Saturday, August 9, 2014

Importance of Guru - குருவின் மகிமை

திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளை தருசிக்கச் செல்ல பன்னிரண்டு மணிநேரம் வரிசையில் நின்ற பின் முப்பது விநாடிகளுக்கும் குறைவாக நின்று சேவித்தபின் ஜனசமுத்திரம் நம்மை வெளியே தள்ளும் பொழுது, நாம் எதனை நினைந்து வேண்டி அங்கு வந்தோமோ அதனை மறந்து ப்ரமிப்புடன் வெளியே செல்லுகிறோம். அனால் அங்கே அவருக்குச் சேவை செய்யும் பட்டரோ நாள் முழுவதும் அங்கேயே உள்ளார். அவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
நாம் குருவின் அருகாமையிலிருந்தும் அவர் அருமை அறியாது நாம் செயல்படுகிறோம்.
குந்தி கண்ணனை வேண்டும் பொழுது, நான் தினம் தினம் கஷ்டங்களை அனுபவித்தாலும் அதனை வெறுக்கவில்லை ஏனென்றால் உன்நினைவு எனக்கு எப்பொழுதும் இருக்கும் அதனால் என் அருகாமையில் நீ எப்பொழுதும் இருக்கிறாய். அதுவே எனக்கு திருப்தி என்றாள்.
மேலே சொன்னக் கருத்துக்களை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்த ஒரு செய்யுள்.
சொல்லாமலே சொல்லி கேட்காமலே கொடுத்து
நாமறியாமலே நம்மை இயக்கி அன்புடனே துன்புறுத்தி
வாக்கிற்கும் மனதிற்கும் அறிவிற்கும் எட்டாத தானே
தானே ஆன அந்நிலையைத் தானே தருபவராம் குருநாதர்
பூஜ்யஸ்ரீ முரளிதர குருஜி அவர்கள் இயற்றிய இந்தப் பாடல், குருவின் மகிமையை மிகவும் சிறந்த முறையில் தமிழில் மிகவும் எளிய நடையில், எவரும் பாடும் வண்ணம் அமைந்த பாடல். நன்கு இசை அமைந்தப் பாடல்.

ராகம் தேஷ்                       தாளம் ஆதி
பல்லவி
குரு க்ருபையில்லாமல் ஹரி க்ருபையில்லை
ஹரி க்ருபையில்லாமல் பக்தி இல்லை
அனுபல்லவி
பக்தி இல்லாமல் முக்தியுமில்லை
முக்தியில்லாமல் துக்க நிவ்ருத்தியுமில்லை
சரணம்
குரு உருவும் ஹரி உருவும் ஓர் உருவாகுமே
ஓருருவில் உன் மனதை நிறுத்தினால்
ஓருருவான அந்த ஓங்காரப் பொருள்
சத்ய ஞான அனந்த பிரம்மமாய் மிளிர்த்திடுமே

No comments:

Post a Comment