Monday, March 1, 2010

உளுந்தூர்ப் பேட்டை

திருச்சிக்கு சென்னையிலிருந்து பயணம் செய்யும் போது விழுப்புரத்திற்கு தெற்கே 35கீ.மீ தொலைவில் உள்ளது உளுந்தூர் பேட்டை. இந்த ஊரின் பெயர் காரணப் பெயரா? உளுந்தாண்டவர் ஈசனின் பெயரால் ஏற்பட்ட ஊர். கீரனூர் சந்தைக்கு சென்று மிளகு விற்கப் போன ஒரு சிவத்தொண்டனை தடுத்தாட்கொள்வதற்காக நடந்த காரணத்தினால் உண்டான ஸ்தலம். சந்தைக்குச் சென்ற வணிகன் போகும் வழியில் சுயம்புவாக இருந்த சிவனை வழிபட்டு ஓய்வெடுத்தான். அப்போது ஒரு முதியவர் அவனிடம் வந்து “ஒரே தலைவலி அப்பா! உன் மூட்டையில் உள்ள மிளகின் காரம் எத்தனை தொலைவிற்கு வீசுகிறது. அதில் சிறிதளவு எனக்கு தந்தால் என் தலைவலி நீங்கும் என்றார். “இது மிளகு மூட்டை இல்லை. இது வெறும் உளுந்து தான் என்று சொல்லி்ச் சந்தைக்குச் சென்றான். சந்தையில் மூட்டையைப் பிரித்த போது மிளகெல்லாம் உளுந்தாக மாறியதைப் பார்த்து அந்த முதியவரிடம் மானசீகமாக மன்னித்திட வேண்டி “மகேசா என்று வாய் விட்டு அலறினான். ஈசன் அவனை தடுத்தாட்கொண்டு மிளகுப் பொதியாக மாற்றினார். ஆதலால் இந்த ஸ்தலம் உளுந்தாண்டவர் ஈசயம்பதியாக ஆகிற்று. அதுவே மருவி அந்த ஊரின் பெயர் உளுந்தூர் பேட்டையாக மாறியது  

2 comments:

  1. உண்மைக்கு மாறாகக் கூறினாலும் உணர்ந்து
    கொண்டால் உமா மகேஸ்வரன் உவந்து அருளுவான்

    ReplyDelete
  2. உண்மைக்கு மாறாகக் கூறினாலும் உணர்ந்து
    கொண்டால் உளுந்தூர்ப் பேட்டை உமா மகேஸ்வரன் உவந்து அருளுவான்

    ReplyDelete