Saturday, December 26, 2015

Wish You all A Healthy Musical Season

சங்கீத சாம்ராஜ்யத்தில் ஒரு சண்டை, மன்னிக்கவும் ஒரு செண்டை 
சார்! இது டிசெம்பர் மாதம்! 
இசை கமழும் மாதம். 
இல்லை இல்லை 
பொங்கல் மணம் கமழும் மாதம்.  
இல்லை இல்லை. 
சபாக்களில் டிபன் மணம் கமழும் மாதம். 
மாம்பலம் டைம்ஸ் என்னும் பத்திரிகையில் கமழ்ந்த 

ஒரு "கிப்புடு" வின் அலசலை இங்கே பார்க்கலாம். 


 ---- நன்றி  மாம்பலம் டைம்ஸ் 

இந்தப் பதிவினைப் பார்த்தப்பின் 
நீங்களும் ஒரு "சுப்புடு" வாக மாறி 
விமர்சிக்கலாமே 

Monday, October 26, 2015

A Lesson From a Horse

A cosmic god had a horse. The horse was beautiful and also it had many good qualities. But it wanted to be more perfect in every way. It especially wanted to become beauty unparalleled.

One day the horse said to the cosmic god, “0 Lord, you have given me beauty. You have given me other good qualities. I am so grateful to you. But how I wish you could make me more beautiful. I would be extremely, extremely grateful if you could make me more beautiful.”

The cosmic god said, “I am more than ready to make you more beautiful. Tell me in what way you want to be changed.”

The horse said, “It seems to me that I am not well proportioned. My neck is too short. If you can make my neck a little longer, my upper body will be infinitely more beautiful. And if you can make my legs much longer and thinner, then I will look infinitely more beautiful in my lower body. Make me walk comfortably in sand also. My tail is not that beautiful.”

The cosmic god said, “Amen!” Then immediately he made a camel appear in place of the horse. The horse was so disheartened that it started to cry, “0 Lord, I wanted to become more beautiful. In what way is this kind of outer form more beautiful?”

The cosmic god said, “This is exactly what you asked for. You have become a camel.”

The horse cried, “Oh no, I do not want to become a camel I wish to remain a horse. As a horse, everybody appreciated my good qualities. Nobody will appreciate me as a camel.”

The cosmic god said, “Never try to achieve or receive more than I have given you. If you want to lead a desire-life, then at every moment you will want more and more. But you have no idea what the outcome will be. If you cry for a longer neck, thicker tail, better hoof for walking in sand and long legs, this is what will happen. Each thing in my creation has its own good qualities. The camel is not as beautiful as you are, but it carries heavy loads and has a tremendous sense of responsibility.

Among us also there are some very agile personalities who would like to compare themselves with others and feel sorry that they have not been blessed with what others are having though they have a comfortable peaceful life. There is no limit for greediness.

The Sanskrit version 
         – courtesy Sanskrit Bhodhini, Samskruthapracharini sabha, Chittoor

Friday, July 31, 2015

Guru Nanaji Aaradhanam - 31-07-2015Smt.Nadhamuni Gayatri Bharat 
Dedicates this song to Guruji Nadhamuni Nanaji 

