Thursday, May 31, 2012

Shakespeare the 2012

வலையில் சிக்கிய ஒரு விஷமத்தனமான விவரம். 
இதனை அனுப்பிய அன்பர் மிகவும் ரசித்துள்ளார். 
நானும்........ நீங்கள் எப்படியோ ?
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னாநீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்னாள்.
என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு ரெண்டு வாய் தின்னுட்டு, பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடிஆபிசுக்குப் போறீங்க!
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டுஎருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க, கோட்டான் மாதிரி முழிக்காதீங்கபோங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!



Thursday, May 17, 2012

Well seen and well said

நெட்டில் சுட்டது



Out of Clutter find simplicity
From discord find harmony
In the middle of difficulty lies opportunity

Every Day may not be good but 
there is something good in every day.

It is crazy how you can do nice things for people 
all the time and they never notice. 
But once you make one mistake 
it has never been forgotten.

Imagination is more important 
than knowledge

I have no special talents. 
I am only passionately curious. 

Nivedhanam - Jevibasagunaa Sakyaa Hari


எங்களது குருநாதருக்கு பிடித்த மற்றுமொரு பாடல். கானடா ராகத்தில் பாடச்சொல்லி எங்களை ஊக்கிவித்து பாடப்பட்ட பாடல். இப்பாடலை எங்களது குருநாதருக்கு நிவேதனம் செய்கிறோம்.
நிவேதனம்
ஜேவீபா ஸகுணா ஸக்யா ஹரி
ஜேவீபா ஸகுணா ஸக்யா ஹரி
காலவிலேம் தஹி பாத ஆலேம்மிரீம்
மேளவிலே லவணா ஸக்யா ஹரி
ராஹே துதாவரீ ராயபுரீபரி
கானவலா சிமணா ஸக்யா ஹரி
உத்தவ சித்கன ஸேஷ துஜேம்தே
ருக்மிண்யாச்யாரமணா ஸக்யா ஹரி
 கேசவா மாதவா கோவிந்தா கோபாலா
ஜேவீதூம் க்ருபாளா பாண்டுரங்க பாண்டுரங்க
அச்சுதாவாமனா தஸரத நந்தனா
ஜேவீதூம் க்ருஷ்ண பாண்டுரங்க பாண்டுரங்க
க்ருஷ்ண விஷ்ணோ ஹரி முகுந்த முரஹரீ
ஜேவீதூம் நரஹரி பாண்டுரங்க பாண்டுரங்க
ஐஸீக்லானி கரிதாம் விட்டல பாவலா
நைவேத்ய ஜேவிலா நாமயாசா ஹரி ஹரி

Wednesday, May 16, 2012

We do mistake and also comment


நான் மின்வலையில் படித்த நம்மை நாமே அறியும் ஒரு கணிப்பு”. நான் பல முறை எனக்கே அறிவுரை சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு தவறை மற்றவரிடம் கண்டு அதனை ஆராய்ச்சி செய்தால் அந்த தவறினை நான் அதனை வர இருக்கும் நாட்களில் செய்யப்போகிறேன் என்று உணர்வதுண்டு. எனது ஒரு உறவினர் மூக்குக்கண்ணாடி அணிவதில் சில குறைபாடுகளைக் காண்பேன். படிப்பதற்காக மூக்குக்கண்ணாடியை மேலே கீழே நகர்த்தி அடிக்கடி செய்யும் இப்பழக்கத்தை குறை கூறியுள்ளேன். கண்ணாடியின் லென்ஸ் சரியாக அமையாத்தால் இப்பொழுது அதே தவறினை நானும் செய்கிறேன். ஆனால் நான் செய்யும் பொழுது அதற்கு காரணம் விளக்கங்கள் என்று பலதரப்பட்ட விஷயஙகளைக் கூறுகின்றேன். என்னை நானே சரி செய்துகொள்ள முயற்சிக்கிறேன். நீங்கள் எப்படியோ ? இதோ வலையில் தேடிய விளக்கங்கள்.
You display the same behavior and aren’t aware of it so you project your disowned behavior onto others and dislike it “out there.”
Everyone has encountered the second cause at some point. Someone is complaining about a friend or acquaintance and you think to yourself, “That’s funny, they do the same thing they are finding wrong!Taking an honest look within to see if you share some of the characteristics you dislike in others. You may be surprised to learn that you do, and it is likely to offer insight into gaining greater self-acceptance and compassion for others.

