தெரிந்துகொண்டோம்
ReplyDelete