Sunday, July 5, 2015

Garuda - Periya Thiruvadi

Vinata [Suparna] and her husband Kasyapa gave birth to Garuda, the carrier of Lord Visnu, and to Anuru, or Aruna, the chariot driver of the sun-god. Kasyapa is the son of Marici, is one of the prajapatis, and is one of the sons-in-law of Prajapati Daksa.
On Salmalidvipa Island there is a salmali tree, from which the island takes its name. That tree is as broad and tall as the plaksa tree--in other words 100 yojanas [800 miles] broad and 1,100 yojanas [8,800 miles] tall. This tree is the residence of Garuda.
Garuda was given elephants and tortoises as eatables, and is a favored devotee of the Lord. Garuda is also said to be an inhabitant of the planet known as Kinnaraloka. The inhabitants of the Kinnara planet have the same features as Garuda. Their bodily features are like those of a human being, but they have wings.
Once upon a time, Garuda, the carrier of the Lord, snatched away a nectar pot from the hands of the demigods in heaven in order to liberate his mother, Vinata, from the clutches of his stepmother, Kadru, the mother of the serpents. On learning of this, Indra, the King of heaven, hurled his thunderbolt against Garuda. With a view to respect the infallibility of Indra's weapon, Garuda, though otherwise invincible, being the Lord's own mount, dropped one of his wings, which was shattered to pieces by the thunderbolt. The inhabitants of higher planets are so sensible that even in the process of fighting they observe the preliminary rules and regulations of gentleness. In this case, Garuda wanted to show respect for Indra; since he knew that Indra's weapon must destroy something, he offered his wing.Nachiar Kovil or Thirunarayur Nambi Temple in Thirunarayur, a village in the outskirts of Kumbakonam in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu and his wife Lakshmi. Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th to 9th centuries AD. It is one of the 108 Divyadesam dedicated to Vishnu, who is worshipped as Srinivasa Perumal and his consort Lakshmi as Nachiyar. The temple is the place where god Vishnu is believed to have initiated Pancha Samskara (religious initiation) to Thirumangai Azhwar. The temple follows Thenkalai mode of worship.

The temple is believed to have been built by Kochengat Cholan of the late 3rd century AD, with later contributions from Medieval Cholas and Vijayanagar kings. A granite wall surrounds the temple, enclosing all its shrines, while it has a 5-tiered rajagopuram, the temple's gateway tower. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

Vishnu is believed to have appeared to the sage Medhavi and married his daughter at this temple, witnessed by Brahma and other gods. Six daily rituals and four yearly festivals are held at the temple, of which the Brahmotsavam, celebrated during the Tamil month of Margazhi (December–January), is the most prominent. The Kal Garuda image in the temple used during the festive occasions is believed to increase in weight seeking 4, 8, 16, 32, 64 and 128 people in succession when the procession comes out of various gates from the sanctum to the main entrance of the temple.


Friday, April 10, 2015

METTLESOME "SRI.MUKTHA SRINIVASAN" AWARDED WITH "KALAI MUDHUMANI" WHO IS ALWAYS YOUNG AT HEART


சிறந்த திரைப்பட விருது, சிறந்த இயக்குனர் விருது, தேசீய திரைப்பட விருது என்ற பலவிருதுகள் பெற்ற அறிய கலைஞர் திரு வெங்கடாச்சாரி ஸ்ரீநிவாஸன் என்ற “திரு முக்தா ஸ்ரீநிவாஸன்”. தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர், சிறந்த எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்று சிறந்த தொகுப்பாளர், மாவட்ட காங்கிரசுத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் குழு துணைத்தலைவர்,  தமிழ் மாநில காங்கிரசின் பொதுச் செயலாளர் என்ற பலவித முக்கியப் பதவிகளை வகித்தவர்  என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இவரது தமையனார் திரு.இராமசாமியின் முயற்சியால் திரைப்படத் துறைக்கு “முக்தா ஸ்ரீநிவாசஸனாக” அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமாத்துறையின் கட்டற்ற கலைகளஞ்சியத்தின் ஒரு இமையமாக விளங்கும் இவருக்கு தமிழக அரசு பண்பாட்டு மையம்  "கலை முதுமணி "  என்ற விருதினை  வழங்கியுள்ளது.
இந்தத் தலைமுறையில் உள்ள நாம் எல்லோரும், அவரது ஆசியையும் அவரது வழிகாட்டலையும் பெற்று பயனடைய, திரு.முக்தா அவர்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி,  அவர் வழி பின்பற்றுவோம்.

Monday, April 6, 2015

Who is Benevolent Karna Or Arjuna

परोपकाराय फलन्ति वृक्षाः परॊपकाराय वहन्ति नद्यः /
   परॊपकाराय दुहन्ति गावः परॊपकारार्थम् इदं शरीरम् //
பிறர்க்கு உபகாரம் செய்தற்காக மரங்கள் பழுக்கின்றன. 
பிறர்க்கு உபகாரம் செய்வதற்காக நதிகள் ஒடுகின்றன. 
பிறர்க்கு உபகாரம் செய்வதற்காக பசுக்கள் பால் சுரக்கின்றன. 
இந்த உடலும் பிறர்க்கு உபகாரம் செய்வதற்காகவே  உள்ளது. 

