Sunday, April 28, 2013

WHERE IS GOD? STONE OR SANCTITY?

கடவுள் எங்கே உள்ளார்? 
விக்ரஹத்திலா அல்லது அங்குள்ள ஸாந்நித்யத்திலா ?

நாம் எல்லோரும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரத்தையாக பகவானை தரிசிக்கிறோம். அங்குள்ள மூர்த்தியில் பகவான் ப்ரத்யக்ஷம் என்று சிலரே அனுபவிக்கின்றனர். ஏனையோர் அதனை, தினம் நாம் செய்யும் பல செயல்களில் ஒன்றாக நினைக்கிறோம். இன்றய நிலைப்பாட்டில் நம்மில் பலர் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்கள், சேவார்த்திகள் என்ற பலதரப்பட்ட வகைகளில் உள்ளோம். இந்த மூன்றுதரத்தாரும், உள்ளே இருப்பது கடவுள்தான் வெறும் விக்ரஹம் இல்லை என்று நினைத்தால், நிர்வாகிகள் கோவிலுக்கு வரும் செல்வத்தை ஒழுங்காகச் செலவிடுவர். அர்ச்சகர்களும் ஸ்ரத்தையாக பூஜை செய்வார்கள். சேவார்த்திகளும் கோவிலுக்குச் சென்று வம்பு பேசுவதைத் தவிர்ப்பார்கள். நடைமுறையில் மூவரும் தவறு இழைக்கின்றனர். ஒருவர் செய்யும் தவறுக்கு மற்றொறுவரைக் காரணம் சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.
பகவான் ஸ்ர்வ வ்யாபி. அங்குள்ள விக்ரஹத்தில் அவரது ஸாந்நித்யம் ஏற்படுகிறது. நாமும் ஹிரண்யகசிபுவைப் போல், இங்கே அந்தக் கடவுளை வரச் சொல் என்று நாத்திகம் பேசுதல் எவ்வளவு அறியாமை. அந்த ஸாந்நித்யம் ஆராதிப்பவரின் ஸ்ரத்தையையும் பக்தியையும் பொருத்தது. அவர்களது உதாஸீனத்தினால், நம்முடைய பெரியவர்களால் உண்டாக்கப்பட்ட ஸாந்நித்யம் அழிகின்றது. ஆகையால் வெறும் விக்ரஹமாய் மாறிவிடுகிறது. சிலை திருடுபவர்கள் அந்தச் செயலை நன்கு செய்து, அதனை ஒரு காட்சிப் பொருளாய் மாற்றி இருக்கும் இடத்தை மாற்றுகின்றனர் .
சிக்கல் சிங்காரவேலனின் க்ஷேத்திரத்தில் ஒரு வயதான மாது ஆலயதரிசனத்திற்கு வரும் ப்ராமணர்களுக்கு தினமும் போஜனம் செய்வித்து வந்தாள். அந்த மாதுவிற்கு இருந்த ஒரே சொத்து என்பது அந்தப் பெரிய சத்திரம் போன்ற வீடு ஒன்றுதான். அவர்களது நற்பணியைப் பாராட்டி அந்த ஊரிலுள்ள வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்கள் அவர்களால் முடிந்த உதவியை அந்த மாதுவிற்குச் செய்து, ப்ராஹ்மண அன்னதானம் தினமும் நடந்துவர ஏதுவாய் இருந்தனர். ஒரு நாள் போஜனத்திற்காக எல்லா ப்ராஹ்மணர்களையும் உட்கார வைத்து இருந்தார். திடீரென்று மணி அடிப்பதை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் ஒடினாள். “என்ன செய்தாய் என்று ஒரு அதட்டல். ஆவேசமான் ஒரு பேச்சு. அர்ச்சகர் பயந்துவிட்டார். "குளித்த ஜலத்தை சாப்பிடுவாயா" என்று சிங்காரவேலன் கேட்கிறார் என்று வினவி அந்த மூதாட்டி அந்த அர்ச்சகரை அதட்டினாள். அர்ச்சகர் தன் தவற்றை ஒப்புக் கொண்டார். அபிஷேகம் செய்த பாலை நிவேதனத்திற்கு வைத்திருந்தார். அந்த மூதாட்டிக்கு அங்குள்ள மூர்த்தி ஸாந்நித்யமுடையது மாத்திரமல்ல பேசக் கூடயதாகவும் இருந்தது. ப்ரதி தினம் ஆராதனை செய்யும் அர்ச்சகரிடம் இல்லாதது அந்த மூதாட்டியிடம் இருந்தது.  இறைவனின் அந்த வாஞ்சை அவளுக்கு உண்டு என்றால் அந்த பக்தியே காரணம். அர்ச்சகர் நினைத்த்து ஒருவிக்ரஹமாய். அவள் நினைத்து ஆராதித்தது அந்த ஸாந்நித்யத்தை. 
நம்பிக்கை என்பதை மூன்றாவது கையாக உணராவிட்டால், மனிதனுக்கு உள்ள இருகையும் உபயோகப்படாது. எல்லோரிடமும் நம்பிக்கை உள்ளது. மனிதனுக்கு மனிதன் அந்த விகிதாசாரம் மாறுகிறது.
ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராணம் என்ற தொகுப்பிலிருந்து நான் படித்து அனுபவித்தது. தொகுத்து புத்தகவடிவில் வழங்கியுள்ள நண்பர் சீதாராம ஸாஸ்த்ரி அவர்களுக்கு நன்றி. 




