Friday, September 24, 2010

யார் வழி சிறந்தது?

பலவிதமான கதை காலட்சேபங்கள் உரைநடையிலும் சங்கீதத்துடனும் தொலைக் காட்சியிலும் வானொலியிலும் வந்து கொண்டிருக்கின்றன. நல்ல பகவத் விஷயங்களை நன்கு புரியும் படியும் அழகாகவும் பலர் சொல்லுகிறார்கள். இதனால் யார் யார் பயனடைகிறார்கள்; எவ்வாறு பயனடைகிறார்கள்; என்றவாறு பல நினைவுகள் என் மனதில் ஓடியது. உடனே என் மனம் மங்கையர் மலரில் வந்த ஒரு துணுக்கை நினைத்து சிரிப்பு வந்தது.

எமதர்மராஜாவின் தர்பாரில் எம தூதர்கள் இருவரைக் கொண்டு நிறுத்தினர். ஒருவர் பௌராணிகர். மற்றொருவர் ஆட்டோ ஓட்டுனர். சித்ரகுப்தன் அவர்களைப் பற்றிய விவரங்களை எமதர்மராஜனிடம் எடுத்துக் கூறினார். பௌராணிகரை இருட்டான அறையிலும், ஆட்டோ ஓட்டுனரை சுகம் மிகுந்த இடத்துக்கும் அனுப்ப உத்தரவிட்டார். இந்த முடிவைக் கேட்டப் பௌராணிகர் காரணம் என்ன என்று வினவ எமதர்மராஜன் சொன்னார். “உங்கள் கதா காலட்சேபத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் தூங்கி வழிந்தனர். ஆனால் இந்த ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் ஏறிய பலரும் மரண பயம் ஏற்பட்டு பய பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்தனர். நீங்கள் செய்ய நினைத்ததை அவர் செய்துவிட்டார். இதுதான் காரணம் என்றார்.  

1 comment:

  1. நினைப்பது ஒன்று நிகழ்வது ஒன்றாக உள்ளது.நினைப்பதே நடக்க வேண்டும் என்றால் சரியான வழிமுறை வேண்டும்,என்பதை உணரமுடிகிறது.

    ReplyDelete