Sunday, March 28, 2010

"Dharma, Artha, Kama and Moksha" - Sai Inspires

The Vedas lay down four goals before man;
Dharma (righteousness), Artha (wealth), Kama (Desire) and Moksha (Liberation). But they have to be pursued in pairs, Dharma and Artha together and Kama and Moksha combined. That is to say, Wealth has to be earned through Righteousness and our Desire should be for Liberation. 
But man takes these four separately and ends up losing everything. He puts them into separate compartments and adopts distinct plans to achieve them. He gives up Righteousness and Liberation  as beyond him and wastes his life pursuing only Wealth and Desire. This lead him to ruin.      
- Sanathana Sarathi, June 2001

Saturday, March 27, 2010

marriage songs

நாதஸ்வர இசையினை விழா நாட்களில் இசைக்க இதற்கு முன் உள்ள மின் அஞ்சலில் கொடுத்துள்ளேன். ஊஞ்சல சமயம் பாட உள்ள சில பாடல்களை கீழே உள்ள இணய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இசையினை கேட்க 

Friday, March 26, 2010

அனுமனும் துளசிதாசும்


துளசிதாஸ் அனுமனைத் தரிசித்ததை ஒரு சுவையான நிகழ்வு மூலமாகச் சொல்வர். காசியில் உள்ள கங்கையில் நீராடிய பின்பு அங்கு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதரை பூஜிப்பது , மாலைப் பொழுதில் ராமரது கதையினை விஸ்வநாதர் கோவிலில் பிரசங்கம் செய்வது என்பது துளசிதாஸ் தினமும் செய்யும் அனுஷ்டானம் ஆகும். ஒரு நாட்காலையில் நீராடித் திரும்புகையில் மீதமுள்ள நீரினை, கரையில் உள்ள மரத்தடியில் சேர்த்தார்.  அந்த மரத்தில் அனேக காலமாக வசித்து வந்த பிரம்ம ராக்ஷஸன் இவரால் சாப விமோசனம் அடைந்தான். அந்த யக்ஷன் துளசிதாசை வணங்கி நின்றான்.  ப்ரதிபலனாக அவர் வேண்டும் வரத்தை  அளிக்க வினவினான்.
அவர் வேண்டிய வரம்  ஒன்றே ஒன்று தான். அது அனுமனைத் தரிசிக்க.
யக்ஷன் அதற்கு ஓர் உபாயம் ஒன்றினைக் கூறினான். ஓர் வயதான பெரியவர், கந்தல் உடையினை அணிந்தவராய் தினமும் உங்கள் ப்ரவசனத்தைக் கேட்க கடைசி வரிசையில் அமர்ந்திருப்பார்.  அவர்தான் அனுமன் என்றார் அந்த யக்ஷன். அன்று இரவும் அந்த பெரியவர் வந்தார். அவரைப் பார்த்த க்ஷணமே அவர் காலில் விழ யத்தனித்தார். ஆனால் ப்ரவசனத்தை முடித்த பின்பே அவரை வேகமாக தொடர்ந்தார். நடுக் காட்டில் தான் அவரைக் காண முடிந்தது. உடனே அவர் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார். ராம லக்ஷ்மணர்ளை தரிசிக்க வரம் வேண்டினார். அனுமனும் தனது சுய ரூபத்தில் அவருக்குக் காட்சி அளித்து ராம லக்ஷ்மணர்ளையும் காண்பித்ததாக ஒரு செவி வழி நிகழ்வைக் கூறுவார்கள்.
நாமும் அனுமனை தரிசிக்க நாம சங்கீர்த்தன மார்கத்தை அனுஷ்டித்து பயன் அடைவோம்.

Wednesday, March 24, 2010

பாவயே பவமான நந்தனம்

பாவயே பவமான நந்தனம்
பாவயே பவமான நந்தனம்
மந்தர தருமூல மாநீத வாசம்
ஸுந்தர தரஹாசம் ஹரிதாசம் ராமதாசம்
ரகுநாத கீர்த்தனம் வந்தித சித்தம்
அஹகர ஸுப வருத்தம் ஸ்ரம ஹர்த்தம் ராம தீர்த்தம்
ஆனந்த பாஷ்ப அலங்க்ருத நேத்ரம்
ஸ்வானந்த ரஸபாத்ரம் ஸ்ரீசித்ரம் திவ்ய காத்ரம்    
பத்ராசல பதிபாத பக்தம் பக்தம்
ஸுத்ர ஸுகோன்முக்த விரக்தம் ராமபத்ரம்
Download song!