கலியுகத்தில் பிறர்க்கு உதவுவதன் உள் நோக்கம், தங்களை பெருமையுடன் மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு. 
இதோ இப்படி....

கண்ணனுக்கு கர்ணனின் பரிசுத்தமான இதயத்தைப் பற்றித் தெரியும். கர்ணனுக்கு போருக்கு முன்னால்  தனது தாய் யார் என்பதும் சேர்ந்த இடம் எப்படி என்பதும் நன்றாகவே தெரியும்  மேலும் பாண்டவர்கள் யார் என்று அறிந்தபோதிலும், தன்னுடைய நிலையிலிருந்து மாறாத கர்ணனைப் பற்றி பகவான் கண்ணன் நன்கு அறிந்திருந்தார் .  அதே போல் துரியோதனன், சகுனி ,கர்ணன் இந்த மூவரும் தாங்கள் யார், எதற்காக இந்த ஜென்மம் எடுத்தார்கள்  என்று அறிந்திருந்தும், அந்தந்த  யுகத்தில் எது  அவர்களது பொறுப்போ அதனை உணர்ந்து செயலாக்கினர்; அதனால் பகவான் கண்ணனின் மனதினில் இந்த மூவர்க்கும் ஒரு உன்னதமான் இடம் ஒன்று உண்டு.  தூது சென்ற போது விதுரனை சந்தித்த பின்பு, ப்ரும்ம முஹூர்த்தத்தில் சகுனியின் வீட்டிற்குச் சென்று பல செய்திகளை அறிந்துவந்தார். சகுனிக்கு தனது தவறுகள் எல்லாம் தெரிந்திருந்தும் கண்ணனின் ஆணைப்படி யுத்தத்தினை நன்றாகவே செயலாற்றினான். 
நாம் இப்பொழுது ஈகை என்ற கதைக்கு வருவோம் 

கண்ணன் கர்ணனின் ஈகையை மிகவும் பாராட்டியதை அர்ஜுனனால் பொறுக்கமுடியவில்லை. வெளிப்படையாகவே கேட்டான். "அண்ணா தருமரைக் காட்டிலும் சிறந்தவனா அவன்" என்று வினவினான். அர்ஜுனனுக்கு, கர்ணனின் கொடைவள்ளலின் சிறப்பை உணர்த்த கண்ணன் ஒரு சிறு விளையாடலை நிகழ்த்தினார். மலை அளவிற்கு ஒரு தங்கக் குவியலை மாயையினால் உண்டாக்கினார். ஸூரிய அஸ்தமனத்திற்குள் அந்தக் குவியலை எல்லோருக்கும் தானம் செய்து முடிக்குமாறு அர்ஜுனனிடம் கண்ணன் கூறினார். அன்றய தினம் அர்ஜுனன், எல்லோருக்கும் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தும், தனம் குறையவில்லை. ஆகையால் அர்ஜுனன் சோர்ந்து வருந்தினான் . அப்பொழுது அங்கு வந்த கர்ணனிடம், மிகுதியுள்ள தங்கக் குவியலை தானம் செய்யுமாறு கண்ணன் பணித்தார். உடனே கர்ணன் அங்கு உள்ளவர்களை கூப்பிட்டு, “இந்தக் குவியலை உங்கள் அனைவருக்கும் நான் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பப்படி உங்களுக்குள் அதனை  பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுச் சென்றான். அர்ஜூனன் வியப்புற்றான். ஆகா இவ்வாறு தனக்குத் தோன்றவில்லையே என்று வருந்தினான். அது தான் கர்ணனின் ஈகைச் சிறப்பு என்று கண்ணன் அர்ஜுனன்னுக்குத் தெளிவுபடுத்தினார். 
அர்ஜுனனின் கொடைத்தன்மை, இக்கால டுயுப்லைட்விளம்பரம் போன்று பிறர் அறியச்  செய்வது.   ஆனால் கர்ணனின் ஈகையோ, வலது கை செய்ததை இடது கை அறியாவண்ணம் செய்வதாகும். 
எது சிறந்த ஈகை?
கர்ணனின்  ஈகையா? அல்லது அர்ஜுனின்  கொடுத்தலா?

