இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன.
டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது.
வாசகர் கருத்து
7 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கம்யூட்டரே வாங்க முடிகிற இந்த காலத்தில் சாப்ட்வேருக்கு மட்டும் 7 ஆயிரம் என்பது ரெம்பவே அதிகம். ;பில்கேட்ஸ்க்கு நொடிக்கு எவ்வளவோ வருமானம் வருகிறதே? இதை ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவார்? இந்திய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பில்கெட்ஸ் மனசு வைத்தால் திருட்டு சி.டி.க்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமே.
Sundara vadhana
ReplyDeleteBajan nanraga irunthathu
thodarnthu varum padalkalukku raagaththin peyar kurippittal nanraga ierukkum