Message of Ramayana

You should make the right use of the eyes, ears and tongue which God has gifted to you. Whoever is able to control these will achieve greatness. One should therefore cultivate these virtues and attain divinity. This is the primary objective and fundamental basis of all education. Those bereft of these virtues are verily demons. This is the essence and the message of Ramayana. Never neglect these teachings. They are for emancipation and redemption of mankind. Put them into practice in your life.
. -Divine Discourse,  Prema Vahini

Tuesday, March 23, 2010

Nadaswaram Collections

It is E-World. Everywhere E-Music. 
Do you need Select Songs in Naadaswaram?
Celebrate a Happy Function

Tuesday, March 16, 2010

அஷ்டாக்ஷர மந்திரம்

மஹா பாரதம் சொல்லும் மந்த்ரம்
“ஸர்வ ஸாஸ்தரமயீ கீதா ஸர்வ தேவமயோ  ஹரி
ஸர்வ தீர்த்தமயீ கங்கா ஸர்வ வேதமயோ மனு:
கீதா கங்கா காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே
சதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே


“ஹே பரமாத்மாவே கங்கையும் கீதையும் காயத்ரியும் துளஸியும் ப்ரஸித்தி பெற்ற கோபீ சந்தனமும் ஸாளக்ராம பூஜையும் அவ்விதமே ஏகாதஸியும்
பகவன் நாமாக்ஷரங்களும் ஆகிய இந்த எட்டும் கலிகாலத்தில் ப்ரயத்தினமின்றியே தங்களுடைய ப்ரசாதத்தை வ்ருத்தி செய்து கொடுத்து
விரைவாக முக்தியைக் கொடுக்கின்றவைகள் என்று மகரிஷிகள் உபதேசிக்கின்றனர். ஹே ஈசா அந்த எட்டிலும் என்னைப் பற்றுள்ளவனாகச் செய்யவேண்டும் என்று பட்டத்த்ரி தனது நாராயணீயத்தில் முக்திக்கு வழிகளாகக் கூறுகிறார். “ஒம் நமோ நாராயணாயஎன்ற அஷ்டாக்ஷர மந்திரத்தில் இந்த எட்டும் அடங்கும்.

ஏகம் சாஸ்த்ரம் தேவகீபுத்ர கீதம் ஏவ
ஏகோ தேவா தேவகீபுத்ர ஏவ
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி
கர்மாப்யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா
இதையே ராகஸ்ரீ தனது ஸாஹித்யத்தில் கூறுகிறார்

Sunday, March 14, 2010

ஸுந்தரகாண்டம்

ஸுந்தரகாண்டத்தை தினமும் நன்கு பாராயணம் செய்ய ஏதுவாக புதிய ப்ளாக் ஒன்றினை நான் ஆரம்பித்துள்ளேன். இப்பொழுது முதல் சர்கம் முழுவதும் பதிந்துள்ளேன். வரும் சில நாட்களில் ஸுந்தரகாண்டம் முழுவதையும் கொடுக்க அனுமனை வேண்டி ஆரம்பித்துள்ளேன். 
http://pavanasuthan.blogspot.com/

Composition on Meruchakram

Brahmashri N M sundaram hails from orthodox brahmin family of Thanjavur nativity. After having served in Defence Accounts, Govt. of India, retired as Professor in Madras University. Migrated to Australia in 1988 when by God's will, got associated with Sri Sathya Sai Organization. Given discourses on spiritual subjects, Sai Bhagavatham and Gita. Presently is Director, Spiritual Advancement Institute, Sydney, blessed by Sri Sathya Sai under the Sai Organization, for teaching Vedantha and vedic chanting.  By Baba's grace inspired to compose songs and bhajans on Baba.  Has organised Sangeethanjali, Bhajananjali, Sangeetha Sammelan and Natyanjali, composing lyrics for all these events which are devoted to Swamy.
The following song has been composed by Sri.Sundaram. I enjoy singing this song as some asked who is this வாக்கேயக்காரர். He is also a "Dikshithar" but he is "Sri.Sundaram Dikshithar" 
Download click here!

