Monday, November 22, 2010

Humble Request to Parthivasa - Bikshaam Dehi Dayasahara

சிட்னியில் வசிக்கும் (Prof.Sundaram) சுந்தரம் மாமா அவர்கள் பகவான் ஸாயியின் பரிபூர்ண ஆசி பெற்றவர். அவர் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களும் நாமாவளிகளும் பகவான் ஸாயி அவர்களை துதித்து வழங்கியுள்ளார். அவரது பல பாடல்களுக்கு நான் இசை வடிவம் கொடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். வருகின்ற இருபத்து மூன்றாம் தேதி பகவான் ஸாயி அவதரித்த நன்நாள். அந்த நன்னாளிற்காக சுந்தரம் மாமா இயற்றி நான் இசை வடிவம் கொடுத்த பாடலை காயத்ரி பரத் பாடியுள்ளார். இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இசைகிறேன்.

கார்த்திகை வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் என்றால் திருவண்ணாமலை தீபம் தான். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பத்து நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதோ நாமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம். 
எல்லோருக்கும் எங்களது கார்த்திகை வாழ்த்துக்கள்.

Sunday, November 7, 2010

மான்பூண்டியா பிள்ளையின் கஞ்சிரா

அஹா என்ன அருமையான கச்சேரி. பாடியவர் குரல் வளமைதான் என்னே? என்று பல புகழாரம். அவரது அன்றைய கச்சேரி நன்றாக அமைந்ததற்கு காரணம் பக்கம் பலமாக இருந்ததுதான்.

பக்கவாத்யங்களில் ஒன்றான பக்கா வாத்யமான கஞ்சிராவை பார்த்திருக்கிறேன். வாசித்ததை கேட்டுள்ளேன். நானும் அதனின் ஒலியை எழுப்பியுள்ளேன். ஆனால் கஞ்சிராவின் சரிதத்தை நான் படித்ததில்லை. ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு ப்ரமிப்பை நமக்கு “லலிதாராம் என்பவர் "carnaticmusicreview" என்ற இணையதளத்தில் “கமகம் என்ற தலைப்பில் தூய தமிழில் எளிய நடையில் உயிரோட்டமான வகையில் கொடுத்துள்ளார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

Thursday, November 4, 2010

குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

எனது பள்ளி நாட்களில் எந்த ஒரு இசைக்கருவியைப் பார்த்தாலும் அதை வாசிக்க ஓர் அவா எழும்.  அன்றைய சூழ்நிலையில் அதற்கான ஏது ஒன்றும் அமையவில்லை. வயலின் ஒரு நிலைவரை வந்து அதனை தொடர இயலவில்லை. துரையா என்ற ஒரு நண்பர் அவரது கிதார் என்ற அயல் நாட்டு இசைக் கருவியைக் கொடுத்து அதில் கர்நாடக இசையை வாசிக்க ஊக்கப்படுத்தினார். பிறகு பலவித காரணங்களால் அதையும் தொடர முடியவில்லை. புல்லாங்குழல் வாசிக்க ஒரு அவா எழுந்தது. திருவிழாவில் விற்ற புல்லாங்குழல் தான் கிடைத்தது. அதையும் விடவில்லை. எங்கள் இல்லத்தில் இருந்த ஒரு “கல்யாணி மேள ஹார்மோனியத்தில் பஜனைப் பாடல்கள் வாசிக்க ஆரம்பித்தது இன்றுவரை நிலைத்தது. எனக்கு ஒரு மன அமைதியை தந்தது. இன்றும் தருகிறது.
இது என்ன ஹார்மோனியமா அல்லது வயலின் என்ற இசைக்கருவியா அல்லது கணினி ஏற்படுத்தும் கருவியா அல்லது ......... இல்லை; உங்கள் கற்பனை சக்திக்கு விட்டு விடுகிறேன்.
புல்லாங்குழல் வாசிப்பதில் இருந்த மோகம் என்னை சீட்டி அடிப்பதில் ஊக்குவித்தது. அன்றைய நாட்களில் பெரியவர்கள் முன் செய்தால் அது ஒரு அவமரியாதையான செயலாகக் கருதினர்.  ஆனால் இன்றோ ஒரு முழுநேர கச்சேரியாக பலர் இதைச் செய்கின்றனர். பித்துக்குளி முருகதாஸ் அவர்களை  எனது மானசீக குருவாகக் கொண்டு ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாட பயற்சி செய்தேன். கடவுள் அருளினால் நன்கு அமைந்தது. ஹார்மோனியத்துடன் சீட்டியைச் சேர்த்தால் எப்படியிருக்கும். இதோ ஒரு முயற்சி.

Happy Deepavali

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்றைய நன்னாள் பகவான் க்ருஷ்ணர் நரகாசுரனை வென்று வதைத்த நாள். நம்மை தீமைகளிலிருந்து காத்த நன்நாள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதர் 1835ம் வருடம் அவரது சிஷ்யர்கள் “மீனாக்ஷி மே முதம் என்ற கமகக்ரியா ராக க்ருதியினை பாடும் பொழுது “மீன லோசனி பாச மோசினி என்று பாடும் பொழுது “சிவே பாஹி என்று சொல்லிய வண்ணம் இறைவன் திருவடியை அடைந்த நாள். அவரது நோட்டுஸ்வரம் மிகவும் ப்ராபல்யமானது. ஸோமாஸ்கந்தம் என்ற நோட்டு ஸ்வரபாடலை முயற்சி செய்துள்ளேன்.