Wednesday, March 25, 2015

Kanaka Dasa Answer "Who Will Attain Narayana's Abode Vaikunta?"

தாஸர்கள் சமூகம் என்னும் அமைப்பு கன்னட பக்தி இலக்கியத்தைப் பொறுத்த வரை மிகச் சிறப்பான இடம் வகிக்கிறது. அதில் வியாசராஜரின் சீடரான கனகப்பா கடவுள் ஆணைப்படித் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  தாசமூகம் அமைப்பு அவரை கனகதாசராக்கியது.  தனது மாணவர்களில் மிகச் சிறந்தவர் கனகதாசரே என வியாசராஜரே குறிப்பிட்டு உள்ளார்.  ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும், அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது அவருடைய கொள்கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன. எளிமையான பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் கன்னட ஸாஹித்யத்தில் அமைந்தது கனகதாஸரின் பாடல்கள். இன்றும் க்ராமியச் சூழலில் பாடும் பாடல்களாகத் அவரது ஸாஹித்யங்கள் திகழ்கின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பாடா என்னும் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை படைத் தளபதியாகப் பணியாற்றியவர். குழந்தைச் செல்வம் வேண்டி வெங்கடேசப் பெருமானுக்கு சிறந்த வழிபாடுகள் செய்தவர். அதன் பயனாகப் பிறந்த குழந்தைக்கு திம்மப்பா என்று பெயர் வைத்தார். திம்மப்பா சிறந்த தளபதி ஆனார். ஒரு சமயம் திம்மப்பா போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு நினைவு இழந்தபோது கிடைத்த வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்தால் பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் செல்வம், போர் வாழ்க்கை அனைத்தையும் ஒதுக்கினார். இறைப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு சொந்த ஊரான பாடாவுக்கு அருகில் கேசவனுக்கு ஒரு கோயில் கட்டினார். இந்தக் காலகட்டத்தில் தான் திம்மப்பாவின் பெயர் கனகப்பாவாக மாறியது.
கனகதாசர் 15ம் நூற்றாண்டைச் (1506 – 1609) சேர்ந்த வைணவ பக்தர் மற்றும் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர் . கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். உடுப்பி கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணர் மேற்கு நோக்கி காட்சி தர காரணம் இவரே.

ஒரு நாள் வித்வத் கோஷ்டியைச் சேர்ந்த சில பண்டிதர்கள் மோக்ஷ சாதனத்திற்கு ப்ராம்மண ஜன்மம் வந்தால் தவிர ஆகுவதில்லை என்று வாசித்தனர். இது சகல் சாஸ்திரங்களிலும் இருப்பதாக வாசித்தனர். வாதிராஜரும் பாண்டித்யத்தினை மெச்சி நீங்கள் சொல்வது சரி என்றார். பண்டிதர்கள் கனகதாஸரின் மேலுள்ள துவேஷத்தின் காரணமாக அவரது பெயரைச் சொல்லக் கூட தயங்கினர்கள். நிலமையைப் புரிந்துகொண்ட வ்யாஸராஜர் எல்லோரையும் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

"இங்குள்ள ஜனங்களில் யார் வைகுண்டம் செல்வர்?”