சிவமா அல்லது சக்தியா

சக்தி இல்லையேல் சிவம் இல்லை – சிவம் இல்லையேல் சக்தி இல்லை
கணவன் மனைவி இருவருக்குள் உள்ள சண்டை தொன்று தொட்டு நிலவி வருகிறது. மேலும் நாம் சண்டையிடுவதை சரியென்று நிரூபிப்பதற்கும் நம் மனதை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காகவும், கடவுளிடம் கூட பிணக்கு இருந்தது என்று சொல்லி அதற்கான கதைகளைக் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
மனைவியிடம் இருக்கும் ஒரு சில வேண்டாத குணங்களை மிகைப் படுத்தி கணவன்மார்கள் அதை அழகாக படமெடுத்துக் காண்பிப்பார்கள். அம்மாதிரியான சில படங்களை இங்கே பார்க்கலாம். கணவன்மார்கள் தாங்கள் தான் கார் ஓட்டுவதில் வல்லமை படைத்தவர்கள் என்று நினைத்து மனைவிமார்கள் எவ்வாறு விபத்துக்களை உண்டாக்கி உள்ளார்கள் என்று கீழே படம் பிடித்துக் காண்பித்துள்ளார்கள். அதற்கு ஒலிம்பிக் பரிசுகள் வழங்கும் வகையில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வழங்கியுள்ளார்கள் 



அதே போல் கணவனிடம் உள்ள வேண்டாத குணங்களை வரிசைப் படுத்தி மனைவிமார்கள் மின் அஞ்சல் வழியாக வெளிப்படுத்தி அவர்களை மாற்றப் பார்க்கிறார்கள்.
இந்த சண்டை தொடரும். யார் தங்களை மாற்றிக்கொள்ளப் போகிறார்கள் அல்லது யார் பிறரை மாற்றப் போகிறார்கள் என்பது அனுபவம் மட்டுமே சொல்லும். நாமும் அதில் அங்கம் வகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரவர் அனுபவங்களை நாமே சீர்தூக்கிப் பார்த்து ரசித்து மனதை லேசாக்கிக் கொண்டால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற உபாதைகளை குறைத்துக்கொள்ளலாம்  

Thursday, March 11, 2010

Broken Strings



எல்லா வல்லுனர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் கருவிகளை தெய்வமாக பாவித்து அதற்குரிய மரியாதையைத் தருகின்றனர். நமது தேசத்தில் நவராத்ரியில் சரஸ்வதி பூஜையன்று நாம் வாசிக்கும் சங்கீத வாத்யங்களை கடவுளாக பாவித்து பூஜை செய்கின்றோம். அம்ஜத் அலிகான் வெளிநாட்டுப் பயணத்தின் போது, விமான சரக்குகளை நிர்வகிக்கும் சரகத்தில், அவரது ஸரோத் வாத்தியத்தை சரியாக கையாளாததால் உடைந்ததும் மிகவும் வருத்தமுற்று என் இதயமே உடைந்தது என்றார்.

Wednesday, March 10, 2010

ஆத்யந்த பிரபு

ஏழரை சனியினால் அவதிப்படுபவர் புலம்புவதும், குருவின் நல்ல பார்வையினாலும், சுக்ர தசையின் பரிவினாலும் மகிழ்வதும் நம் இயல்பு. சனி க்ரஹத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளையாரையும் அனுமனையும் தொழுதால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். அவ்விருவர் இணைந்த கோலம “ஆத்யந்த பிரபு என்று போற்றுவர். சென்னையில் மத்ய கைலாஷ் கோவிலில் இந்த பிரபுவை தரிசித்து நிம்மதி அடையலாம்.
ராவணன் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நவக்ரஹங்களை அனுமன் விடுவித்ததால், சனி பகவான், அனுமனைப் ப்ராத்திபவர்களுக்குச்  சிறிது கருணை காட்டுவதாக வரம் அளித்தார். கயிலை சென்று விநாயகரை சனி  பிடிக்கையில், ‘நாளை வருகிறேன் என்று தனது முதுகில் எழுதி வாங்கிக்கொண்டதால், தினமும் வந்து பிள்ளயாரை, நாளை பிடிப்பதாகச் சொல்லி சனி திரும்பிவிடுகிறார். அனுமனை பிடிக்க சனி பகவான் அனுமனின் தலையில் உட்கார, அனுமனும் ராமநாம மகிமையால் பெரிய மலைகளை தூக்கி தன தலையில் வைக்க, சனி பகவான் ஏழரை நாழிகையில் தப்பித்து ஓடி விடுவதாக ஒரு ஐதீகம்.
ஆகையால் நாமும் ஆத்யந்த பிரபுவை ஆராதிப்போம். சனியின் கஷ்டங்களிலிருந்து விடுபடுவோம்

Tuesday, March 9, 2010

Why Madhyama Sruthi; When needed



There used to be a question among listeners, music lovers and students “Which ragas are to be sung in Madhyama Sruthi and Why? One of the leading Carnatic Music Vidhushi has answered for this question in the following manner.