Saturday, April 27, 2013

OH GOD! WHERE ARE YOU?


பலன் கொடுப்பது கடவுளே
சிறிது நாட்கள் முன் நான் எனது பால்ய நண்பர் நாராயணன் என்பவருடனும், யோகா குரு ஸ்ரீதர் அவர்களுடனும் களஞ்சேரியில் உள்ள வேத வித்யா குருகுலத்திற்குச் சென்றிருந்தோம். 
வேதங்களைப் பற்றிய பல உண்மைகளை, விஷயங்களை அங்கு கற்று கேட்டு அனுபவிக்கலாம். திரு.நாராயணன் அவர்கள் திரு. சீதாராம ஸாஸ்த்ரி என்பவரை அங்கு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  “ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண ஸாரத்தைப் பற்றி பல புத்தகங்களை ஸாஸ்த்ரி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். எந்தவிதமான ஆரவாரமோ விளம்பரமோ சிறிதும் இல்லாமல் ஒரு குருகுலத்தையும் நடத்தி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மாதிரிக்கு ஒரு புத்தகத்தை எனக்கு அளித்திருந்தார்கள். இருநூற்று அறுபது பக்கங்கள் கொண்ட அப்புத்தகம், பல ஆண்டுகள் குருகுல வாசம் செய்து கற்க வேண்டிய பல விஷயங்களை எளிய முறையில் நமக்கு தெரிவித்துள்ளது.
அதில் வந்துள்ள ஒரு விவாதம். அதன் மூலம் நமக்கு ஒரு செய்தி. கடவுள் எங்கே காட்டு என்று சொல்லும் ஒரு படித்த மடையனை மாடு துரத்தியது. தற்காப்புக்காக கோவிலுக்குள் நுழைந்தான். பலநாட்களாய் ஏங்கி எதிர்பார்த்த ஒரு நல்ல விஷயம் நடந்தேறிற்று. மெதுவாக கடவுளை நம்ப ஆரம்பித்தான். ஈஸ்வரனே பலன் கொடுக்கிறாரென்றால் பலன் ஏற்படும் காலத்தில் அவரே நேரில் வந்து கொடுக்கட்டுமே என்று கேட்கக் கூடாது. அப்படியே அவர் நேரே வந்தாலும் நம்மால் அவரை அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாது. சில பக்தர்களுக்கு அவரவர் உபாஸ்யமூர்த்தியாக ஆவிர்ப்பவித்து அனுக்ரஹம் செய்திருப்பதாகவும் புராணங்களிலும் பக்த சரித்திரங்களிலும் தெரிந்துள்ளது. இதற்கு ஏற்ற ஒரு நிகழ்வினை வெகு நயம் பட தமிழில் கொடுத்துள்ளார். பலரும் படிக்க ஏதுவாய் அதனது ஆங்கில மொழி பெயர்ப்பை கீழே கொடுத்துள்ளேன். நான் ரசித்தேன். உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, April 24, 2013

RISHABAVATHAR - MAHAVISHNU'S 9th AVATHAR

இன்று மஹாவீர் ஜயந்தி. மஹாவீர் ஜன்ம கல்யாண் என்றும் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் சுக்லபக்ஷ பதிமூன்றாம் நாள் கடைசி தீர்த்தங்கர்ரராக மஹாவீரர் ஜனனம். 
இவரைப்பற்றிய ஒரு தொகுப்பு

