Saturday, September 25, 2010

குப்பையில் கிடைக்கும் மாணிக்கம்


ஒரு சிறந்த மேலை நாட்டு நிறுவனம் தனது பொருட்களை விளம்பரம் செய்ய துண்டு ப்ரசுரம் அச்சடித்து எல்லோருக்கும் வழங்கியது. அதற்காக மிகவும் பொருட் செலவு செய்தது. ஒரு சிலரே அதனை படித்தனர். அவர்கள் அளித்த செய்தி மக்களிடம் செல்லவில்லை. விளம்பரத்திற்காக நியமித்த அதிகாரி மிகவும் விசனத்துடன் தெருவில் நடந்து சென்றார். அவர் கோபம் உச்சகட்டத்திற்குச் சென்றது. தான் அச்சடித்த துண்டு ப்ரசுரத்தை கசக்கி தூக்கி எறிந்தார். அப்பொழுது அவர் பார்த்த ஒரு நிகழ்வு அவருக்கு ஓர் புத்துணர்வு தந்தது. பிறகு அவர் அவரது விளம்பர நடவடிக்கையை மாற்றினார். அச்சடித்த எல்லா துண்டு ப்ரசுர காகிதங்களையும் பலரை நியமித்து கசக்கி அதனை தெரு ஓரங்களில் கொட்டச் சொன்னார். பலரும் முந்திக்கொண்டு அந்த காகிதங்களைப் பிரித்துப் படித்து பயன் பெற்றார்கள்.
அதே போல் பழைய காகிதக்கடைக்கு போட்ட சில மாத ஏடுகளிலிருந்து பல அறிய நிகழ்வுகள், செய்திகள் எனக்குக் கிடைத்தது. அந்த நல் முத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இசைத் துக்கடா என்ற தலைப்பில் சில நிகழ்வுகளைக் இனி வரும் கடிதங்களில் தர உள்ளேன்.

2 comments:

  1. குப்பையைக் கிளறினால்
    கோழிக்கு கிடைப்பது உணவு.
    மனிதனுக்கு கிடைப்பது மகத்தான செய்திகள்.
    குப்பையை அலட்சியம் செய்யக்கூடாது.

    ReplyDelete
  2. Kuppaiyai kilarinaal communism kooda kidaikkum

    ReplyDelete