ஒட்டகத்திற்கு கோபம் வருமா ? வந்தால் என்ன செய்வார்கள். ஒட்டகத்திற்கு கோபம் வந்தால் அதை தணிக்க அதன் எஜமானரின் தலைப்பாகையையும், சட்டை துணிமணிகளையையும் ஒட்டகத்தின் முன் போட்டுவிட்டு எங்காவது ஒளிந்து கொள்வார்கள். ஒட்டகம் தன கோபத்தை எல்லாம் அந்த துணிகள் மீது காட்டி மிதித்து துவைத்து விட்டு அத்தோடு கோபம் தீர்ந்து சாந்தமாகிவிடுமாம்.
அதே போல் மனிதனிடமும் கோப சமயம் உடம்பும் மனமும் முயற்சி செய்கின்றன. நரம்புகள் முறுக்கேறி வலிமை மிகுதியால் கடுமையான செயல் ஏதாவது செய்தாலொழிய நரம்புகளின் விறைப்பு தளர்வதில்லை. அந்த சக்தியை தவறான வழியில் செயல்படாமல் கடினமான வேலை ஏதாவது செய்து விடுவது நல்லது என்று ஆன்றோர்கள் சொல்கின்றனர். நம்மால் முடியுமா ? முயற்சி செய்வோம் !
No comments:
Post a Comment