ஹிந்து தர்ம வழக்கப்படி எந்த ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும் போதும் ஸங்கல்பத்துடன் துடங்குவோம். இந்த ஸங்கல்பத்தில் வரும் பல சொற்களை ஆராய்ந்தால் அதன் பின்னணி, கீழ் சொல்லப்படும் வ்ருத்தாந்தத்திற்கு ஒத்துவருவது தெரியும். ஸ்ரீமன் நாரயணனின் ரிஷபாவதாரத்தை ஆராய்ந்தால் ஜைன மதம் எவ்வாறு ஸ்தாபனம் ஆயிற்று என்ற பல சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கும்.
நம்மில் பலர் அறிந்தது மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்று. ஆதி புருஷ அவதாரம் தொடங்கி கல்கி முடிவாக அவர் எடுத்தது இருபத்து நான்கு அவதாரங்கள். அதில் ரிஷபாவதாரம் ஒன்பதாவது அவதாரமாச் சொல்லுவர். நாபி என்ற அரசனுக்கும் மேருதேவிக்கும் ஸ்ரீமந் நாரயணன் “ரிஷபன் என்ற நாமத்துடன் அவதரித்ததாக ஸ்ரீமத்பாகவத புராணம் கூறுகின்றது.
ஐந்தாவது ஸ்கந்ததில் பாகவத புராணத்தைச் சொல்லும்போது, ஸ்வாயம்புவ மனு தொடங்கி ப்ரியவ்ரதன் வழியாக பத்து பிள்ளகள் ஜனனம். அதில் கவி, மாவீரன், சவனன் என்ற மூவர் பகவானை த்யானிக்க சந்நியாசிகளாய் மாறினர். மற்றய ஏழு புதல்வர்களுக்கு ஏழு த்வீபங்களில் அரசர்களாய் பட்டாபிஷேகம் செய்வித்து ராஜ்யத்தை மகன்களிடம் ஒப்படைத்து சந்யாஸ்ரமத்தை மேற்கொண்டான். ஜம்பூத்வீபத்தை ஆண்ட ஆக்னீதரன் பூர்வசித்தி என்ற அப்ஸரஸ் ஸ்த்ரீயை மணந்தான். பூர்வசித்திக்கு ஒன்பது மகன்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனான நாபி மேருதேவியை மணந்து “ரிஷபன் என்ற மகவைப் பெற்றான். நாராயணரின் அம்சமான் ரிஷபன் வெகுநாட்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து பின்பு, தனது முதல் மகனான பரதனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து திகம்பரனாகக் காட்டில் ஸ்ஞ்சரித்து காட்டுத் தீயில் ப்ரவேசித்து மறைந்தார்.
ரிஷப பகவான் நல்ல நல்ல உபதேசங்களை செய்து சஜ்ஜனங்களை முக்தி பெரும்படி செய்து பரந்தாமத்திற்குச் சென்றார். அவருடைய கடைசி காலத்தின் “அவதூத க்ரியைகளப் பார்த்து “அர்ஹன் என்னும் பெயருடைய அரசன் “அர்ஹத என்ற ஒரு ஸாஸ்திரத்தை இயற்றினான்.  அதுவே “ஜைன ஸாஸ்திரம் என்று ப்ரசித்தி 
ஆயிற்று.


