Monday, September 27, 2010

ஹரியும் ஹரனும் இவர்க்கும் ஒன்றே ! !


ஸ்ரீகாமகோடி பீடஸ்திதே கருணா கடாக்ஷி
எகாம்ரபதி ஹ்ருதய நிலயே நமாமி ஸ்ரீகாமாக்ஷி
என்ற சாவேரி கீர்த்தனையை திருமதி MSS அவர்கள் பாடியது தேனாய் காதில் பாய்ந்து அது நமது உடல் முழுவதும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இந்தக் க்ருதியினை ஸ்வரத்துடன் நமக்கு அளித்தவர் மைஸுர் ஸதாசிவ ராவ் அவர்கள். அவர் தனது க்ருதிகள் மூலம் பல தெய்வங்களை அழைத்து நம் முன் கொண்டுவருகிறார் இன்றும்; என்றும். த்யாகராஜ ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர் வெங்கடரமண பாகவதர்.
அவரது சிஷ்யர்களில் ஒருவரான இவர் மைஸுர் மகாராஜாவின் சமஸ்தானத்தை அலங்கரித்ததால் இவர் பெயருடன் மைஸுர் சேர்ந்தது. இவரது ஜனனம் சித்தூரை அடுத்த கிரம்பேட் என்ற ஒரு சிற்றூரில். த்யாகராஜ ஸ்வாமியின் முன் கானமழை பொழிந்து அவரது ஆசி பெற்றவர்.
“ஸாம்ராஜ்ய தயகேஷா” என்ற காம்போஜி கிருதியை வீணை சேஷண்ணா, ஸுப்பண்ணாவுக்கு விஸ்தாரமாக அனுபவித்து பாடி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய ஸர்ப்பம அவரது கை வழியாக மேல் ஏறி அவரது தோளில் அமர்ந்து பாட்டிற்கு படம் எடுத்ததைப் பார்த்து இரு சிஷ்யர்களும் பயந்து வெளியே ஓடினார்கள். அந்த ஸர்பம சில நிமிடங்களில் மறைந்து விட்டதை பார்த்த அந்த இருவரும் கஞ்சி ஏகாம்ரேஸரது பரிபூர்ண ஆசி தனது குருநாதருக்கு இருப்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். அவரது நரசிம்ஹரைப் பற்றிய க்ருதியைப் பாடினால், நரசிம்ஹரே துணைப் பிளந்து நம் முன் வருவது போன்ற ஓரு உணர்வைக் கொடுக்கிறது.
மைஸுர் ஸதாசிவராவ் நமது மனதில் எப்பொழுதும் ஹரியயும் ஹரனையும் அவரது க்ருதிகள் மூலம் நிறுத்திவைக்கிறார்.

Sunday, September 26, 2010

கள்வர்களை மயக்கிய கர்நாடக இசை

த்யாகராஜ ஸ்வாமிகள் வீணை குப்பய்யரவர்கள் வேண்டுதல்படி சென்னை விஜயம். பிறகு கோவூர் பயணம். சுந்தர முதலியார் ஸ்வாமிகளுக்கு தெரியா வண்ணம் அவரது யாத்திரை பல்லக்கில் ஆயிரம் பொற் காசுகள் உள்ள பணப் பையை வைத்து அனுப்பின்னார். திருப்பதி போகும் வழியில் திருடர்கள் அவர்களை மடக்க ஸ்வாமிகள் பொற் காசுகள் இருப்பதை அறிந்தார். ஆனால் அந்தப் பணம் ராமநவமி உத்ஸவங்களுக்கு பயன் படும் என்பதால் பகவான் ராமன் அதனைப் பார்த்துக் கொள்வார் என்றார். “முந்து3 வெனுகயிரு பக்கல தோடை3  1முர 2க2ர ஹர ராரா” என்று தர்பார் ராகத்தில் பாட இரவு முழுவதும் பயணம் செய்யும் பொழுது இரு வீரர்கள் அந்த திருடர்களை விரட்டியதும் அல்லாமல் காலைவரை பயணம் செய்து பக்க பலமாக வந்தனர். காலையில் அவர்கள் இருவரும் மறைந்து விட்டார்கள். திருடர்களோ ஸ்வாமிகளிடத்தில் எங்களுக்கு பணம் தேவையில்லை. அந்த இரு வீரர்களும் எங்கள் இதயத்தை கவர்ந்து சென்றுவிட்டனர் என்றார்கள். ஸ்வாமிகளுக்கு வந்தது யார் என்று அறிந்தார். திருடர்களுக்குக் கிடைத்த தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தி “எந்த பாக்யமு கல்கிதிவி” என்ற ஸாரங்கா ராகக் கிருதியைப் பாடினார். இது நடந்தது 1847க்கு முன். 1947க்குப் பின் நடந்த ஒரு சுவையான நிகழ்வை விகடனில் ப்ரசுரித்தார்கள். அதனை இசைத் துக்கடா என்ற பகுதியில் “கள்வரை மயக்கிய கலை” என்ற தலைப்பில் இங்கே காணலாம்.

