ஸ்ரீவேதவ்யாஸர் அளித்துள்ள
18 புராணங்களில் ப்ரஹ்மவைவர்த்த புராணம் ஒன்று. அதில் க்ருஷ்ண ஜன்ம
காண்டத்தில் 4வது அத்யாயத்தில் வைகுண்ட வாசி சதுர்புஜ நாராயணன், கோலோகத்தில் ராதா
ஸமேதராய் இரு புஜங்களுடன் ஸ்ரீக்ருஷ்ணனாக விளங்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மனுஷ்ய இவ கோபஸ்தே தஸ்மாத் த்வம் மானுஷீபவ
கோகுலே ப்ராப்ய தம் க்ருஷணம் விஹ்ருத்ய வஸ கானனே
பவிதாதே வர்ஷசதம் விச்சேதோ ஹரிணா ஸஹ
புன: ப்ராப்ய தமீஸம் ச கோலோகம் ஆகமிஷ்யதி
இரத்தினச் சுருக்காமாய் நான்கு வரிகளில்
ராதா க்ருஷ்ண வ்ருத்தாந்தம் அருமையாக வருணிக்கப் பட்டுள்ளது.
யார் இந்த ராதை. ஏன் அவளுக்குக் கூட
இந்த துயரம்.
கோலோகத்தில் ஒருநாள் கோபி வ்ரஜதேவி
க்ருஷ்ணனுடன் சந்தோஷமாக உரையாடுகையில், பொறாமையால் ராதா தேவி கோபப்படுகிறாள். இதனைக்
கண்ணுற்ற ஸ்ரீதாம, க்ருஷ்ணனின் சேவகன், ராதையை, மனிதர்கள் போல் பொறாமை அஸூயை போன்ற
துர்குணங்கள் நம்மிடயே இருத்தல் கூடாது என்று சொல்ல, வெகுண்ட ராதை ஸ்ரீதாமனை
அஸுரனாக ஆக சாபமிட, ஸ்ரீதாமன் ராதைக்கு பதில் சாபமிட கதை வளர்கிறது. மனிதர்கள் போல
பொறாமை கொண்டு க்ருஷணனிடம் ஊடல் கொண்டு, பிரிந்து வாடுவதை வர்ணிக்கும் பாடல் இந்த
அஷ்டபதி.
ஜயதேவர் இந்த பன்னிரண்டாவது
அஷ்டபதியில் ராதை, க்ருஷணனின் பிரிவால படும் துன்பத்தை விவரித்து ஸகி க்ருஷ்ணனிடம் ராதையின் துயரத்தை எவ்வாறு
வர்ணிக்கிறாள் என்பதை விளம்பகதியில் பாட்டிசைத்துள்ளார்.
No comments:
Post a Comment