ஆயிரம் தலையுடைய அரவரசை
அனுதினமும் துதிப்போம் நாம் அனந்தனை
பாயாய் பரமனுக்கே பணிபுரியும் அவன்
பாரோர் உய்யவே பதஞ்சலி ஆனான்
காயம் திடமாகா ஆயுர் வேதம்
தூய மனம் பெற யோக தத்துவம்
வாய்ச்சொல் வளமுர வகுத்தான்
இலக்கணம்
தூயோர் மலர்பதம் தொழுதே நிற்போம்
நாகமே வருமாறு நளினமாகவும்
இனிமையாகவும் பாடப்பட்டுள்ள இந்தப் பாடலை, வயலின் வித்வான் திரு ஸ்ரீவத்ஸனின்
மனைவி திருமதி ஸுபா ஸ்ரீவத்ஸன் பாடியுள்ளார். இவரின் முதல் குருகுலவாசம் அவரது
தந்தையார் லாஸ்ஏஞ்சல் (திருவையாறு) க்ருஷ்ணனிடம். பிறகு திரு ராமநாதனின் குருகுலவாசமும் திரு KVN, திரு.ஸ்ரீவத்ஸன் அளித்த இசைப் பயிர்ச்சியும்
இவரை கர்நாடக சங்கீத முன்னணி விதூஷியாக நமக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.
பதஞ்சலி பற்றியும் அனந்தனைப்
பற்றியும் இந்தப் பாடலே நமக்கு பல முக்கியமான செய்திகளை அளிக்கிறது.
The slide shown has fallen very well with the song. The music addition is fantastic. Thanks
ReplyDeleteExcellent!! The script, the raga, the voice and the visuals all in perfect sync!!
ReplyDelete