Wednesday, July 25, 2018

Pujyasri Nadhamuni Nanaji Aaradhanam - 28.07.2018




On 28th July 2018 
chanting of Vishnu Sahasranamam (14.00 to 16.00 hrs) &
Naama Sankeerthanam (16.30 to 19.30 hrs)
can be seen live through the following link.
https://www.youtube.com/channel/UCnZ5dyFDoPxRU_723r37ERw/live

Saturday, July 21, 2018

GOvardhana Giridhara Govinda

புராதன மதங்களின் புனிதத்தன்மை, உண்மையான நம்பிக்கை என்ற நறுமணம், உலகம் முழுவதும் உள்ளது. மவுண்ட் ஃபிஜி ஜப்பானில், மவுண்ட் ஒலிம்பஸ் கிரேக்கத்தில், மற்றும் ஆஸ்திரேலியாவில் குஸ்கோ, பெருவில்  உலுறு சிகரம் என பல சிகரங்கள்  புராதன ஞானத்தையும் புனிதத்தன்மையும் அதே உணர்வுடன் பூமி முதலீடு செய்துள்ளது. புனிதத்தன்மையின்  சாராம்சத்தை அறிய வரலாறு, தொன்மை என்ற இரண்டும் நமக்கு உதவுகிறது.
இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக வ்ரஜ பூமியிலுள்ள கோவர்தன மலையை ஒரு புண்ணிய பூமியாக வணங்குகின்றனர். அந்த சிகரமும் அங்கு வரும் எல்லோருக்கும் அருள் பாலித்து வருகிறது. சமஸ்கிருதத்தில் வர்தன என்பது அதிகரித்தல் என்பதாகும். கோ என்பது பசுவைக் குறிக்கும். அந்த மலைக்கு வருபவர்களுக்கு பசு போல் வளமையை அளித்து நன்மை அளித்து பேரின்பத்தை அதிகரிக்கிறது என்பதாகும், கோவர்தன கிரியை மலைகளின் ராஜாவாகச் சொல்லுவர். மலையைச் சுற்றி ப்ரதக்ஷணாமாக வருவதைபஞ்ச கோஷி பரிக்ரமாஎன்பர். புலன்களை அடக்கி மனதை ஒருமைப் படுத்தல், தூய்மையாக ஆக்குதல் என்பவைபஞ்ச கோஷி பரிக்ரமாவின் முக்கிய அம்சங்களாகும்.


பாண்டுவிற்கு பீஷ்மர் கோவர்தனமலையின் தொன்மையையும் சிறப்புகளையும் கூறும்பொழுது த்ரோணாசலத்திலிருந்து எவ்வாறு வ்ரஜ பூமிக்கு இடம் பெயர்ந்தது என்ற வ்ருத்தாந்த்தத்தை கூறுகிறார். ஒருசமயம் காசியிலிருந்து புலஸ்திய மகரிஷி சால்மலி என்ற இடத்திற்கு வந்திருந்தார். அங்கு த்ரோணாசலமும் கோவர்த்தன கிரியும் சேர்ந்து இயற்கையின் அழகையும் செழுமையையும் உயர்த்திக் காண்பித்தது. இடத்தின் தொன்மையையும் கண்டு அங்குள்ள கோவர்தன கிரியை காசிக்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டார். கோவர்தன கிரியின் தந்தையான த்ரோணாசலத்திடம் வினவ அவரும் அதற்கு இசைந்தார். கோவர்தன கிரிக்கு இடம் மாற ஒப்புதல் இல்லை. தந்தையின் சொல் பணிந்து இசைந்தது. தன்னைத் தூக்கிக் கொண்டு செல்ல பணித்தது. ரிஷியால தூக்கமுடியாது என்று நினைத்தது. மேலும் ஒரு நிபந்தனையை விதித்தது. எந்த இடத்திலும் தன்னை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் அங்கேயே நின்றுவிடுவேன் என்றது. புலஸ்தியரும் அதற்கு சம்மதித்தார். வ்ரஜ பூமியருகே வரும் பொழுது கோவர்தன கிரி அங்கு இருந்து விடலாம் என்று நினைத்தது. அந்த இடத்தில் மலஜலம் கழிக்குமாறு புலஸ்தியரை சம்மதித்தது. அவரும் நிஜம் என்று நம்பி அங்கு வைத்தார். பிறகு அங்கிருந்து அசைய முடியாதபடி மாறிவிட்டது. கோவர்த்தனம் தன்னை ஏமாற்றி விட்டதால் கோபமடைந்த முனி அதற்கு சாபம் கொடுத்தார். ஒரு நாளைக்கு ஒரு கடுகு அளவு பூமியில் பதிந்து போகக்கடவது என்றார். கலியுகம் தொடங்கி பத்தாயிரம் வருடங்களில் மலை முழுவதும் பூமியின் அடியில் சென்றுவிடும் என்பது ஒரு வ்ருத்தாந்தம்

சத்ய யுகத்தில் ராமர் சேது பந்தனம் செய்து கொண்டிருந்தார். ஹனுமான் பெரிய பெரிய மலைகளைப் பெயர்த்து சேதுக் கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்தார். அச்சமயம் கோவர்த்தன கிரியை ராம சேவையில் ஈடுபட அதன் சம்மதத்தை கேட்டு அதனைத் தூக்கிச் செல்ல ஹனுமன் விழைந்தார். அதற்குள், சேது பந்தனம் நிறைவடைந்ததாக செய்தி கிடைத்ததால், அந்தச் செயலை நிறுத்தினார்
மிகவும் வருத்தமடைந்த கோவர்தன கிரி ராமரை வினவ, அடுத்த யுகத்தில் தனது ஸ்பரிசம் கிடைக்கும் என்று வாக்குக் கொடுத்தார். த்வாபர யுகத்தில் ராமர் கொடுத்த வாக்கை நிறைவேற்ற க்ருஷ்ணாவதாரத்தில் தனது நித்ய லீலைகளை கோவர்தன மலைக்கருகிலேயே நிறைவேற்றிக் கொண்டதோடல்லாமல், இந்திரனின் மமதையை அடக்க ஏழு நாடகள் கோவர்தன மலையை தூக்கி நிறுத்தி நின்றார்.