சக்தி இல்லையேல் சிவம் இல்லை – சிவம் இல்லையேல் சக்தி இல்லை
கணவன் மனைவி இருவருக்குள் உள்ள சண்டை தொன்று தொட்டு நிலவி வருகிறது. மேலும் நாம் சண்டையிடுவதை சரியென்று நிரூபிப்பதற்கும் நம் மனதை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காகவும், கடவுளிடம் கூட பிணக்கு இருந்தது என்று சொல்லி அதற்கான கதைகளைக் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
மனைவியிடம் இருக்கும் ஒரு சில வேண்டாத குணங்களை மிகைப் படுத்தி கணவன்மார்கள் அதை அழகாக படமெடுத்துக் காண்பிப்பார்கள். அம்மாதிரியான சில படங்களை இங்கே பார்க்கலாம். கணவன்மார்கள் தாங்கள் தான் கார் ஓட்டுவதில் வல்லமை படைத்தவர்கள் என்று நினைத்து மனைவிமார்கள் எவ்வாறு விபத்துக்களை உண்டாக்கி உள்ளார்கள் என்று கீழே படம் பிடித்துக் காண்பித்துள்ளார்கள். அதற்கு ஒலிம்பிக் பரிசுகள் வழங்கும் வகையில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வழங்கியுள்ளார்கள்
அதே போல் கணவனிடம் உள்ள வேண்டாத குணங்களை வரிசைப் படுத்தி மனைவிமார்கள் மின் அஞ்சல் வழியாக வெளிப்படுத்தி அவர்களை மாற்றப் பார்க்கிறார்கள்.
இந்த சண்டை தொடரும். யார் தங்களை மாற்றிக்கொள்ளப் போகிறார்கள் அல்லது யார் பிறரை மாற்றப் போகிறார்கள் என்பது அனுபவம் மட்டுமே சொல்லும். நாமும் அதில் அங்கம் வகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரவர் அனுபவங்களை நாமே சீர்தூக்கிப் பார்த்து ரசித்து மனதை லேசாக்கிக் கொண்டால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற உபாதைகளை குறைத்துக்கொள்ளலாம்
Men are from Mars and women are from Venus.
ReplyDelete