Friday, May 11, 2012

Thulasi Dass - Vinay Patrika

எங்களது குருநாதருக்குப் பிடித்த இந்த மற்றுமொரு பாடல் ”வினய பத்ரிகா” என்ற தொகுப்பில் உள்ளது. போட்டோ கரோபாட்டு பாடு என்று வேடிக்கையாகச் சொல்லி பாடச் சொல்வார்கள். இந்தப் பாடல் 1970-72ல் நான் விவித பாரதியில் காலை மலரில் கேட்டு எங்களது நாம ஸங்கீர்த்தனத்தில் பாடியது. இந்தப் பாடலை எங்களது பஜனைக் குழுவில் ஸ்ரீதரன் அவர்களும், துரையா அவர்களும் மிகவும் விரும்பிக் கேட்டு பல முறை பாடிய பாடல். 

खोटो खरो रावरो हों  रावरे सों रावरे सों
झूठ क्यों  कहोंगो जानौ सबहीके मनकी
करम वचन हिये कहों न कपट किये
ऐसी हटि जैसी गाँठी पानी परे सनकी
दूसरो भरोसो नाहिं बासना उपासनाको
बासव बिरंचि सुर नर मुनि गनकी
स्वारथके साथी मेरे हाथी स्वान लेवा देई
काहू को न पीर रघुबीर दीनजनकी
साँप सभा साबर लबार भैये देव दिव्य दुसह
साँसति कीजै आगे ही या तनकी
साँचो परों पाॐ पान पंचनमे पन प्रमान
तुलसी चातक आस राम स्याम घनकी

Monday, May 7, 2012

Dhooth piyo mere govinda laala


ஐம்பது வருடங்களுக்கு மேல் சனிக்கிழமை தோறும் நடக்கும் ஸம்ப்ரதாய பஜனையில் எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாரயண ஐய்யங்கார் அவர்கள் பாடிய இந்த மஹாராஷ்டிர அபங்கம் அவரது குரலில் கிடைக்காததால் நான் பாடி இங்கு அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

தூதபியோ மேரே கோவிந்தலால
தூதபியோ மேரே மதன கோபால
காலாரே பசுரா கபிலாரே காயீ
தூத தோஹாவன நாமாஜாயீ
ஸோனேகா கச்சுவா தூதஸே பரியோ
பியோ நாராயண ஆகே தரியோ
பாஷாணகீ மூரத தூத நஹீம் பீவத
ஸீரபசாண்ட்த நாமாரோவே
ஐஸாபகத மைம் கஹீம் நஹீம்பாயோ
நாமதேவநே தூத பிலாயோ

Saturday, May 5, 2012

Cherish Those Golden Days



“Your legs and feet have yet to walk,
Your hands have not yet toiled,
Your mind is not yet aware of all the trouble in this world,
And your heart has not yet been broken,
Sleep, little one, sleep while you can,
Cherish these days, little one, for they will not last long,
- courtesy my brethren blog writer 


மஹாராஷ்டிர பஜன் என்றால் ஸ்வாமி ஹரிதாஸ் கிரி தொடங்கி, விட்டல் தாஸ் மஹராஜ் வரை பலரைச் சொல்வர். அதே போல் கர்நாடக சங்கீதத்தில் MSS, MLV என்று பட்டியலில், பலரைத் தொடங்கி இன்றைய தலைமுறையில் பலரைச் சொல்வர். இதற்கான  வித்தினை விதைத்தவர் திரு நாராயண      சாஸ்த்ரி அவர்கள், பாண்டுரங்க பஜனை மடத்தில் 1960-1965 வருடங்களில் நிகழ்த்திய அவரது புத்தகப் பதிப்பு மற்றும் அவர் பாடல்களைப் பாடிய விதம் என்பன போன்ற   பல நிகழ்வுகள், புகைப் படங்கள் பார்ப்பது போல் என் மனத்திரையில் ஒவ்வொன்றாக வருகின்றன.. அவர் அன்றைய நாட்களில் ப்ரபலப்படுத்திய ஒரு பாடல், எனது குருநாதர் திரு நாராயண ஐயங்கார் அவர்கள் மிகவும் ரசித்து பல பஜனைகளில் பாடிய பாடல். 
 பவதாரக ஹ்யா துஜ்யா பாதுகா வந்தின மீ மாதாம் 
கராவீ க்ருபா குரு நாதா

அனிவார ஹேம் மன பஹுமாஜேம் சரணீம் 
ஸ்திர வ்ஹாவேம் தவ பதீம் பஜனீம் லாகாவேம்
காமக்ரோதாதிக ஹே ஷட்ரிபு ஸமூல சேதாவே
ஹேஸி மாகணேம் மலா த்யாவேம் 
அகஹரணா கரீம் கருணா தத்தா 
தாம்வ பாவ ஆதாம் கராவீ
க்ருபா குரு நாதா

