ஈஸனுடன் ஐக்கியமான எட்டு எண்கள்; அர்த்தநாரீச்வரம் ஒன்றான சிவத்தையும், சிவ சக்தி ஸ்வரூபம் இரண்டறக் கலந்தையும் உணர்த்துகிறது. முக்கண் உடைய ஹரனின் நெற்றிக்கண் எண் மூன்றையும், திருவதிகை, திருவையாறு, திருக்காளத்தி, திருவக்கரை ஆகிய நான்கு தலங்களில் உள்ள அகோரம், தத்புருடம், வாமதேவம், சத்தியோஜாதம் என சதுர்முக லிங்கங்கள் எண் நான்கை உணர்த்துகிறது. நாதத்தின் வடிவமான நாதன் கேதாரம், பத்ரிநாதம், பசுபதி நாதம், அமரநாதம், கைலாய நாதம் என ஐந்து சிகரங்கள் சிவனின் ஐந்து முகங்களாக வழிபடுகின்றனர். இந்திர, வேத, ஆத்ம, மால்விடை, தரும என்ற ஐவகை நந்திகள் சிவனின் வாகனங்களாக அமைகின்றன. சிவனின் வெம்மையை தாங்கியவர் சப்த கன்னியர்கள். சிவனைப் போற்றும் ஏழு புராணங்கள் சிவ புராணம், லிங்கபுராணம், ஸ்கந்தபுரணம், மார்கண்டேய புராணம், அக்னிபுராணம், மத்ஸ்ய புராணம், கூர்மபுராணம். அபிஷேகப் ப்ரியனான ஹரனுக்காக கடைபிடிக்கப்படும் எட்டு வ்ரதங்கள் சோமவார வ்ரதம்-திங்கள், உமாமஹேஸ்வரர் வ்ரதம்-கார்த்திகை பௌர்ணமி, திருவாதிரை வ்ரதம்- மார்கழி, சிவராத்திரி வ்ரதம் – மாசி, கல்யாண வ்ரதம் – பங்குனி உத்ரம், பாசுபத வ்ரதம் – தைப் பூசம், அஷ்டமி வ்ரதம்- வைகாசி பூர்வ பட்ச அஷ்டமி, கேதார வ்ரதம்-தீபாவளி வ்ரதம்
எட்டு திசைகளிலும் இருக்கும் ஈசன் எட்டு எண்களுடன் இணைந்தும் இருக்கிறான்
ReplyDeleteஎண்ணுபவர் இதயங்களுக்கு எட்டுபவனாகவும் இருக்கிறான்
"ஈசனை எண்ணுபவர் இதயங்களுக்கு எட்டுபவனாகவும் இருக்கிறான்" - இது தான் சரியான தலைப்பு.
ReplyDelete