Wednesday, April 6, 2016

Destiny, God Faith, Re-Birth, Navagraha Pariharam - You belong to which category?

இந்த சுவையான வாக்குவாதம் அன்றாடம் நம்மில் பலர் மத்தியில் நிலவி வருகின்றது.
நண்பர்: சார் உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?
மற்றொறு நண்பர்: உண்டு. நவக்ரக அர்ச்சனை, ப்ரீதி, ஹோமம் எல்லாம் நான் செய்வேன். நான் இப்பொழுது அனுமனைத் தொழுது நவக்ரஹ ப்ரீதி செய்யாலாம் என்றுள்ளேன்.

நண்பர்: விதி என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ம.நண்பர்: உண்டே. பிறந்தவுடன் அவரவர்கள் முந்தய பிறவியில் செய்த கர்ம பலன்கள், மேலும் பிறந்து இது வரை நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன் எல்லாம் ஒன்று சேர்ந்து நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை மதிப்பிடலாம். அது சரி உங்களுக்கு அதில் நம்பிக்கை உண்டா?
நண்பர்: எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது சார். ஏனென்றால் நான் தினமும் பல தொழில் வல்லுனர்கள், அரசாங்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நண்பர்கள், பலவிதமான விதிமுறைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்து நன்றாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களிடம் சென்று ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளதா என்று கேளுங்கள். இல்லை என்பார்கள். அவர்கள் வாழ்க்கை எந்தவித இடர்பாடுகளும் இல்லாதவரை ஜோதிடத்தில் நம்பிக்கையோ அல்லது க்ரஹ ப்ரீதியோ, கடவுளைத் தொழுதலோ செய்யமாட்டார்கள். அவர்களுக்கு இன்னல் வரும் பொழுது தான் இதில் எல்லாவற்றிலும் நம்பிக்கை வந்து விடும். 
அதுவும் அவர்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் செய்வார்கள். இந்த காரணத்தினால் தான் எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் அந்த வர்கத்தில் இல்லை. நான் இயற்கையை நம்பும் மனிதனாவேன்.
ம.நண்பர்: அந்த இயற்கையில் உள்ளவிஷயங்கள் தான் இந்த நவக்ரகமும் அதன் பாதிப்புகளும். த்ரேதாயுகத்திலேயே கடவுளிடம் நம்பிக்கையில்லாது, நவக்ரகங்களை கட்டி வைத்து அதில் நம்பிக்கை வைத்த ராவணன் போல் நம்மில் பலர் இன்றும் உள்ளனர். அவர்களும் ராவணன் போல் அழிவார்கள். அது நீங்கள் சொல்வது போல் இயற்கையிலேயே நடக்க உள்ளது.
அப்படி என்றால் ஜோதிடத்தைப் பற்றி சிறிது ஆராயலாம்.

விண்வெளியையும், அங்கு உள்ள கோள்கள் பற்றியும் அதன் பாதிப்புகளைப்பற்றியும், தெரிந்துகொள்ள செயற்கை கோள்களிலிருந்து சேகரித்தத இந்த தொகுப்பினை சற்றே அலசலாம்.
இந்த மூர்த்தியிலேயே எல்லா கிரஹங்களும் அடங்கியுள்ளன.
இந்துக்கள் வழிபடும் தெய்வங்களில் நவக்கிரங்களும் வழிபாட்டுக்குரியாதாக அமைந்துள்ளது. கிரகம் என்ற சமஸ்க்ருத சொல் ஆளுகைப்படுத்தல் என்பதாம். அதாவது ஒன்பது கோள்கள் புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்றன. அதனைப் பற்றிய அறிவு ஜோதிடம் என்பர். இந்திய சோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன..

கோள்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்ற நம்பிக்கையே சோதிடத்தின் அடிப்படையாகும். புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே சோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் சோதிட நூல் கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது.
நவக்ரக கோவில்கள் பல உள்ளன. தஞ்சையை ஒட்டிய நவக்ரக கோவில்கள் பின் வருமாறு. சூரியனார் கோவில், திங்களூர் கைலாசநாதர் கோயில், சீர்காழி வைத்தீசுவரன் கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில், கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

சோதிடத் துறையின் பெரும்பகுதி தற்காலத்தில் அறிவியல் அடிப்படைற்றதாகக் கணிக்கப்படுகிறது.  எனினும் ஒரு காலத்தில் அறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு உயர் மதிப்பு மிக்க துறையாகக் கருதப்பட்டு வந்தது. மிகப் பழைய காலத்திலேயே உருவாகி நீண்டகாலமாக வளர்ந்து வந்த இத் துறையும், பிற துறைகளைப் போலவே பல கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் கிறீஸ்துவுக்கு முந்திய காலப்பகுதியிலிருந்தே இது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன் பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிலும் சங்ககாலத்திலேயே சோதிடக் கருத்துருக்கள் பலவற்றை மக்கள் அறிந்திருந்ததற்கான சான்றுகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.

பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில், பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 சமமான கோணத் துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்திய வானியல், சோதிடம் ஆகிய துறைகளில், 30 பாகை அளவு கொண்ட துண்டு ஒவ்வொன்றும் ஓர் இராசி என அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு இராசிகளும் சேர்ந்தது இராசிச் சக்கரம் ஆகும். இச் சக்கரத்தில், பூமியையும், அதற்கு வெளியிலுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளியையும் இணைக்கும் கோட்டை தொடக்கமாகக் கொண்டு இந்த இராசிப்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது. இக் கோட்டிலிருந்து அளக்கப்படும் முதல் 30 பாகை கோண அளவு மே இராசியாகும்.இவ்வாறே ரிஷபம், மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் ,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று எஞ்சிய 11 இராசிகளும் பெயரிடப்பட்டுள்ளன.

பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  புவி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா இராசிகளையும் கடந்து செல்கின்றது. பூமிக்குச் சார்பாகப் பார்க்கும்போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம். எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி இருக்கும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது. மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாகக் குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும்போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கமாயினும், சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது. குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.

முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).
 நமது இன்ப துன்பங்கள் மேலும் மேலும் வளர்கின்றன;

அதே போல் ஜோதிடமும் வளரும்