Wednesday, March 27, 2013

Naama Sankeerthanam - Bajanothsava Manjari

தக்ஷிணத்தில் நாம ஸித்தாந்தம், நாம ப்ரசாரம் செய்து குருஸ்தானம் வகிப்பவர்களான ஸ்ரீபோதேந்த்ராள், ஸ்ரீதர வேங்கடேஸ அய்யாவாள், ஸ்ரீவேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் மூவரும், பின்னர் ஸ்ரீத்யாக ப்ரம்ம்மும் போல், புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் தஞ்சை ஜில்லாவில் அவதரித்து நாமப் ப்ரசாரத்தை வளர்த்து, இன்று உலகளவும் நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.

தமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லா, அரந்தாங்கி தாலுக்கா, வல்லவாரி க்ராமத்தில், ஆந்திர உத்தவ குலத்தில், முலகநாடு பிரிவில், நந்தன வருடத்தில் புரட்டாசி மாதத்தில் 30ம் தேதி (14-10-1892) வெள்ளிக்கிழமை, க்ருஷ்ணபக்ஷ நவமி, ஆயில்ய நக்ஷத்திரத்தில், ஸ்ரீஸுந்தரேஸய்யா மீனாக்ஷி தம்பதிகளுக்கு அவதரித்த புதல்வன் வெங்கிட கோபாலக்ருஷ்ணன், நாமஸங்கீர்த்தனத்தில் ஒரு மைல் கல்லாக இருந்து “புதுக்கோட்டை ஸ்ரீகோபாலக்ருஷ்ண பாகவதர் என்ற நாமத்துடன் உலகளாவிய புகழ் அடைந்துள்ளார். அவர் தொகுத்த பஜனை ஸம்ப்ரதாயத்தை “ஸ்ரீபஜனாம்ருதமாக ஸிவராம க்ருஷ்ண சர்மா புத்தகவடிவில் கொண்டுவந்தார்.
தென் திருப்பேரை ராமக்ருஷ்ண ஐய்யங்கார் அவர்கள் தொகுத்த பஜனோத்ஸவ மஞ்ஜரியை மின்வலைக்குத் தகுந்தமாதிரியான புத்தகவடிவில் ஸ்கேன் செய்துள்ளேன். இதனைப் பெற விருப்பமுள்ளவர்கள் gavats@gmail.com  என்ற முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பிப் பெறலாம். மாதிரிக்கு தோடய மங்களத்தின் தொகுப்பினை கொடுத்துள்ளேன்.

Friday, March 22, 2013

Mahanirvana Tantra - Kali as Ultimate Reality

Kali’s  blackness symbolizes her all-embracing, comprehensive nature, because black is the color in which all other colors merge; black absorbs and dissolves them. Just as all colors disappear in black, so all names and forms disappear in her (Mahanirvana Tantra). Or black is said to represent the total absence of color, again signifying the nature of Kali as ultimate reality. This in Sanskrit is named as Nirguna (beyond all quality and form). Either way, Kali’s black color symbolizes her transcendence of all form.


கருப்பு நிறம் என்றால் காளி என்பர். அறிவியல் ஆய்வின் படி எல்லா நிறங்களும் கருப்பு நிறத்தில் அடங்கிவிடும். ஒரு அன்பர் எனக்கு சவமாய் படுத்த நிலையில் உள்ள சிவன் மேல் நின்று தாண்டவமாடும் ஒரு காட்சியும், அதற்கு காளியின் ஸ்வரூபத்தில் அகில உலகமும் அடங்கிவிடும் என்ற ஐதீகத்தினையும் மின் அஞ்சல் வழியாக அனுப்பியிருந்தார்.  இதற்கான தத்துவதையும் அதன் பின் அமைந்த இதிஹாஸ புராணத்தையும் மின் வலையில் தேடினேன். அதன் சுருக்கம் 
Goddess Kali standing on Shiva is a popular image in Hindu tradition. Legend has it that after defeating Mahishasura and other demons, Goddess Kali was still outraged at the Adharma on earth. She continued destroying everything before her. All living beings were foreseeing eternal doom. To escape from the wrath of Goddess Kali they approached Shiva.
To stop Goddess Kali from destroying the cosmos, Shiva went into the battlefield and lied down motionless among the corpses of demons. Goddess Kali moved across the corpses destroying and cutting them into pieces, suddenly she found herself standing on top of a beautiful male body. For a moment she stood still and then she looked down at the body and saw it was Shiva, her husband.
When she realized she was touching her husband with her feet, Goddess Kali stretched out her tongue in shame and the destruction came to an end. Shiva then pacified the Goddess and danced with her. Together they started creation again and made the world free of Adharma.


Thursday, March 21, 2013

unique thaniavarthanam by Mr.Murali & Mr.Sivakumar

பக்கவாத்யமா அல்லது பக்காவாத்யமா
சங்கீதப்ரியா என்ற வலைத்தளத்தில் பக்கவாத்திய வித்வான்கள் சிலர் எவ்வாறு வாய்பாட்டு வித்வான்களை, கச்சேரியில் நன்றாக பாடவிடாமல் படுத்தினார்கள், பாட விடாமல் திணரஅடித்தார்கள் என்ற ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சில ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளைப் படுத்துவதால், எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் சரியில்லை என்று சொல்லமுடியாது. மேலே சொன்ன விவாதத்திற்கு மாறாக, இன்றய காலகட்டத்தில் பல வித்வான்கள் விதூஷிகள் பக்கவாத்ய வித்வான்களை சரியாகப் போஷிப்பதில்லை. பக்கவாத்ய வித்வான்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் இவர்களது சிறப்பான சங்கீதப் பயணம் ஓகோ என்று இருக்குமா, என்று சிறிதே சிந்திக்க வேண்டும்.  
பாகவத சிரோன்மணி / பாகவதரத்தினம் என்று புகழப்படும் திரு.நாகப்பட்டினம் கோபால பாகவதரின் மைந்தன் திரு. முரளி க்ருஷ்ணன் ஒரு சிறந்த ம்ருதங்கவித்வான். 1980 முதல் தப்லா வாசிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு.பித்துக்குளி முருகதாஸ், திருமதி ஸூலமங்கலம் சகோதரிகள், ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், என்ற பல முன்னணி வித்வான்களுக்கு தபேலா வாசித்த இவர், இப்பொழுதும் தனது தபேலா பயணத்தை பல நாடுகள் சென்றும், வாசித்தும் முன்னணியில் இருந்து கொண்டு சிறப்பாக நடைபோட்டு வருகிறார். உதாரணத்திற்கு ஒரு சிறிய தொகுப்பினை இங்கே காணலாம்.