இன்னார்கள் தான் மோக்ஷத்திற்குப் போவார்கள் என்று காண்பிக்க யாருக்கும் தைர்யம் இல்லை. பண்டிதர்கள் அல்லாது பாமர ஜனங்களில் எவரேனும் பதில் தெரிந்தால் பதில் சொல்லலாம் என்று கூறினார். அப்பொழுது ஸ்வாகிகள் கனகதாஸரைப் பார்த்து “கனகா இவ்வளவு ஜனங்களில் வைகுண்டத்திற்கு போகக் கூடியவர் யார் என்று சொல்வாயா என்றார். ஒவ்வொருவரின் தகுதிகள் யோக்யதாம்சங்கள் இவை, எவ்வளவு யாக யக்ஞங்கள் செய்துள்ளார்கள் என்று சொல்லி ஒவ்வொருவையும் கேட்க இவர்கள் எவரும் இல்லை என்றார். பிறகு புரந்தரதாஸரைக் காண்பித்து கேட்டார். அவரும் இல்லை என்றார். ஸ்வாமிகள் தம்மையே காண்பித்து, “நான்” என்கிறார். நீங்களும் இல்லை என்றார். பண்டிதர்கள் “மஹா ஸ்வாமி எங்களுக்கும், தாஸருக்கும் உங்களுக்கும் ஒரே சமயத்தில் அவமானம் ஏற்படலாயிற்றே என்றனர்.
ஸ்வாமிகல் கனகரைக் கேட்டார். அவரும் சிரித்துக் கொண்டே “நானு ஹோதரே ஹோதேனு” (நான் போனால் போவேன்) என்றார். ஸ்வாமிகள், புரந்தரர், பண்டிதர்கள் போகமுடியாத இடத்திற்கு இவர் எவ்வாரு செல்ல இயலும் என்று  அனைவரும் பரிகாசம் செய்தனர். ஒரு பண்டிதர் கேட்கிறார் “என்ன உனது சொற்கள் சாஸ்திர வாக்கியமா அல்லது ப்ராசீன கன்னடமா” என்று வினவ, “ப்ராமணோத்தமர்களே! பண்டித சிகாமணிகளே ஏன் கோபப்படுகிறீர்கள்  அந்த வாக்கித்தின் பொருள் இதுதான். “நானு எம்புவது ஹோதரே ஹோதேனு. இத்தரே இர்தேனு” (நான் என்பது போனால் போவேன். நான் என்பது இருந்தால் இங்கேயே இருப்பேன் என்று சொல்லி சபைய நமஸ்காரம் செய்தார்.

Tuesday, February 17, 2015

SIVARATRI Special song of RAGASRI


Pujyasri Srinivasa Raghavan, 
a great musicologist and a comtemporary vaageyakarar of 
Sarvasri G.N.B, Aandavan Pitchai and Adhisesha Iyer 
has composed this song for Sivarathri. 
Let us all get the blessings of Lord Siva on this 
Sivarathri day by singing this song. 
Sri.Srinivasaraghavan has composed more than 500 songs with the Ankitham “Ragava Maruga” / “Ragasri”.

Friday, January 30, 2015

Tale of Tulasi & Jalandara

துளசி என்ற மருத்துவத் தாவரத்தின் வ்ருத்தாந்தம், தேவ லோகத்தின் அரசனான இந்திரனிடமிருந்து தொடங்குகிறது.
தன்னை எவரும் ஒருகடவுளாக மதிப்பதில்லை என்பதே இந்திரனின் கவலை, படைப்புக்கு அதிபதியான ப்ரும்மாவிடமும் காக்கும் கடவுளான நாராயணனிடமும் தனது வல்லமையைக் காட்ட சிறிதே அச்சம். அழிக்கும் தொழிலுக்கு அதிபதி சர்வேஸவரன் என்று தவறாக எண்ணி ஹரனை வம்புக்கு இழுக்க நினைந்து, தனது வல்லமையில் இறுமாப்பு அடைந்து கைலையை அடைந்தான். சர்வ வல்லமைப் படைத்த சிவபிரான் இதனை அறிந்து, இந்திரனுடன் சிறிதே விளையாட தனது திருவிளையாடலை துவக்கினார். 
தன்னுடைய சிறிய அம்சத்தை ஒரு காவலாளியாக மாற்றி இந்திரனை கைலாய வாயிலில் எதிர் கொண்டு அழைத்தார். வேகமாக உள்ளே செல்ல நினைத்த இந்திரனைத் தடுத்து அவனுடன் சண்டை சச்சரவுக்கு தொடங்கினார். தனது சக்தியில் செருக்கு கொண்ட இந்திரன் கைலாயத்தினுள்ளே செல்லமுடியாததால், கோபம் கொண்டு, தனது வஜ்ராயுதத்தை சிவனின் அம்சமான காவலாளியின் மீது ப்ரயோகம் செய்தான். சாம தான பேத தண்டம் என்ற நான்கும் அவரிடம் வேலை செய்யாத போது, சிவனின் சக்தியை உணர்ந்தான். அதற்குள் சிவனின் ரௌத்ரம் ஒரு தீப்பிழம்பாக வெளிவர, இந்திரன் தான் செய்த செயலுக்கு வருந்தி அஞ்சி, தனது தவறை உணர்ந்து அவர் பாத கமலங்களில் சரண் அடைந்தான்.
வேறு வழி இன்றி அந்த கோபக்கனலை வருணன் தனது சமுத்திர ஸாஹரத்தில் ஏற்றுக்கொண்டான். முடிவு ஒரு குழந்தை ரூபத்தில் ப்ரதிபலித்தது. நீரின் மேல் மிதந்துவந்த அந்தக் குழந்தை எல்லா லோகங்களும் கேட்குமாறு அலற ஆரம்பித்தது. அந்த அலறலை கேட்கச் சகியாது, ப்ரும்மா தனது கையில் எடுத்து சமாதானப்படுத்த முயற்சித்தார். அலறல் நின்றபாடில்லை. அதன் வடிவம் பெரிதாய் வளர்ந்து கையில் எடுத்து பராமரிக்கும் நிலையில்லாது கனத்தது. மேலும் ப்ரும்மாவின் முகத்தில் உள்ள ரோமத்தைப் பிடித்து இழுத்தது, அவர் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்தது. அதனால் அந்தக் குழந்தைக்கு “ஜலந்தரன்” என்று பெயரிட்டு அழைத்தார்.

