Saturday, November 14, 2009

பிரஹ்மம் எங்கே


உலகப் பொருள்களில் உள்ளும் புறமும் பிரஹ்மம் கலந்துள்ளது என்ற வேதாந்தத்தை உத்தாலகர் என்ற முனிவர் தனது மகன் ஸ்வேத கேதுவுக்குச் செய்த உபதேசக் கதையை நரஸிம்ஹ ப்ரியா சஞ்சிகை முலம் நாம் அனுபவிக்கலாம். குரு சிஷ்யனிடம் கொஞ்சம் உப்பைக் கையில் எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்றிரவு இந்த உப்பை கொஞ்சம் ஜலத்தில் போட்டு நாளைக் காலை என்னிடம் வா என்றார். மறுநாள் காலை அவர் உப்பு எங்கே நீரில் உள்ளது என்று வினவினார். நீரில் உப்பு தெரியவில்லை. அதே போலத்தான் ப்ரஹ்மமும் உலகப் பொருள்களில் கலந்திருந்தாலும் நமக்குத் தெரியாது

No comments:

Post a Comment