Saturday, September 25, 2010

Did Tyagaraja ask for royalty?

“கலையை விலை கூவுவது விரும்பத்தக்க செயல் அன்று. இவ்வளவு தருகிறேன்; செயல் ஆற்று என்பதோ இவ்வளவு தாருங்கள் செயல் ஆற்றுகிறேன் என்பதோ சரி அன்று. கலைஞனுக்கும் ரசிகனுக்கும் இடையே கலையை விலைப் பொருளாக்கி அதை ரசிப்பதற்கு கட்டணம் பெறுவது சரியல்ல” என்று மஹா வைத்யநாதஐயர் கூறினார். ஆனந்த விகடனில் 1951வது வருடத்தில் வந்த இசைக் கட்டுரை.
ஆனால் இன்றோ........................................    
Mr.T.M.Krishna and Mr.Vijayasiva gave a press report on 11th July 2010
“Artistes continue to be deeply hurt by some rasikas who secretly record performances with diminutive gadgets including cell phones and exch ange these illegal recordings with the ‘like-minded’. Such offenders have contributed ‘richly’ to the downfall of the music market to the lowest-ever point that it has reached today! And, in the process, choose to misplace their loyalty to protect offenders rather than the artiste whom they claim to admire! It is high time they realise that enjoyment, however elevated it may be, holds no strength when it comes through an illegal channel and by bruising the rights and emotions of the one who provides it. For, recording even a bit of music, dance or any performance without the artiste’s permission is legally punishable: under the Copyright Act, 1957”.

குப்பையில் கிடைக்கும் மாணிக்கம்


ஒரு சிறந்த மேலை நாட்டு நிறுவனம் தனது பொருட்களை விளம்பரம் செய்ய துண்டு ப்ரசுரம் அச்சடித்து எல்லோருக்கும் வழங்கியது. அதற்காக மிகவும் பொருட் செலவு செய்தது. ஒரு சிலரே அதனை படித்தனர். அவர்கள் அளித்த செய்தி மக்களிடம் செல்லவில்லை. விளம்பரத்திற்காக நியமித்த அதிகாரி மிகவும் விசனத்துடன் தெருவில் நடந்து சென்றார். அவர் கோபம் உச்சகட்டத்திற்குச் சென்றது. தான் அச்சடித்த துண்டு ப்ரசுரத்தை கசக்கி தூக்கி எறிந்தார். அப்பொழுது அவர் பார்த்த ஒரு நிகழ்வு அவருக்கு ஓர் புத்துணர்வு தந்தது. பிறகு அவர் அவரது விளம்பர நடவடிக்கையை மாற்றினார். அச்சடித்த எல்லா துண்டு ப்ரசுர காகிதங்களையும் பலரை நியமித்து கசக்கி அதனை தெரு ஓரங்களில் கொட்டச் சொன்னார். பலரும் முந்திக்கொண்டு அந்த காகிதங்களைப் பிரித்துப் படித்து பயன் பெற்றார்கள்.
அதே போல் பழைய காகிதக்கடைக்கு போட்ட சில மாத ஏடுகளிலிருந்து பல அறிய நிகழ்வுகள், செய்திகள் எனக்குக் கிடைத்தது. அந்த நல் முத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இசைத் துக்கடா என்ற தலைப்பில் சில நிகழ்வுகளைக் இனி வரும் கடிதங்களில் தர உள்ளேன்.

Friday, September 24, 2010

யார் சராசரி மனிதன்?


அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

இது ஔவையாரின் வெண்பா. சில செயல்கள் எளிதில் முடியாமல் இழுத்துக்கொண்டே போகின்றன. அப்போது மனம் சுணக்கம் அடைகிறது. அதைப் போக்கச் சொன்ன பாடல் இது.
நெருக்கமாய் கிளைகள் கொண்டு ஓங்கி வளர்ந்த மரங்கள் கூட பழுக்கக் கூடிய காலம் வந்தால் மட்டுமே பழுத்துப் பயன் தரும். அதைப் போல சில வேலைகளைத் தொடங்கி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவை முடியும் காலம் வந்தால் அன்றி அவை நிறைவேறாது.
இது அந்த வெண்பாவின் பொழிப்புரை.  எல்லாம் தெரிந்தாலும் நாம் சஞ்சலப் படுவதை நிறுத்தப் போவதில்லை. மற்றயவர்க்கு இந்த அறிவுரையைச் சொல்லலாம். நமக்கு அந்தத் துன்பம் வரும் பொழுது மனம் இந்த அறிவுரையை ஏற்குமா? அவன் தான் ஒரு சராசரி மனிதன். அந்தக் கூட்டத்தில் நானும் ஒரு ப்ரஜை 

யார் வழி சிறந்தது?

