Thursday, November 4, 2010

குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

எனது பள்ளி நாட்களில் எந்த ஒரு இசைக்கருவியைப் பார்த்தாலும் அதை வாசிக்க ஓர் அவா எழும்.  அன்றைய சூழ்நிலையில் அதற்கான ஏது ஒன்றும் அமையவில்லை. வயலின் ஒரு நிலைவரை வந்து அதனை தொடர இயலவில்லை. துரையா என்ற ஒரு நண்பர் அவரது கிதார் என்ற அயல் நாட்டு இசைக் கருவியைக் கொடுத்து அதில் கர்நாடக இசையை வாசிக்க ஊக்கப்படுத்தினார். பிறகு பலவித காரணங்களால் அதையும் தொடர முடியவில்லை. புல்லாங்குழல் வாசிக்க ஒரு அவா எழுந்தது. திருவிழாவில் விற்ற புல்லாங்குழல் தான் கிடைத்தது. அதையும் விடவில்லை. எங்கள் இல்லத்தில் இருந்த ஒரு “கல்யாணி மேள ஹார்மோனியத்தில் பஜனைப் பாடல்கள் வாசிக்க ஆரம்பித்தது இன்றுவரை நிலைத்தது. எனக்கு ஒரு மன அமைதியை தந்தது. இன்றும் தருகிறது.
இது என்ன ஹார்மோனியமா அல்லது வயலின் என்ற இசைக்கருவியா அல்லது கணினி ஏற்படுத்தும் கருவியா அல்லது ......... இல்லை; உங்கள் கற்பனை சக்திக்கு விட்டு விடுகிறேன்.
புல்லாங்குழல் வாசிப்பதில் இருந்த மோகம் என்னை சீட்டி அடிப்பதில் ஊக்குவித்தது. அன்றைய நாட்களில் பெரியவர்கள் முன் செய்தால் அது ஒரு அவமரியாதையான செயலாகக் கருதினர்.  ஆனால் இன்றோ ஒரு முழுநேர கச்சேரியாக பலர் இதைச் செய்கின்றனர். பித்துக்குளி முருகதாஸ் அவர்களை  எனது மானசீக குருவாகக் கொண்டு ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாட பயற்சி செய்தேன். கடவுள் அருளினால் நன்கு அமைந்தது. ஹார்மோனியத்துடன் சீட்டியைச் சேர்த்தால் எப்படியிருக்கும். இதோ ஒரு முயற்சி.

2 comments:

  1. குழலிசை போன்று சீட்டி இசை மிகவும் அருமை. குறையொன்றும் இல்லவே இல்லை. தாளத்துடன் இணைந்து கமகத்துடன் இசைந்து இனிமையாக இருக்கிறது. முயற்சியே முதன்மையாக உள்ளது. முயற்சியால் பயிற்சி எடுத்து வளர்ச்சி அடந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    உங்கள் இனிமையான இசையில் மயங்கிய எங்களுக்கு கற்பனை வேலை செய்யவில்லை. எனவே புதிரை நீங்களே விடுவிக்கவும்.
    குறையொன்றும் இல்லை என்று பாடிவிட்டு தங்கள் மனதில் புல்லாங்குழல் , கிட்டார், வயலின் இவைகளை வாசிக்க முடியவில்லையே என்ற குறை இன்றும் தங்கள் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் தங்களது இசைத்திறமைக்கு முன்னால் இது ஒன்றும் பெரிய குறையில்லை.
    தங்களது சீட்டி இசையும் ஹார்மோனிய இசையும் இந்த குறையை தூக்கி அடித்துவிட்டது. இதுவே தங்களுக்கு இறைவன் அளித்த பெரிய பாக்கியம்.
    இந்த வயதில் சீட்டி அடிப்பது தவறொன்றும் இல்லை. இதே காரியத்தை நீங்கள் சிறு வயதில் அடித்திருந்தால் உங்கள் சீட்டியை கேட்டு உங்கள் பின்னால் சிட்டுகள் பறந்து வந்திருக்கும். உங்கள் துணைவியார் இதை நினைத்துப்பார்த்தால் எப்படி இருக்கும். இதனை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  2. ethanai azhagAna blog post - ChitthA, what a beautiful rendition of "kurai onDrum illai" - I was really truly moved!! etthanai inimaiyAna isai!! Testament to your knowledge and amazing talents!!

    'Sesha' engira naNbariDamirundhu ethanai azhagAna varNanai!! I agree with his sentiments 100%

    indha deepAvaLi nannALandru "kurai onDrum illai"-engira eNNatthODu - bAlAji perumALai ninaitthu avan aruLukku nanDri solli - ungaLanaivarakkum enadhu praNAmangaLaiyum anbaiyum indha maDal mUlamAga anuppugirEn.
    - your priya muttAL

    ReplyDelete