Tuesday, April 23, 2013

MAANDAVA RISHI became AANI MAANDAVAR


ஆனிமாண்டவரும் தர்மதேவதையும்
நான் சிறுவனாக இருந்த போது, எனது தாய் தும்பி போன்ற சிறு பூச்சிகளை நான் துன்புருத்தாமல் இருப்பதற்காக “ஆனி மாண்டவர் என்ற ஒரு ரிஷி மஹானைப்பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான பத்ம புரணாக் கதைத் தொகுப்பினைச் சொல்லுவார்கள்.
மாண்டவ ரிஷி சிறு வயதில் செய்த தவற்றினால், கழுவில் ஏற்றப்பட்டார் என்ற ஒரு செய்தியைச் சொன்னார். அதன் பின்னணியில் உள்ள வ்ருத்தாந்தத்தை இன்று அறிந்தேன். அதனை உங்களுக்கும் தெரிவிக்கிறேன். இதனை முன் அறிந்தவர்கள் இந்தச் செய்தியில் ஏதேனும் பிழை இருந்தால் சொல்லலாம். அதனைச் சரி செய்து கொள்கிறேன்.
நாம் அறிந்தது 18 புராணங்கள். உடலின் கூற்றுகளை இந்த 18 புராணங்களின் உருவகமாகக் கூறுவது ஒரு பண்டைய வழக்கம்
ப்ரஹ்ம புராணம் – முன் நெற்றி
பத்ம புராணம் - இதயம்
விஷ்ணு புராணம் – வலது புஜம்
சிவ புராணம் – இடது புஜம்
ஸ்ரீமத்பாகவத புராணம் – இரண்டு நேத்ரங்கள்
நாரத புராணம் – நாபி
மார்கண்டேய புராணம் – வலது கால்
அக்னி புராணம் - இடது கால்
பவிஷ்ய புராணம் – வலது முட்டிக்கால்
ப்ரஹ்மவைவாரி புராணம் – இட்து முட்டிக்கால்
லிங்க புராணம் – வலது கணுக்கால்
வாராஹ புராணம் – இட்து கணுக்கால்
வாமன புராணம் – ரோமம்
கூர்ம புராணம் – சருமம்
மத்ஸ்ய புராணம் – வயிறு
கருட புராணம் – ம்ஞ்சையும் கொழுப்பும்
ப்ரஹ்மாண்ட புராணம் – எலும்பு
 பத்ம புராணக் கதைத் தொகுப்பில் வருவது மாண்டவ மகரிஷியின் சரித்திரம். மாண்டவ மகரிஷி, வசிஷ்டருக்கு சமமான நிலை தனக்கு வருவதற்காக ஒரு தவயோகத்தைக் கையாளுகிறார். கடவுளை அடைய தவம் இருக்கலாம். ஆனால் ஒருவர் போல் மற்றொறுவர் வர வேண்டும் என்ற பேராசை ரிஷிகளிடம் இருக்கக் கூடாத ஒரு நிலை. 
ப்ரஹ்ம தேவதையின், அம்சம் மஹாபாரத சமயத்திற்கு உதவ வரவேண்டும். அதே சமயம் மாண்டவரின் தப வலிமை வசிஷ்டரின் நிலைக்குச் சமமாக வருவதற்கு உதவாமல் அந்த வலிமை பூலோகத்திற்கு விதுரனாகவும், தர்மபுத்திரனாகவும் வருவதற்கான ஒரு சந்தர்பம் கிடைக்க வேண்டும். அதற்காக தரும தேவதை ஒரு சிறிய நாடகத்தை உண்டு பண்ணுகிறார்.

ஒருசமயம் கள்வர்கள் அரண்மனையில் உள்ள பொருள்களை களவாடியவனுடன், சிப்பாயகள் துரத்த, மாண்டவய்யர் பர்ணசாலையில் புகுந்து கொள்கின்றனர். சிப்பாய்கள், கள்வர்களுடன் மாண்டவர்யையும் அழைகின்றனர். பதில் சொல்லாததால் அவரைத் தூக்கிக் கொண்டுவந்து அரசன் முன் நிறுத்துகின்றனர். அப்பொழுதும் அவர் தவம் கலையாததால் அவரால் பதில் கூறமுடியவில்லை. அரசன் அவரையும் கள்வன் என்று நினைத்து கழுவில் ஏற்ற கட்டளையிடுகிறான். மற்ற கள்வர்கள் அன்று இரவு இறந்துவிடுகிறார்கள். நிசி வேளையில் ரிஷிக்கு நினைவு திரும்புகிறது. அன்று இரவு மற்றொறு நிகழ்வும் நடக்கிறது.

ப்ரதிஷ்டானபுரம் என்று அழைக்கப்படும் அந்த பட்டிணத்தில், கௌசிகன் ஷைய்வ்யா என்ற ப்ரஹமண தம்பதியனர் இருந்தனர். ஷைய்வ்யா நளாயினி போன்ற பதிவ்ருதை. குஷ்டரோகத்தில் பீடித்திருந்த தனது கணவனின் வினோத ஆசையை நிறைவேற்ற ஒரு தாசியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள். அச்சமயம் இருட்டில், கௌசிகனது கால், மாண்டவரது சூலத்தில் இடிபட, அவர் வேதனையில், கௌசிகன் சூரிய உதயத்திற்குள் இறப்பான் என்று சாபமிட்டார். தெரியாமல் செய்த தவற்றுக்கு இந்த சாபத்தை இட்டதால் வெகுண்ட பதிவ்ருதை சூரியோதயம் நிகழாமல் செய்துவிட்டாள். தேவர்கள் வந்து அவளை சமாதனம் செய்து, முதலில் சூரிய உதயம் நிகழச்செய்து, பின்பு இறந்த கௌசிகனை உயிர் பெறச் செய்கின்றனர். அவர்கள் இருவரும் ஸ்வர்கம் செல்லுகிறார்கள். இதைக் கண்ணுற்ற மாண்டவர் தர்மராஜனை வருவித்து, தனக்கு நேர்ந்த இந்த அவலத்திற்கு காரணம் கேட்டார். அவரும் சிறு வயதில் செய்த தவற்றினை உணர இந்த தண்டனை என்று சொல்ல, மாண்டவர் வெகுண்டு சாபம் இடுகிறார். விவரம் தெரியாத வையதினில் செய்யும் தவறுகள் தாய் தந்தையரைத் தான் சேரும் என்ற வழக்த்துக்கு மாறாக தன்னை தண்டித்ததால் யமதர்மராஜனை தாசியின் வயிற்றில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். முதலின் கௌசிகனையும் பின்பு யமதர்மராஜனையும் சபித்ததால் அவர் யோக பலன்களை இழந்தார். தர்மராஜன் நினைத்தது எல்லாமே இனிதே நடந்து முடிந்தது. மாண்டவரும் தனது அறியாமையை நினைந்து வெட்கமுற்று, பகவானை த்யானிக்கச் சென்றார். மஹாபாரதம் என்ற இதிஹாசம் உருவாக இவரும் ஒரு காரணகர்த்தாவாக் திகழ்ந்தார்.