பலவிதமான கதை காலட்சேபங்கள் உரைநடையிலும் சங்கீதத்துடனும் தொலைக் காட்சியிலும் வானொலியிலும் வந்து கொண்டிருக்கின்றன. நல்ல பகவத் விஷயங்களை நன்கு புரியும் படியும் அழகாகவும் பலர் சொல்லுகிறார்கள். இதனால் யார் யார் பயனடைகிறார்கள்; எவ்வாறு பயனடைகிறார்கள்; என்றவாறு பல நினைவுகள் என் மனதில் ஓடியது. உடனே என் மனம் மங்கையர் மலரில் வந்த ஒரு துணுக்கை நினைத்து சிரிப்பு வந்தது.

எமதர்மராஜாவின் தர்பாரில் எம தூதர்கள் இருவரைக் கொண்டு நிறுத்தினர். ஒருவர் பௌராணிகர். மற்றொருவர் ஆட்டோ ஓட்டுனர். சித்ரகுப்தன் அவர்களைப் பற்றிய விவரங்களை எமதர்மராஜனிடம் எடுத்துக் கூறினார். பௌராணிகரை இருட்டான அறையிலும், ஆட்டோ ஓட்டுனரை சுகம் மிகுந்த இடத்துக்கும் அனுப்ப உத்தரவிட்டார். இந்த முடிவைக் கேட்டப் பௌராணிகர் காரணம் என்ன என்று வினவ எமதர்மராஜன் சொன்னார். “உங்கள் கதா காலட்சேபத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் தூங்கி வழிந்தனர். ஆனால் இந்த ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் ஏறிய பலரும் மரண பயம் ஏற்பட்டு பய பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்தனர். நீங்கள் செய்ய நினைத்ததை அவர் செய்துவிட்டார். இதுதான் காரணம்” என்றார்.  

Saturday, September 18, 2010

அடேடே விளம்பரங்கள்


ஆஹா நவராத்திரி கொலு வைக்கும் காலம் வருகிறது.
சமயம், காலத்துக்கேற்ற சில துணுக்குகள்.
சில மாத தமிழ் இதழ்களின் மூலம் நான் சுவைத்த சில
அடேடே விளம்பரங்கள்
---------------------
டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன ! ! !
அமாவாசையன்று கொலு வைத்து
பதினோராவது நாள் காலை எடுத்துவிட வேண்டும்.
ஆர்வமுள்ள கொலு பொம்மை மொத்த வியாபாரிகள்,
பத்து நாட்களுக்குள், உங்கள் ரேட்-ஐக் குறிப்பிட்டு விண்ணப்பிகவும்.
இப்படிக்கு சின்மயா நகர் சிக்கனம் சிங்காரி
-------------------------------------------------------
அன்பாய் அழைப்போம் ! ! !
கொலு வைத்தாலும் கூப்பிட அலுப்பா? கவலை வேண்டாம்;
ஒன்பது நாட்களும் நேரிலும் போனிலும் எஸ்.எம்.எஸ் அனுப்பியும்
கடிதம் எழுதியும் உங்கள் சார்பில் அழைக்க நாங்கள் தயார்
முதலில் அழைப்பு இறுதியில் பணம்.
திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்.
இப்படிக்கு கொருக்குப்பேட்டை கொண்டம்மா கொலு ஸர்வீஸ்
------------------------------------

சுண்டல் தயார் ! ! !
ஐந்து வருட அனுபவம். ரசித்து ருசிக்க
பத்து வகைகளில் சுவையான சுண்டல் ரெடி.
1)   சுமார் ரகம் - ஒரு கிலோ ரூபாய் இருநூறு மட்டும்
2)   சூப்பர் ரகம் – ஒரு கிலோ ரூபாய் முன்னூறு மட்டும்.
அமிஞ்சிக்கரை அம்மாமீஸ் கேண்டீன்
-----------------------------------------------------
இலவசம் இலவசம்
உங்க வீட்டு கொலுவுக்குக் கணிசமானக் கூட்டம் வருமா?
எங்கக் கடை விளம்பரங்களை உங்கள்
கொலுவில் ஒட்டிவைக்க அனுமதித்தால்,
தாம்பூலம், ஜாக்கெட்டுகளை
இலவசமாய் வழங்குகிறோம்.
ஜாபர்க்ஹான் ஜவுளிக் கடல்
------------------------------------------------
எங்களிடம் மேலும் சில துணுக்குகள், நூதன ஐடியாக்கள் உள்ளன.
ரஸித்து உற்சாகப்படுத்தினால் மற்றவைகளும் ப்ரசுரிக்கப்படும்.
இப்படிக்கு  Kodambakkam “Time Killer Press”