த்யகராஜ ஸ்வாமிகளது க்ருதிகள் மந்திர சக்தி படைத்தது என்பதை ஒரு நிகழ்ச்சிமூலமாக தெரியவருகிறது. ஸ்வாமிகள் திருப்பதி வேங்கட முடையானை தரிசித்துத் திரும்புகையில், புத்தூர் கிராமத்தில் காலைப் பொழுதில் ஒரு கிணற்றைச் சுற்றி அநேகர் நின்று வருந்துவதைக் கண்டு சிஷ்யர்கள் மூலமாக நடந்ததை அறிந்தார். இரவில் “சேஷய்யா” என்ற பிராமணர் கிணற்றில் விழுந்து உயிர் துறந்ததை ஸ்வாமிகள் பார்த்தார்கள். இறந்தவரின் மனைவியும் குழந்தையும் அழுவதைகண்டு மனம் இளகி தனது சிஷ்யர்களை சில க்ருதிகளைப் பாடச்சொல்லி, பின் உயிர் நீத்தவர் மேல் துளசி தீர்த்தத்தை தெளித்து உயிர் பெறச்செய்தார். இந்த உண்மை அவர்களது சிஷ்யர்கள் மூலமாக நமக்குத் தெரியவருகிறது. அவர்கள் பாடிய பாடல்கள்
லோகாவன சதுர பாஹிமாம் – தஞ்சாவூர் ராமா ராவ்
ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ – தில்லைசஸ்தானம் ராமயங்கார்
நாஜீவாதார நா நோமுபலமா – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்
சிஷ்யர்கள் மூலம் தெரியவந்தஉண்மையை
ReplyDeleteதங்கள் மூலமாக நாங்கள் தெரிந்துகொண்டோம்
அறியவைத்தமைக்கு நன்றி
"பாடலுக்கு சக்தியா
ReplyDeleteபாடியவருக்கு சக்தியா அல்லது பாடச் சொன்னவருக்குச் சக்தியா" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பி நமக்கு ஒரு விளக்கத்தையும் அளித்துவிட்டார் பாடியவர் ஒரு கருவி தான். பாட்டுக்கும் பாடச்சொன்னவருக்கும் தான் சக்தி இருந்தது. எல்லா மனிதர்களுக்கும் இது ஒரு நல்ல கருத்து . நாம் நன்றாக பாடினால் "நான் பாடினேன்" என்று சொல்கிறோம். நன்றாக பாடவரவில்லை எனில், எனக்கு தொண்டை இன்று சரியில்லை அல்லது எனக்கு இன்று மனது சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றோம். கடவுள் நம்மை பாட வைக்கின்றார் என்ற உண்மையை நாம் மறந்து விடக்கூடாது . அவர் எழுப்பிய கேள்வி ஒரு நல்ல கருத்தையும் விளக்கத்தையும் நமக்கு அளிக்கிறது