நாம் கோவிலுக்குச் செல்கிறோம். கடவுளை
தரிசிக்கிறோம். மனதினை ஒரு நிலைப் படுத்த முயற்சிக்கிறோம். பலர் அதனைச் செய்து
பலன் பெறுகிறார்கள். நான் அந்த நிலயை அடைய முயற்சிக்கிறேன். பல சந்தர்பங்களில் நான்
அங்கு காணும் காட்சி அதனை அடைய முடியாமல் செய்துவிடுகிறது.
ஒரு பெரியவர் கோவில் ப்ராகரத்தில் உட்கார்ந்துகொண்டு
பிச்சை எடுக்கிறார். அவரது கால் ஊனமாய் உள்ளது. 75 வயதை
தாண்டியவர். அந்த கோவிலில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தரிசனத்திற்கு வந்த ஒரு
ப்ரமுகரை தரிசனம் செய்து வைத்து வாசல் வரை கொண்டு விடுகிறார். அவரும் கை
எந்துகிறார். அந்த ப்ரமுகர் அவருக்கு ஒரு அம்பது ரூபாய் கொடுகிறார். அந்த ஊழியர்
அந்த பிச்சை எடுக்கும் வயதானவரை திட்டி கொவிலுக்கு வெளியே போகச் சொல்கிறார். அதே
ப்ராகரத்தில் ஒரு பெண்மணி மடி பிச்சை எடுக்கிறார். பலர் அந்த பெண்மணியை குறை
கூறுகின்றனர். வரிசையில் மக்கள் சென்று கடவுளை தரிசனம் செய்கின்றனர். அங்குள்ள
குருக்கள் ஊர் கதை, அரசியல் என்ற பல தரப்பட்ட விஷயஙகளை பேசிக்கொண்டு விபூதி தட்டை
காண்பிக்கிறார். தட்டில் விழும் பணத்திற்கு ஏற்ப அல்லது வரும் மனிதரின்
தோற்றத்திற்கு ஏற்ப அவர் விபூதியோ, கடவுளுக்கு அளித்த் பூவினையோ அளிக்கிறார்.
இங்கு நான் கண்ட செயல் ஒன்று, பெயர்கள் பலவிதம்.
கோவில் ஊழியரோ அல்லது குருக்களோ தங்களது வேலைகளை பிறர் ஏளனப்பேச்சிற்கு ஆளாகமல்
செய்தால் நாம் ஏன் இவர்களை அந்த பெரியவருடனும் அந்த பெண்மணியுடன் சேர்த்து
பேசப்போகிறோம்.
This is a powerful message resulting from a committed and deep observation. SanAtana Dharma is the genesis of all good since the advent of Human race and Humanity; But, regrettably, it is denounced in many parts of the world due to ignorance branding it as another "ism" called 'Hinduism'. The greatest detractors of our dharma are not from outside, and the mistaken global perception is thanks to those 95% of the followers who practice it wrong and for wrong reasons; The fitting culmination of your article is the caricature of the 'AshADabhooti Cat praying'.
ReplyDeleteWell merited provocation and great message.
K