நாட்கள் உருண்டோடின. ஜலந்தரன் வளர்ந்தான். அவன் பலமும் பெருமையும் வேகமாக வளர்ந்தன. தனது வலிமையால் யாரைத் தோற்கடிக்கலாம் என்ற நினைப்பும் கர்வமும் அதிகரித்தது. தேவர்கள் அவன் வலிமையைக் கண்டு தங்கள் பக்கம் சேர்க்க நினைத்தனர். அவனோ அஸுரர்கள் பக்கம் சேர யத்தனித்தான். அவன் திருமண வயதை அடைந்ததும், ராவணனின் தாய் மாமன் காலநேமியின் மகளான விருந்தாவை, மணக்க விரும்பினான். தேவ சபையில் உள்ள அப்ஸர ஸ்த்ரீகள் பொறாமைப் படும் அளவுக்கு அழகு பெற்ற அவள், விஷ்ணு பக்தை. அஸுர குரு சுக்ராச்சாரியார் ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.
வ்ருந்தாவின் விஷ்ணு பக்தியினால் பெற்ற யோக சக்தியினாலும், அவளது பதிவ்ருதை பெருமையாலும், ஜலந்தரனின் பலம் பிறர் அறியாவண்ணம் மேலும் பெருகிற்று. அஸுர குருவினால் அஸுரர்களுக்கு அரசனாக்கப்பட்டான். தேவேந்திரனின் இந்திரபதவியும் பறிபோனது. அவனது வஜ்ராயுதமே செயலற்றுப் போயிற்று. தேவர்கள் அனைவரும் செய்வதறியாது ப்ரும்மதேவரிடம் ஓடினர். ப்ரும்மாவின் தலைமையில் சிவனிடம் சென்று முறையிட்டனர்.
 
தேவர்களின் கோரிக்கைகளை ஒப்புக் கொண்ட சிவன் ஜலந்தரனிடம் பேச சென்றார். எனினும் ஜலந்தரன் வெளிப்படையாக  மிகவும் கர்வத்துடன் சிவனனை அவமதித்துவிட்டான். துறவியான உனக்கு மனைவி எதற்கு என்று சிவனை ஏளனம் செய்தான். மேலும் சிவனின் சமாதானப் பேச்சினை மறுத்துவிட்டான். தனது சக்தியால் சிவனையும் தேவ கணங்களையும் பூத கணங்களையும் மாயையால் கட்டி விட்டான்.
அத்துடன் நில்லாமல் கைலாயத்திற்கு சிவன் வடிவில் சென்று “நான் ஜலந்தரனை வென்று விட்டேன் என்று பார்வதியிடம் ஏளனமாகப் பேசினான். தனது ஞான த்ருஷ்டியால் எல்லாம் அறிந்த பார்வதிதேவி, தனது கத்தியை கையில் ஏந்தி ஜலந்தரனைக் கொல்ல யத்தனித்தாள். ஜலந்தரன், தான் ஏற்படுத்திய மாய சக்தியாலும், சிவனுடன் போர்புரிந்ததாலும், தனது சக்தி குறைந்ததை அறிந்த அவன் அங்கிருந்து ஒடிவிட்டான். விஷ்ணு அங்கு வந்த போது, தேவி பார்வதி மூலம் நடந்தது அனைத்தும் அறிந்தார்.  சிவபெருமானையே மாயையால் கட்டும் அளவுக்கு அவனிடம் சக்தி எவ்வாறு உருவாயிற்று என்று பார்வதி தேவி, நாரணனை வினவினாள்.  