Nadanamakriya, Shenjuruti, Navroj and Kurunji are some of the ragas sung in madhyama sruti. The range of these ragas is limited and they are mainly panchamantya, dhaivatantya or Nishadantya, i.e the sancharas do not go beyond these swaras. If sung in the regular panchama sruti, the pitch will sound very low and will have less of an impact. Of late, other ragas like Manirangu, Sindhu bhairavi and Yaman Kalyan are also being sung in madhyama sruti.

If felt the pitch would sound very low, they could raise to one or one and half pitch more. That is, if their normal sruthi is “C” , these ragas may be sung in “D” or “D#”. Why they have to scale up to “F”? The main reason is….

In the middle of the concert, the violin and the percussion instrument’s pitch cannot be scaled up by one or one and half etc., as there will be a time loss, the audience will become impatient and the harmony or the continuity of hearing the concert will be at loss.

Monday, March 8, 2010

worrying for worry ? no I am cheerful ! Am I ?

Can we say when the worry starts for us and when the worry ends in our life period? Have you thought of it. Worry starts from KG school regarding how teacher is going to deal in the class or how the student sitting by our side is going to give us trouble. The reason and type of worrying differs whether it is Teenage or middle age or old age.  You worry about career and education when you are in teenage. During your transition from teenage to middle age worry starts in a different angle about who is going to be your partner and how she/he is going to adapt for the new environment etc. .  Then.......... I will handover the subject to a friend's transcript of student / teacher in the class of "LIFE".
Hope you will start enjoying about worrying or worrying about how to get rid of worrying !  This is not actor "Visu's" dialogue about ....... 


WORRY

Is there a magic cutoff period when offspring become accountable for their own actions?  Is there a wonderful moment when parents can become detached spectators in the lives of their children and shrug, "It's their life," and feel nothing? Is this decease has been brought forward in our gene like diabetes or heart ailments from our ancestors.

When I was in my twenties, I stood in a hospital corridor waiting for doctors to put a few
stitches in my daughter's head.  I asked, "When do you stop worrying?"  The nurse said,
"When they get out of the accident stage."  My Dad just smiled faintly and said nothing.

When I was in my thirties, I sat on a little chair in a classroom and heard how one of my
children talked incessantly, disrupted the class, and was headed for a career making
license plates.  As if to read my mind, a teacher said, "Don't worry, they all go through
this stage and then you can sit back, relax and enjoy them."  My dad just smiled
faintly and said nothing.

When I was in my forties, I spent a lifetime waiting for the phone to ring, the cars to come
home, the front door to open.  A friend said, "They’re trying to find themselves.  Don't worry, in a few years, you can stop worrying.  They'll be adults."  My dad just smiled faintly and said nothing.

By the time I was 50, I was sick & tired of being vulnerable.  I was still worrying over my
children, but there was a new wrinkle.  There was nothing I could do about it.  My Dad just smiled faintly and said nothing.  I continued to anguish over their failures, be tormented by their frustrations and absorbed in their disappointments.

My friends said that when my kids got married I could stop worrying and lead my own life.  I wanted to believe that, but I was haunted by my dad's warm smile and his occasional, "You look pale.  Are you all right? Call me the minute you get home.  Are you depressed about something?"
   
Can it be that parents are sentenced to a lifetime of worry?  Is concern for one another handed down like a torch to blaze the trail of human frailties and the fears of the unknown?  Is concern a curse or is it a virtue that elevates us to the highest form of life?
  
One of my children became quite irritable recently, saying to me, "Where were you?  I've been calling for 3 days, and no one answered I was worried."
I smiled a warm smile.
The torch has been passed.

