Saturday, June 24, 2017

Table showing Shradhdha Thithis - 2017-2018சிலர் நமது முன்னோர்கள் திதியை அவரவர்களது க்ரஹத்தின் ப்ருஹஸ்பதி சொல்லட்டும் என்று உள்ளனர். நாம் தான் அதில் அக்கரையுடன் இருக்க வேண்டும். பல சமயம் நாம் சரியாக திதியை கணிக்காது, ப்ருஹஸ்பதியை குறை கூறுவோம். அதற்கான காரணங்கள்
1. திதித்துவையம் வரலாம்.
2. சூரியோதயத்திலிருந்து எவ்வளவு நாழிகைகள் அன்றைய திதி உள்ளது என்பதை அறிவதில் தவறாகலாம்.
3. மற்றும் க்ருஷ்ணபக்ஷமா அல்லது சுக்லபக்ஷமா என்ற ஒரு சம்சயம் வரலாம்.
சுலபமாக முன்னதாகவே நாள்களை குறித்து நமது நாட்காட்டியிலோ அல்லது கூகுள் / விண்டோஸ் நாட்காட்டியில் முன்னதாகவே இதனை பதிவு செய்து நம்மை நினைவு படுத்தச் செய்யலாம். இதனை செயவதற்கு முன், நம்மிடம் உள்ள நமது முன்னோர்களின் சர்மஸ்லோகம் எழுதப்பட்ட தஸாஹஸ் கடுதாசியினை பத்திரப் படுத்தி வைத்து குறித்துக்கொள்ளலாம்.

சுலபமாக நாளினைக் குறித்துக் கொள்ள கீழே தரப்பட்டுள்ள அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் அச்சிட்டவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கலாம்
Tuesday, June 20, 2017

Sri.R.Sundararajan Attained Lotus Feet


குருஜீ பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் அவர்களின் மருமான் திரு சுந்தரராஜன்,
 
திங்கட்கிழமை (19.06.2017) அன்று ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.

பாகவத ஸ்ரேஷ்டரான இவர், பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் வழியில் ஸத்காரியங்களில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு எளிமையான, அமைதியான உத்தம சீலர்.


இவரின் முன்னோர்கள் போல் நல்ல ஸாயுஜ்யம் அடைய ஸ்ரீமன்நாராயணனை நாம் எல்லோரும் ப்ரார்த்திப்போம்.


Saturday, April 1, 2017

Ramanavami - துர்முகி வருட ராமநவமி பண்டிகை 2017


“ராம பட்டாபிஷேகம்” என்ற இந்த சாமா ராகப் பாடல் ராகஸ்ரீ” என்ற திரு. ஸ்ரீநிவாச ராகவன் (1910) அவர்களின் படைப்பு.
திரு GN பாலசுப்ரமணியன், ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களின் சமகாலத்தவர். திரு ராகஸ்ரீ அவர்கள் நானூறுக்கும் மேற்பட்ட பல க்ருதிகளைப் புனைந்து மெட்டமைத்துள்ளார்.
நாராயணீயத்தின் செய்யுள்களை மூலமாகமாகக் கொண்டு, தமிழில் பல பாடல்களை மெட்டமைத்து பாடியுள்ளார்.  ஆறுபடை யாத்திரைப் பாடல்கள் பல இயற்றி, படி உற்சவத்தின் போது திரு. ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களுடன்  திருமதி பூமா நாராயணன், திரு க்ருஷ்ணன் இந்த இருவர்களால் பாடப்பட்ட பல பாடல்கள் இன்றும் “திருவல்லிக்கேணி PTPani & Co.,”  மூலமாக ப்ராபல்யமாக பேசப்பட்டுள்ளது.
2015வது ராம நவமியில், இவரது ராமாயணப் பாடல்  முன்னமேயே இங்கு பதிவு செய்துள்ளேன். ராம பட்டாபிஷேக காட்சியினை நம் கண் முன் நிறுத்தும் இந்தப் பாடலை  இந்த சமயத்தில், திருமதி அம்புஜம் ஸ்ரீநிவாஸ ராகவன் அவர்களின் ஞாபகமாக , எனது தமக்கை திருமதி ரமாரங்கனாதனுடன் இணைந்து  வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, February 25, 2017

Hari Narayanan Sings in praise of Ramanujacharya


ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.
• சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.
• ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.
• மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.
• கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.
யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர்.

ராமனுக்கு அனுஜன் “ஹரி நாராயணன் ஸ்ரீவத்ஸன் ”, 
ஆச்சாரியர் ராமானுஜரை மனம் உருக பாடியுள்ளார். 
இவர் திரு.ஹெம்மிகே  ஸ்ரீவத்ஸன், (திருK.V.நாராயணஸ்வாமி அவர்களின் குருகுலத்தை பின்பற்றிவருபவர்) அவர்களின் குமாரர். 
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அயல் நாட்டில் நமது கலாசாரத்தை பின் பற்றிவரும் இந்த குடும்பத்திற்கு ஆச்சாரிய சக்ரவர்த்தி ராமானுஜர் அவர்கள் பரிபூர்ண ஆசி  என்றென்றும் வழங்க நாம் எல்லோரும் அந்த ஸ்ரீமன் நாராயணனைப் ப்ரார்த்திப்போம்.