தூம்சி ப்ரஹ்மா தூம்சி விஷ்ணு 
தூம்சி உமாகாந்ததூம்சி ஸமஸ்த தைவத
மாதா பிதா ஆணீ இஷ்ட பந்தூ 
தூம்சி ஸகலகோத தூம்சி
மாஜே ஸகல தீர்த்த
துஜவிண மீ கா காம்ஹீம்ச நேணே 
தூம்சி கர்த்தாஹர்த்தா கராவீ
க்ருபா குரு நாதா

தனமன தனஹேம் ஸர்வ அர்புனி 
குரவண்டினகாயா உபேக்ஷும் நகோ குருராயா
கர்மஹீனமீ மதி ஹீனமி ஸகளாம் ச்ரமவாயா 
லஜ்ஜா ராகே குருஸதயா
மாத்ருபாளகா பரி ஸாம்பாளீம் 
தூம்சி முக்தி தாதா கராவீ
க்ருபா குரு நாதா

சேஷ ப்ரம்ஹா வேதா நகளே 
மஹிமா துஜாதோரா காய
வர்ணும்மீ பாமர
வியோகனஸாவா தவசரணாம்சா 
ஹாம்சீவர தேயீம் சீரீம்
டேவீ அபயகர
ஹீசவினந்தி தர்சன த்யாவேம் 
தாஸாஸீ ஆதாம் கராவீ
க்ருபா குரு நாதா




Thursday, May 3, 2012

Gaana Lola Gaoapala

கானலோலா கோபாலா
ஸாயி மனோஹரா கோபாலா
கானலோலா கோபாலா
ஜகதோத்தாரா பர்த்திவிஹாரா
மீராகேப்ரபு கிரிதர பாலா
கானலோலா கோபாலா

Tuesday, May 1, 2012

செயல் ஒன்று பெயர்கள் பலவிதம்

நாம் கோவிலுக்குச் செல்கிறோம். கடவுளை தரிசிக்கிறோம். மனதினை ஒரு நிலைப் படுத்த முயற்சிக்கிறோம். பலர் அதனைச் செய்து பலன் பெறுகிறார்கள். நான் அந்த நிலயை அடைய முயற்சிக்கிறேன். பல சந்தர்பங்களில் நான் அங்கு காணும் காட்சி அதனை அடைய முடியாமல் செய்துவிடுகிறது.

ஒரு பெரியவர் கோவில் ப்ராகரத்தில் உட்கார்ந்துகொண்டு பிச்சை எடுக்கிறார். அவரது கால் ஊனமாய் உள்ளது. 75 வயதை தாண்டியவர். அந்த கோவிலில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தரிசனத்திற்கு வந்த ஒரு ப்ரமுகரை தரிசனம் செய்து வைத்து வாசல் வரை கொண்டு விடுகிறார். அவரும் கை எந்துகிறார். அந்த ப்ரமுகர் அவருக்கு ஒரு அம்பது ரூபாய் கொடுகிறார். அந்த ஊழியர் அந்த பிச்சை எடுக்கும் வயதானவரை திட்டி கொவிலுக்கு வெளியே போகச் சொல்கிறார். அதே ப்ராகரத்தில் ஒரு பெண்மணி மடி பிச்சை எடுக்கிறார். பலர் அந்த பெண்மணியை குறை கூறுகின்றனர். வரிசையில் மக்கள் சென்று கடவுளை தரிசனம் செய்கின்றனர். அங்குள்ள குருக்கள் ஊர் கதை, அரசியல் என்ற பல தரப்பட்ட விஷயஙகளை பேசிக்கொண்டு விபூதி தட்டை காண்பிக்கிறார். தட்டில் விழும் பணத்திற்கு ஏற்ப அல்லது வரும் மனிதரின் தோற்றத்திற்கு ஏற்ப அவர் விபூதியோ, கடவுளுக்கு அளித்த் பூவினையோ அளிக்கிறார்.
இங்கு நான் கண்ட செயல் ஒன்று, பெயர்கள் பலவிதம். கோவில் ஊழியரோ அல்லது குருக்களோ தங்களது வேலைகளை பிறர் ஏளனப்பேச்சிற்கு ஆளாகமல் செய்தால் நாம் ஏன் இவர்களை அந்த பெரியவருடனும் அந்த பெண்மணியுடன் சேர்த்து பேசப்போகிறோம்.