PASS IT ON TO OTHER WONDERFUL PARENTS
(And also to your children.  That's the fun part)

Saturday, March 6, 2010

சங்கீத ஞானம் தெய்வீக ஞானம்

த்யகராஜ ஸ்வாமிகளது க்ருதிகள் மந்திர சக்தி படைத்தது என்பதை ஒரு நிகழ்ச்சிமூலமாக தெரியவருகிறது. ஸ்வாமிகள் திருப்பதி வேங்கட முடையானை தரிசித்துத் திரும்புகையில், புத்தூர் கிராமத்தில் காலைப் பொழுதில் ஒரு கிணற்றைச் சுற்றி அநேகர் நின்று வருந்துவதைக் கண்டு சிஷ்யர்கள் மூலமாக நடந்ததை அறிந்தார். இரவில் “சேஷய்யா என்ற பிராமணர் கிணற்றில் விழுந்து உயிர் துறந்ததை ஸ்வாமிகள் பார்த்தார்கள். இறந்தவரின் மனைவியும் குழந்தையும் அழுவதைகண்டு மனம் இளகி தனது சிஷ்யர்களை சில க்ருதிகளைப் பாடச்சொல்லி, பின் உயிர் நீத்தவர் மேல் துளசி தீர்த்தத்தை தெளித்து உயிர் பெறச்செய்தார். இந்த உண்மை அவர்களது சிஷ்யர்கள் மூலமாக நமக்குத் தெரியவருகிறது. அவர்கள் பாடிய பாடல்கள்
லோகாவன சதுர பாஹிமாம் – தஞ்சாவூர் ராமா ராவ்
ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ – தில்லைசஸ்தானம் ராமயங்கார்
நாஜீவாதார நா நோமுபலமா – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்

Friday, March 5, 2010

Violin and Vivaldi of Venice - Victorious Opera Player

On March 4th I saw in Google Home page about Antonio the famous Violinist as logo. Whenever we see violin we can only say Vivaldi.  I collected the following information about him from the net. 
Lucio Vivaldi (March 4, 1678 – July 28, 1741), nicknamed il Prete Rosso ("The Red Priest"), was a Venetian Baroque composer, priest and famous virtuoso violinist. He was born and raised in the Republic of Venice. The four seasons, a popular series of four violin concerts is his best-known work. His other compositions include over 500 instrumental concertos, sacred choral works and over 40 operas. Well received during his lifetime, Vivaldi's music went into a decline until it was rediscovered in the first half of the 20th century. Vivaldi's music is popular with modern audiences. During this period Vivaldi wrote the Four Seasons, four violin concertos depicting scenes appropriate for each season. Vivaldi was influential in the transition from baroque music to the classical style. 
Vivaldi wrote more than 500 other concertos. About 350 of these are for solo instrument and strings, of which 230 are for violin, the others being for bassoon, cello, oboe, flute, viola d'amore, recorder, lute, or mandolin. About 40 are for two instruments and strings, and about 30 are for three or more instruments and strings. As well as about 46 operas, Vivaldi composed a large body of sacred choral music. Other works include sinfonias, about 90 sonatas, and chamber music. The music of Vivaldi, Mozart, Tchaikovsky and Corelli, has been included in the theories of Alfred Tomatis, the effects of music on human behaviour and used in Music Therapy. 

தூக்கமும் கண்களை தழுவட்டுமே

உறக்கம் என்பது எல்லா உயரினங்களுக்கும் இன்றியமையாதது. உறக்கம் என்பது எங்கிருந்தாலும் வரும். இன்றைய விஞ்ஞான உலகத்தில் அதற்கும் ஒரு அருமையான இடத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுத்துள்ள ஒரு படைப்பை இங்கே காணலாம்.
To know more about these articles please go to the sleep link.

Thursday, March 4, 2010

ஐம்பதிலும் பாட்டுவரும் (பாராட்டு வரும்)

மங்கையர் மலரில் மார்ச் மாத இதழில் ஒரு சுவையான கட்டுரை ஒன்றை வாசித்தேன். நியூ ஜெர்சியில் இருக்கும் பேத்தி சென்னையில் இருக்கும் தாத்தாவை க்ளீவ்லாந்தில் நடக்கவிருக்கும் கர்நாடக இசைப் பாட்டுப் போட்டிக்கு பெயரை விண்ணப்பிக்கச் சொல்லி, ௭ழுவது வயதிற்கு மேற்பட்ட தாத்தாவை ஊக்கப்படுத்தி, பாட வைத்து பாராட்டை வாங்கச் செய்த சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
(For better view kindly click the below article)
நன்றி மங்கயர்மலர்

Tuesday, March 2, 2010

திருநின்றவூர்

நான் இன்று சென்று வழிபட்ட வைணவத் திருத்தலம்.

Runway crossing main way

The following news item was forwarded by one of my friend who has got an interest in collecting such rare photos.
Gibraltar airport's runway actually has a main road going across it! It is the only road that connects Spain and Gibraltar and is closed at particular times when flights are operating. Its like a railway crossing ! click the photos to have a closer look.