VIOLIN & Sri.LALGUDI - A SYNONYM

பத்மபூஷண்  லால்குடி ஜயராமன் அவர்களுக்கு அஞ்சலி

Sunday, April 21, 2013

PRIYE CHAARUSEELE - 19th ASHTAPATHI


ஜயதேவர் 18வது அஷ்டபதியை முடித்தார். 19வது அஷ்டபதியை “வதஸியதி என்று ஆரம்பித்து ஆறு சரணங்கள் எழுதப்பட்டன. ஏழாவது சரணத்தை மனஸால் அமைத்த போது “காமமென்ற கொடிய விஷம் என் தலைக்கேறிற்று. இளந்துளிரைப் போல் சிவந்து ம்ருதுவாயிருக்கும் உன் பாதத்தை என் தலைவை, கருட மந்திரத்தைப் போல் அது விஷத்தை இறக்கும் என்று க்ருஷ்ணன் ராதையை வேண்டினதாய்த் தோன்றிற்று. இதென்ன விபரீதம். அபசாரமல்லவா என்று நினைந்து பத்மாவதியிடம் ஒலைச் சுவடியையும், எழுத்தாணியையும் கொடுத்து புத்தி தெளிய குளிக்கச் சென்றார். சிறிது நேரம் கழிந்து எண்ணைய்த்தலையுடன் வந்து, கல்பனை திடீரென்று தோன்றிற்று என்று கூறி 19வது அஷ்டபதியை முடித்துச் சென்றார். ஸ்நானம் செய்து போஜனம் செய்தபின் மறுபடியும் எழுத எத்தனித்த போது கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்கவைத்தது. எதை எழுத வேண்டாம் என்று பாதியில் வைத்துச் சென்றதை முடித்துவைத்துள்ளதால், சந்தேகத்துடன் வினவ உண்மை தெரிந்தது. பகவானின் லீலையை கண்டு மகிழ்ந்து, பத்மாவதிக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். என்றாலும் பத்மாவதியை தனக்குக் கிடைத்த நிதி என்று உணர்ந்து, பின் வரும் அஷ்டபதியில் பத்மாவதியின் பெயரையும் சேர்த்து பாடல்களை முடித்தார். இந்த வ்ருத்தாந்தம் நாம் எல்லோரும் அறிந்ததே.
ஒரு நாள் ராணியும் பத்மாவதியும் சம்பாஷிக்கும் போது, கணவன் இறந்தால் கற்புடைய மனைவியின் உயிர் உடனே பிறியவேண்டும் என்று பத்மாவதி சொல்ல, ராணி அதை நம்ப மறுத்து விவாதம் நடந்து முடிந்தது. மற்றொறு சமயம் ராஜனும், ஜயதேவரும் அருகிலுள்ள ஊர் சென்றபோது, பத்மாவதி சொன்ன கூற்றை பரிக்ஷிக்க, ராணி, ஜயதேவர் இறந்த்தாக ஒரு பொய்யைச் சொல்ல, அந்த க்ஷணத்திலே பத்மாவதியின் உயிர் பிரிந்தது. ராணி பயந்து நடுங்கினாள். அரசன் ராணிக்குத் தண்டனை அளிக்கத் தீர்மானித்தான். அதை அறிந்த ஜயதேவர் வருத்தமுற்று, 19வது அஷ்டபதியை மறுபடியும் பாட, தூங்கி எழுந்தது போல் எழுந்து வந்து கணவனை வணங்கி நின்றாள். உலகம் இந்த திவ்ய தம்பதிகளின் பெருமையை அன்றே உணர்ந்தது. இதுவும் கண்ணனின் லீலையே. ஆகையால் இந்த அஷ்டபதியை முகாரி ராகத்தில் பாட ப்ராசீனமாக வழி வழியாக வந்துள்ளது. பகவானை நெகிழ்ந்து அழைக்கவும்,ஸ்ருங்கார ரஸமுடன் பாடவும் உகந்த ராகம் முகாரி. 
கண்ணனின் அருள் கிட்ட நாம் எல்லோரும் இந்த அஷ்டபதியை உருகிப் பாடுவோம்.

