அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா
இது ஔவையாரின் வெண்பா. சில செயல்கள் எளிதில் முடியாமல் இழுத்துக்கொண்டே போகின்றன. அப்போது மனம் சுணக்கம் அடைகிறது. அதைப் போக்கச் சொன்ன பாடல் இது.
நெருக்கமாய் கிளைகள் கொண்டு ஓங்கி வளர்ந்த மரங்கள் கூட பழுக்கக் கூடிய காலம் வந்தால் மட்டுமே பழுத்துப் பயன் தரும். அதைப் போல சில வேலைகளைத் தொடங்கி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அவை முடியும் காலம் வந்தால் அன்றி அவை நிறைவேறாது.
இது அந்த வெண்பாவின் பொழிப்புரை. எல்லாம் தெரிந்தாலும் நாம் சஞ்சலப் படுவதை நிறுத்தப் போவதில்லை. மற்றயவர்க்கு இந்த அறிவுரையைச் சொல்லலாம். நமக்கு அந்தத் துன்பம் வரும் பொழுது மனம் இந்த அறிவுரையை ஏற்குமா? அவன் தான் ஒரு சராசரி மனிதன். அந்தக் கூட்டத்தில் நானும் ஒரு ப்ரஜை
எங்களையும் அந்த கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ReplyDelete