எங்களது குருநாதர் திரு.நாதமுனி
நாநாஜி அவர்களைக் காண பலர் வருவர். அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை அவருடன்
பகிர்ந்துகொண்டு அவரிடம் ஆலோசனை பெறுவர். மனதினை ஒரு நிலைப் படுத்தி த்யானம்
செய்வதைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி, தாங்கள் அதனைச் செய்வதாகச் சொல்வர்.
அப்பொழுது அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை மிகவும் பெருமிததுத்துடன் நாணாஜியிடம்
கூறுவர். இதனைக் கேட்டபின், வேடிக்கையாக அவர் என்னை பலமுறை, எனது அனுபவத்தைக்
கேட்பார். என்னால் பிறர் ஸ்லாக்கியமாகச் சொல்லும் அந்த “Meditation“ கையாள முடியவில்லையே
என்ற தாபம் எனக்கு உண்டு. மெடிட்டேஷன் செய்யும் போது உறக்கம் தான் வருகின்றது. அல்லது மனது
ஒருநிலைப்படாமல் அன்று நடந்த சம்பவங்களும், எனைய நினைவுகளுமே மெடிட்டேஷன் செய்யும்
போது வருவதாகச் சொல்வேன். என்னைப் பார்த்து சிரிப்பார். நான் வருத்தப்பட்டதும்
உண்டு.
நாமதேவ் தனது பாடலில் இந்த
விஷயத்தை வேடிக்கையாகச் சொல்கிறார்.
अम्रुताहुनी
गोड नाम तुझे देवा मन माझे केशवा का बा न घे
सान्ग पन्ढरीराया काय करु यान्सी का रुप
ध्यानासी न ये तुझे
कीर्तनी बैसता निद्रे नागविले मन माझे
गुन्तले विष्यसुखा
हरि दास गर्जती हरि नामाच्या किर्ती नये
माझ्या चित्ती नामा म्हणे
எனது பிதாவான ஓ கேசவா! உன் அம்ருதமான நாமத்தில் எனது மனம் ஏன் செல்லவில்லை. ஓ பண்டரிநாதா உன்னில் மனதை ஒருநிலைப் படுத்த விழைகிறேன். முடியவில்லையே. உனது சௌலப்யாமான உருவத்தை நாமமாகச் சொல்லி பாடும் பொழுது உறக்கம் என்னை கொண்டு செல்கிறது. உன்னை துதிப்பவர்கள் உனது நாமத்தை பாடுகின்றனர். அந்த நாமம் ஏன் இந்த நாமதேவனின் காதுகளிலோ மனதினிலோ உள் செல்லவில்லை.
ஓ பண்டரிநாதா என்று அவரே அறற்றும் போது நான் எம்மாத்திரம். அவர் பாடிய பாடலையாவது பாடி என்னை தேற்றிக்கொள்ளுகிறேன்.
No comments:
Post a Comment