Sunday, August 4, 2013

Who is an Atheist - நாஸ்திகன் யார்?

நாஸ்திகன் என்பவன் யார்?
முன்னும் இருந்தனர்; இப்பொழுதும் இருக்கின்றார்கள்; நாளையும் இருப்பர். அவர்கள் யார்?
1.கடவுள் இல்லை என்பவனா? அல்லது
2.கடவுளை விட நான் உயர்ந்தவன் என்பவனா? அல்லது
3.யாகம் யக்ஞம் தானம் செய்தல் கூடாது என்று கூறி அதைத் தடுப்பவனா?
ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு, ராவணன், கும்பகர்ணன், கம்ஸன், சிசுபாலன் என்ற ஒரு பட்டியல் உள்ளது. கலியிலும் இவ்வகையில் பலர் உள்ளார்கள். இவர்களெல்லாரும் உண்மையில் நாஸ்திகர்கள் அல்ல.
பாகவதத்தில் சொல்லப்படும் வேனன் என்ற அரசனயே நாஸ்திகன் என்று அழைப்பர். தன்னைத் தவிர கடவுள் என்று ஒருவர் கிடையாது. யாகம் யக்ஞம் என்ற கர்மாக்களால் என்னையே ஆராதிக்க வேண்டும் என்றான். அதானால் அவனை நாஸ்திகன் என்றுவகைப் படுத்தினர். நம்மில் சில வேனர்கள் இருந்து அழிந்தனர்; அவர்கள் பல வேனர்களை உருவாக்கி உள்ளார்கள். ஆனால் உருவாக்கிய வேனர்கள் ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு, ராவணன், கும்பகர்ணன், கம்ஸன், சிசுபாலன் என்பவர்களாக மாறி அவர்களுக்கே தாங்கள் எதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதில் மயக்கம் கொண்டு ஆஸ்திக நாஸ்திகர்களாய் உயிர் வாழ்கிறார்கள்.

காமாத் த்வேஷாத் பயாத் ஸ்னேஹாத்
யதா பக்த்யேஸ்வரே மன:
ஆவேஸ்ய ததகம் ஹித்வா
பஹவஸ்தத் கதிம் கதா:
கோப்ய: காமாத் பயாத் கம்ஸோ
த்வேஷாத் சைத்யாதயோ ந்ருபா
ஸ்ம்பந்தாத் வ்ருஷ்ணய: ஸ்னேஹாத்
யூயம் பக்த்யா வயம் ப்ரபோ
கதமோபி ந வேன: ஸ்யாத்
பஞ்சாநாம் புருஷம் ப்ரதி
தஸ்மாத் கேநாப்யுபாயேன
மன: க்ருஷ்ணே நிவேஸயேத்
…………………….என்றார் நாரதர்.
பகவானை அடைவதற்கு பக்தி ஒன்று மட்டும் காரணமல்ல. பகவானை அடைய காமம், த்வேஷம், பயம், ஸ்னேஹம், பக்தி என்ற ஐவகை உபாயமுள்ளதாக நாரதர் கூறினார். காமத்தை கோபிகைகளும், பயத்தை கம்ஸனும், த்வேஷத்தை சிசுபாலனும், பந்து ஸ்னேஹத்தை பாண்டவர்களும், பக்தியை நம்மில் பலரும் ஆராத்தித்து பகவானை அடைகிறோம் என்று நாரதர் விளக்கம் கூறுகிறார்.
ஒரு சில வேனர்கள் இருந்தனர். அவர்கள் பல நாஸ்திக ஆஸ்திகர்களை உருவாக்கியுள்ளார்கள். அவர்களையும் கடவுள் ரக்ஷிப்பார். நாம் அவர்களை “பாபிகளே என்று அழைத்து வகைப்படுத்தமாட்டோம். வசைபாடமாட்டோம். அது தான் நமது சமயத்தின் தர்மம்.
ஆங்கில மொழியில் நான்கு விதமாகப் வகைபடுத்தி மிகவும் தெளிவாக நம்மைக் குழப்புவர். அவர்களைப் பற்றிய விளக்கத்தை வலையில் நான் படித்தது; குழம்பியது.

An atheist agnostic is someone who does not believe in gods and also thinks that the existence of gods cannot be known. This might mean that they don’t believe in gods because they haven’t seen any evidence that supports their existence.
A theist gnostic is someone who believes in a god/gods and thinks that the existence of gods can be known. This position is usually referred to as just ‘theist‘, since people who believe in gods, usually also think that their existence can be known.
An atheist gnostic is someone who does not believe in gods, and who thinks that we can know that gods do not exist. A fairly unusual position, they might think they have found proof of the non-existence of gods, or might have been persuaded by life experiences.
A theist agnostic is someone who believes in gods, but thinks that they could not know for sure that their god exists. Another fairly unusual position, as people who have faith in gods usually also think that their god can be known to be real.

No comments:

Post a Comment