Monday, November 23, 2009


மொழி என்பது பலரை ஒன்று சேர்க்கும் பாலமாய் அமைகிறது. அதே சமயத்தில் அதை தவறாக உபயோகிப்பதால் ஒருவர்க்கொருவர் மனதில் அமைதி இன்மை சண்டை போன்றவைகள் உருவாகுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது.  மேலும் அதிலுள்ள சொற்களை சரியாக பிரித்து உச்சரிக்காமல் செய்வதால் மனத்தாங்கல் உண்டாகிறது. இதற்கு சமயத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. ஒரு சமயம் ராமானுஜர் தனது குருவிற்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் பொழுது நடந்த சுவையான நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அதனுடைய தொகுப்பினை கீழ் கண்ட  வலை முகவரியில் விவரித்துள்ளார்கள்.
ஒரு சமயம் ராமானுஜரின் குருவான யாதவப் பிரகாசர் சந்தோக்ய உபநிஷத்திலிருந்து எடுத்த ஒரு வாக்கியத்தில் உள்ள சொல்லிற்கு பதம் பிரித்து அதன் அர்த்தத்தை கூறிக்கொண்டிருந்தார்.
(कप्यासम  पुन्दरिकम  एवं  अक्शिनी )கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷினி .
திருமாலின் கண்களை குரங்கின் ஆசனத்திற்கு உவமானமாகச் சொன்னார். அதைக் கேட்ட  ராமானுஜர் மிகவும் மனம் வருந்தி கண்ணீர் வடித்தார். இதனால் குரு சிஷ்யனிடம் விளக்கம் கேட்க அதற்கு ராமானுஜர் கொடுத்த விளக்கம் 
"நீரில் இருந்து அதனை அருந்தி பூக்கும் பூவான தாமரை திருமாலின் கண்களுக்குச் சமம்".
அர்த்தம் சரியாக சொல்லாவிட்டால் எப்படி அனர்த்தமாக முடிகிறது  என்று இந்த நிகழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. marravargaludan pesa vendiya murai enna enbathai purinthukondedn

    ReplyDelete