Music Links People Globally


Shri Thiruvaiyaru Krishnan, popularly known as TSR Krishnan in LA, who is regularly giving concerts, naamasankeerthanam and conducting group music of various renowned “Carnatic Vaagyeyakaras” in Chinmaya Misssion, Shiva Vishnu Temple, Livermore, Hindu Temple of Kern Country, SIMA Los Angeles, US has circulated a mail in praise of violinists viz. Arun and Shiva.
Dear Friends and family:
I felt that it is time I shared with you all, my immense happiness about two of my favorites in this part of the world - about children who are multi faceted/talented, (always) children in my heart but respected adults in the Global Music World.
Arun is already an accredited grand violinist and Shiva, his kid brother is effortlessly reaching the charts as a sought-after accompanist. 
Both boys are brought up with samskAram, soft spoken, and are blessed with humility which is becoming a rare trait (more so in India and to some lesser extent in the rest of the world).
Arun has been a software specialist and working in So Cal but globe-trots as a musician performing all over, especially about 20+ concerts in Madras Music annual Season; 
As a varsity student, he has been an A'capella hero and a fusion artist in demand; 
Very conventionally trained under the great M C and now under Delhi S, he also underwent rigorous western violin training for years - thus making him a sought after Violin Artist; 
He played music score in a Tamil movie and sang in it too; has a few albums in the carnatic music world...the list is long.
His younger sister VANi is already an up and coming vocalist often seen (with Ranjani/Gayatri) in the Madras Music Circuit for a couple of years now and occasionally visits the US! (settled in Chennai after her undergrad in the US).
Shiva is an UCLA student in hot demand (Best male solo violinist in Anahat 2011 and best vocalist in 2012 in the Bay area); similar pedigree and a young musician in great demand.
Arun was one of the grand accompanists in the South Indian Music Academy (LA) performance on December 1, 2012 (the full live recording will be posted onsankeertanam.com shortly).

Don't think that they are simply ordinary folk entrapped in self imposed confinement of 'purism'. They are avid learners and can enjoy and reproduce any music through their fingers.They are as much an ustAd in (Indian) Film music and western tracks, as facile as they could capture a large audience by their classical concerts.

The Rest is for the reading and listening - See below:


Saturday, April 20, 2013

Rudhra Geethai

ருத்ர கீதை என்ற ஸ்லோகங்களைப் பற்றி வலையில் தேடிய போது எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை உங்களுடன் ஆராய்கிறேன். உங்களது கருத்துக்களையும், இதனைப் பற்றி நீங்கள் அறிந்த மற்றய தகவல்களயும் இந்த தபாலின் விமர்சனப் பகுதியை உபயோகித்து, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. ருத்ர கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் வராஹ புராணத்தில் 70-72 பகுதிகளில் உள்ளது. நான்காவது ஸ்கந்தத்தில் 16லிருந்து 79 வது ஸ்லோகங்கள் ருத்ர கீதையாய் உள்ளன.
2.மொழி ஆராய்ச்சியாளர்கள் இந்த வேத புராணங்கள் எழுத்து வடிவில் 6th century B.C. to the 12th century A.D என்ற காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் அளிக்கின்றனர்.
3.புராணங்களை முக்கிய புராணங்கள் அல்லது மஹா புராணங்கள் மேலும் உப புராணங்கள் என்று வகைப் படுத்துகின்றனர்.
4. மஹாபுராணங்களில் உள்ள பஞ்ச கீதைகள் பின்வருமாறு
1. உத்தவ கீதா, 2. ருத்ர கீதா, 3. பிக்ஷு கீதா,
4.ஸ்ருதி கீதா, 5.ஹம்ஸ கீதா.
5. ருத்ரன் ப்ரசேதஸ் என்ற அரசனுக்கு பகவான் நாரயணரை எவ்வாறு பூஜிக்க வேண்டும், அதனால் அடையும் உயர்ந்த மார்க்கம் என்ன என்ற பல செய்திகள் உபதேசித்தார். அதுவே ருத்ர கீதை எனப்படும். இந்த கீதையைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை இங்கே கொடுத்துள்ளேன். படித்து உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Thursday, April 18, 2013