Monday, March 1, 2010

உளுந்தூர்ப் பேட்டை

திருச்சிக்கு சென்னையிலிருந்து பயணம் செய்யும் போது விழுப்புரத்திற்கு தெற்கே 35கீ.மீ தொலைவில் உள்ளது உளுந்தூர் பேட்டை. இந்த ஊரின் பெயர் காரணப் பெயரா? உளுந்தாண்டவர் ஈசனின் பெயரால் ஏற்பட்ட ஊர். கீரனூர் சந்தைக்கு சென்று மிளகு விற்கப் போன ஒரு சிவத்தொண்டனை தடுத்தாட்கொள்வதற்காக நடந்த காரணத்தினால் உண்டான ஸ்தலம். சந்தைக்குச் சென்ற வணிகன் போகும் வழியில் சுயம்புவாக இருந்த சிவனை வழிபட்டு ஓய்வெடுத்தான். அப்போது ஒரு முதியவர் அவனிடம் வந்து “ஒரே தலைவலி அப்பா! உன் மூட்டையில் உள்ள மிளகின் காரம் எத்தனை தொலைவிற்கு வீசுகிறது. அதில் சிறிதளவு எனக்கு தந்தால் என் தலைவலி நீங்கும் என்றார். “இது மிளகு மூட்டை இல்லை. இது வெறும் உளுந்து தான் என்று சொல்லி்ச் சந்தைக்குச் சென்றான். சந்தையில் மூட்டையைப் பிரித்த போது மிளகெல்லாம் உளுந்தாக மாறியதைப் பார்த்து அந்த முதியவரிடம் மானசீகமாக மன்னித்திட வேண்டி “மகேசா என்று வாய் விட்டு அலறினான். ஈசன் அவனை தடுத்தாட்கொண்டு மிளகுப் பொதியாக மாற்றினார். ஆதலால் இந்த ஸ்தலம் உளுந்தாண்டவர் ஈசயம்பதியாக ஆகிற்று. அதுவே மருவி அந்த ஊரின் பெயர் உளுந்தூர் பேட்டையாக மாறியது  

ஈசனை விட்டு விலகாத எட்டு எண்கள்

ஈஸனுடன் ஐக்கியமான எட்டு எண்கள்; அர்த்தநாரீச்வரம் ஒன்றான சிவத்தையும், சிவ சக்தி ஸ்வரூபம் இரண்டறக் கலந்தையும் உணர்த்துகிறது. முக்கண் உடைய ஹரனின் நெற்றிக்கண் எண் மூன்றையும், திருவதிகை, திருவையாறு, திருக்காளத்தி, திருவக்கரை ஆகிய நான்கு தலங்களில் உள்ள அகோரம், தத்புருடம், வாமதேவம், சத்தியோஜாதம் என சதுர்முக லிங்கங்கள் எண் நான்கை உணர்த்துகிறது. நாதத்தின் வடிவமான நாதன் கேதாரம், பத்ரிநாதம், பசுபதி நாதம், அமரநாதம், கைலாய நாதம் என ஐந்து சிகரங்கள் சிவனின் ஐந்து முகங்களாக வழிபடுகின்றனர். இந்திர, வேத, ஆத்ம, மால்விடை, தரும என்ற ஐவகை நந்திகள் சிவனின் வாகனங்களாக அமைகின்றன. சிவனின் வெம்மையை தாங்கியவர் சப்த கன்னியர்கள். சிவனைப் போற்றும் ஏழு புராணங்கள் சிவ புராணம், லிங்கபுராணம், ஸ்கந்தபுரணம், மார்கண்டேய புராணம், அக்னிபுராணம், மத்ஸ்ய புராணம், கூர்மபுராணம். அபிஷேகப் ப்ரியனான ஹரனுக்காக கடைபிடிக்கப்படும் எட்டு வ்ரதங்கள் சோமவார வ்ரதம்-திங்கள், உமாமஹேஸ்வரர் வ்ரதம்-கார்த்திகை பௌர்ணமி, திருவாதிரை வ்ரதம்- மார்கழி, சிவராத்திரி வ்ரதம் – மாசி, கல்யாண வ்ரதம் – பங்குனி உத்ரம், பாசுபத வ்ரதம் – தைப் பூசம், அஷ்டமி வ்ரதம்- வைகாசி பூர்வ பட்ச அஷ்டமி, கேதார வ்ரதம்-தீபாவளி வ்ரதம்