ஜலந்தரன் ஒவ்வொருதடவை போர் செய்யும் பொழுதும், வ்ருந்தை என்னை பூஜித்தும், தனது பதிவ்ருதா சக்தியாலும் கணவனைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றான், என்று நாரணன் பார்வதியிடம் சொன்னார். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜலந்தரனின் தோல்விக்கு வழி செய்ய அங்கிருந்து சென்றார். மறுநாள் மறுபடியும் சிவனும் ஜலந்தரனும் சண்டையை தொடங்கினார்கள். வ்ருந்தாவும் தனது நாராயண பூஜையைத் தொடங்கினாள். அப்பொழுது நாராயணன் ஜலந்தரனின் ரூபத்தில் உள்ளே நுழைந்து விருந்தையிடம் “நான் இன்று சிவனை மறுபடியும் வென்று விட்டேன். வெற்றியைக் கொண்டாடுவோம் என்று சொல்லி அவளது பூஜையை நிறுத்திவிட்டார். அச்சமயத்தில் சிவன் ஜலந்தரனின் மார்பில் தனது சூலத்தைச் செலுத்த, ஜலந்தரன் போரில் இறந்தான்.

அந்த சமயத்தில் வ்ருந்தா ஏதோ ஒரு வினோதமான உணர்வை உணர்ந்தாள். தனது பதிவ்ருதா சக்தியினால் எல்லாவற்றையும் அறிந்தாள். அவள் முன் இருந்த நாராயணர் தனது சுய உருவிற்கு வந்தார். அவளது கோபதாபத்தைக் கண்டு திகைத்து நின்றார். “என் முன் கல்லாய் நிற்கின்றாய். ஏன் என் கணவனைக் கொல்ல இந்த நாடகமாடினாய்? ஆகவே நீ கல்லாய் மாறி பூ உலகில் இருப்பாய்” என்று பதிவ்ருதா சக்தியால் நாராயணரை சபித்தாள். விளைவு, நாம் எல்லோரும் பூஜிக்கும் சாளக்ராமக் கல்.
 “தவறுசெய்பனுக்கு உறுதுணையாக இருந்ததால் தான் உனக்கு இந்த துக்கம். மேலும் சிவபெருமானை நிந்தித்ததோடு நில்லாமல், பார்வதி தேவியிடம் தவறாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட அனர்த்தம்” என்று சொல்லி வ்ருந்தாவை நாராயணர் சமாதானம் செய்தார்.
 
இருப்பினும் தனது பக்தையை ஏமாற்றிவிட்டோமே என்று மனம் வருந்தினார். அதனைக் கண்ட சிவபெருமான் கூறலானார். “ஜலந்தரன் எனது அம்சம். அவன் என்னிடமே மறுபடியும் வந்துவிட்டான். பூவுலகில் கண்டகி நதியில் சாளக்ராமமாக உருவெடுத்து உம்மை பூஜிப்பவருக்கு அருள் வழங்குவீறாக. மேலும் வ்ருந்தா “துளஸீ” என்ற பெயரில் மருத்துவ தாவரமாக எங்கும் பரவி இருப்பாள். துளசி பூஜையில்லாமல் உம்மை பூஜிப்பவரின் பூஜை நிறைவு பெறாது” என்று சிவபெருமான் அருளினார். வ்ருந்தா ஜலந்தரனைப் பிரிந்து வருந்தியதை, தனது அடுத்த அவதாரமான ராமாவதாரத்திற்கு நாரணன் பயன் படுத்திக் கொண்டார். ராவணன் சீதையை சிறை எடுக்க, சீதையைப் பிறிந்து மன உளைச்சலையை அடைந்து அந்த அவதார மகிமையை எடுத்துறைத்தார்.