Ragasri Ramayanam

ஐம்பது வரிகளில் “ராகஸ்ரீயின் ராம காவியம்
குர்வர்த்தே த்யக்த ராஜ்யோ வ்யசரதநு வனம்
பத்ம பத்ப்யாம் ப்ரியாயா:
பாணிஸ்பர்ஷாக்ஷமாப்யாம் ம்ருஜிதபதருஜோ
யோ ஹரீந்த்ராநுஜாப்யாம்
வைரூப்யாச் சூர்பணக்யா: ப்ரிய விரஹருஷா -
ரோபித ப்ரூ விஜ்ரும்ப –
த்ரஸ்தாப்திர் பத்த ஸேது: கலதவதஹன:
கோஸலேந்த்ரோவதான்ன:
என்று சுகர் நான்கு வரியில் ராமாயணம் முழுவதையும் சொல்லி ராமனை த்யானிக்கிறார்.  முதன் முதலில் வால்மீகி ராமாயணம் தேவநாகரியில் எழுதப்பட்டது. 
இதனை ஆதாரமாகக் கொண்டு நமது இந்தியாவில் பல பாஷைகளில் பலர் காவியாமாகப் படைத்துள்ளார்கள். 50000 வரிகளில் வால்மீகியால் படைக்கப்பட்ட இந்த காவியத்தை கம்பன் தமிழில் 12வது நூற்றாண்டில் கம்பராமாயணமாகப் படைத்தான். 14வது நூற்றாண்டில் துளசி தாஸர் “ராமசரிதமானஸ் என்ற ஒருகாவியத்தை ஹிந்தியில் படைத்தார். ப்ரேமானந்த் என்பவர் குஜராத்தியிலும், க்ருத்திவாஸ் வங்காள மொழியிலும், பலராம தாஸ் ஒரியாவிலும், மராத்தியில் ஸ்ரீதரா என்பவரும், சந்தஜா என்பவர் மைதிலி என்ற மொழியிலும், 15ம் நூற்றாண்டில் ரங்கநாதா என்பவர் தெலுங்கிலும், 16வது நூற்றாண்டில் தொரவே ராமாயணா என்று கன்னட்த்திலும், துந்த்சத்து எழுத்தச்சன் மலயாளத்திலும் ராமாயண காவ்யத்தைப் படைத்து எல்லோருடைய மனத்திலும், உடலிலும் ராமாயணம் என்ற மூச்சுக் காற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
கீர்வானணை: அர்த்யமாநோ தஸமுக நிதனம்
கோஸலேஷு ரிஸ்ய ஸ்ருங்கே
புத்ரீயாமிஷ்டிம் இஷ்ட்வா த்துஷி தசரத –
க்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம்
தத்புக்த்வா தத் புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு
ஜாதகர்பாஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத
பரதேநாபி ஸத்ருக்ன நாமா
என்று ஆரம்பித்து, ஸ்ரீ நாராயண பட்டத்ரி 34, 35வது தஸகங்கள் மூலம் இருபது ஸ்லோகத்தால் ராமாயண காவ்யத்தை நமக்கு தந்துள்ளார். இதனை மூலமாகக் கொண்டு எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் 50 வரிகளில் இந்தக் காவியத்தை தமிழில் படைத்து இசை அமைத்துள்ளார். “ராகஸ்ரீ என்ற அங்கிதத்துடன் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்துள்ளார். 
2000வருடம் தொடங்கியவுடன் ராகஸ்ரீ பாடல்களை, தொலக்காட்சி முன்னாள் இயக்குனர் திரு.ராம க்ருஷ்ணன் அவர்கள் (நாதமுனி நாராயண ஐய்யங்காரின் சீடர்),  இந்தியாவில் ம்யூசிக் அகாடமி மூலம் ப்ராபல்யப்படுத்தினார். அதே சமயம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரம் மூலமாக என் தமயனார் திரு.திருவையாறு க்ருஷ்ணன், ராகஸ்ரீ பாடல்களை Los Angeles SIMA மூலமாகக் கொண்டுவந்துள்ளார். எனது சகோதரி திருமதி.பூமா நாராயணனும், எனது சகோதரன் திரு.திருவையாறு க்ருஷ்ணனும் பரமாச்சாரியார் முன்னிலையில் பாடி ஆசி பெற்ற இந்த ராகஸ்ரீயின் ராம காவியத்தை, இன்று ராமநவமியை முன்னிட்டு, உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, April 16, 2013

Yours Musically


தூத்துக்குடியில் இருந்து கொண்டு ஒரு இசைப்பயணத்தை நடத்திவரும் சேஷா நம்பிராஜன் தம்பதியர்களை தினகரன் தனது நாளேடு வாயிலாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாட்த்தில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
சிறுவன் கௌதம் மூலம் தொலைக்காட்சி நேயர்கள் இந்த தம்பதியர்களது சேவையை முன்பே அறிந்தனர்.

"Ladders among the humans "

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பின்னால் ஒரு பெண் தான் உள்ளார்கள் என்பது ஆங்கிலப் பழமொழி. இந்த தம்பதியர்கள் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் உந்துதலால் இருவருமே தூத்துக்குடி முழுவதும் உயர்வாகப் பேசப்படும் ஒரு தம்பதியினர் ஆவார். செல்வம், மதம், சாதி என்ற எந்த வேறுபாட்டிற்கும் இடம் தராமல் இநத இசைப்பயணத்தை மேற்கொள்ளும் இந்த தம்பதியினரின் சேவை நன்கு தொடர எல்லாம் வல்ல இறைவனை நாம் என்னென்றும் வேண்டுவோம்.

Saturday, April 6, 2013

Gangastavam - Jaydeva's ashtapathi

ஜயதேவர் என்று சொன்னவுடன் நான் அறிந்தது இருபத்து நான்கு அஷ்டபதிகளே. புதுக்கோட்டை கோபாலக்ருஷ்ண பாகவதரின் மைந்தர் சஞ்சீவி பாகவதர் வெளியிட்டுள்ள ஒரு அறிய புத்தகத்தில் ருந்து நான் அறிந்த ஒரு செய்தி பின் வருமாறு.


Land of God & Goddess - Dev Bhoomi !!! Discover the importance of Ma Ganga in this spellbinding journey to the Himalayas!
The epic journey to find the source of the Ganges . Reaching the temple of Gangotri - the place where Hindus believe that Ganges first appeared on Earth. Further on we will also trail Kedarnath, Valley of Flowers, Yamunotri and Badrinath.
Nanda Devi is India's second highest peak and shelters the Bhyander Valley, home to the remarkable Valley of Flowers. Covered in snow for the majority of the year, it is transformed when the snow melts during the short summer and the high meadows become carpeted in spectacular flowers of every colour. Fantastic cinematography from the epic series of Ganges.
Courtesy - GK Travel & Tours.

Friday, April 5, 2013

Agoris - Unique sadhus


வடமொழிச் சொற்களை நாம் கையாளும் பொழுது சொற்களின் அர்த்தங்களை சரியாக உணராமல் பயன்படுத்துகையில் அர்த்தங்கள் அனர்த்தங்களாக மாறுகிறது. துற்நாற்றத்தை முகர்ந்த நம்மவர்கள் நாற்றமடிக்குது என்பர். நாற்றம் என்பது மணத்தைக் குறிக்கும் சொல். கேவல் என்ற வடமொழிக்கு “மேல்நிலையானது என்று பொருள்படும். அதனை கேவலம் என்று தமிழில் தாழ்ந்த நிலைப்பாட்டிற்குச் சொல்லுவர். அதே போல் அகோரம் என்ற சொல் ரம்மியமான ரசிக்கத்தக்க நிலையினை உணர்த்தும். ஆனால் நாம் அகோரம் என்ற சொல்லை நடைமுறையில் தவாறாக கையாள்கிறோம்.
வடநாட்டு யோகிகளை அகோரிகள் என்பர்.அவர்களை கேவலமானவர்களாகச் சொல்லுவர். அதாவது தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் கோரமற்றவர்கள். அதாவது அ-கோரி. அகோரிகள் பிணம் தின்னும் சாதுக்கள் என்றும் கூறுவர். தங்களை காணாமல் இருப்பதற்காகவும், எவரும் தங்களை பின்தொடர்ந்து அவர்களாது ஏகாந்தமான சூழ்நிலையைக் கெடுக்காமல் இருப்பதற்காகவும் அவர்கள் செய்யும் யுக்திகளில் ஒன்று பிணம் தின்பது போல் ஒரு ப்ரமிப்பை உண்டாக்குவது என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளர்
நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ்  வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.  
விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. சொன்னவர் ஒரு அகோரி.
நான் வலையில் படித்த சுவையான செய்தியை இங்குள்ள பெட்டியில் கொடுத்துள்ளேன். படித்து ரசியிங்கள். இதனை எளிய தமிழில் எழுதி நாம் படிப்பதற்காக தொகுத்து அளித்தவர்க்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.