Wednesday, September 24, 2014

Bagwan Vaasudeva's Twenty two Avatharams

இதம் பாகவதம் நாம புராணம் ப்ரஹ்மஸம்மிதம்
உத்தமஸ்லோக சரிதம் சகார பகவான் ருஷி:
நிஸ்ரேயஸாய லோகஸ்ய தன்யம் ஸ்வஸ்த்யயனம் மஹத்:
புகழத்தக்க புண்ய புருஷரான ஸ்ரீமன் நாராயணனின் புராணமான வேதமயமான் இந்த பாகவத புராணத்தை வ்யாஸர் உலகக்ஷேமார்த்தமாகச் செய்தார். பின் அதனை சுகருக்குக் கற்பித்தார். சுகர் மஹரிஷிகளால் சூழப்பட்ட பரீக்ஷித் மஹாராஜனுக்கு கேட்கும்படிச் செய்தார்.
க்ருஷ்ணே ஸ்வதாமோபகதே தர்மஞாதிபி: ஸஹ
கலௌ நஷ்டத்ருஸாமேஷ புராணார்கோதுநோதித
க்ருஷ்ண பகவான் தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்த அளவில் கலியில் பார்வையை இழந்த மக்களுக்கு பாகவதம் என்ற ஸூர்யன் உதித்தது. இந்த பாகவதத்தை ஸூதமகரிஷி பகவானின் விராட்ஸ்வரூபத்தில் ஆரம்பித்து கலிவரை உடைய பகவானின் கல்யாண குணங்களை இருபத்திரண்டு அவதாரங்களாக விவரிக்கிறார்.
 
ஜலத்தில் பள்ளிகொண்டு யோகநித்ரையில் உள்ள வாஸுதேவன் நாபி கமலத்திலிருந்து ப்ரும்மா உண்டானார். ப்ரும்மாண்டமான் விராட் ஸ்வரூபத்தில் பலவிதமான அவதாரங்களும் அதனுள் ப்ரும்மாவும் அவரின் அம்சமான தக்ஷன், நாரதர், மரீசி முதலானவர்களால் தேவன் மனிதன் ம்ருகங்கள் முதலானவைகள் சிருஷ்டிக்கப்படுகின்றனர்.
ஸ ஏவ ப்ரதமம் தேவ: கௌமாரம் ஸர்கமாஸ்தித
சசார துஸ்சரம் ப்ரஹ்மா ப்ரஹ்மசர்யமகண்டிதம்
முதலில் கௌமார ரூபமான ப்ராம்மணராக பாவித்து ப்ரம்மசர்யத்தை அனுஷ்டித்தார். 
 த்விதீயம் து பவாயாஸ்ய ரஸாதலகதாம் மஹீம்
உத்தரிஷ்யந்நுபாதத்த யஜ்ஞேஸ்: ஸௌகரம் வபு:
யாகங்களுக்கெல்லாம் அதிபதியான இவர் இவ்வுலக க்ஷேமத்திற்காக பாதாளத்தை அடைந்த பூமியை மேல் எடுக்கின்றவராய்க் கொண்டு பன்றி உருவமான சரீரத்தை இரண்டாவது அவதாரமாக அவதரித்தார்.
த்ருதீயம்ருஷிஸர்கம் ச தேவர்ஷித்வமுபேத்ய ஸ்:
தந்த்ரம் ஸாத்வத மாசஷ்ட நைஷ்கர்ம்யம் கர்மணாம் யத:
மகரிஷிகளிடத்தில் ஆவிர்பாவத்தை அடைய எண்ணி தேவரிஷியான நாரதஸ்வரூபத்தை அடைந்து எதிலிரிந்து கர்மாக்களின் நிஷித்தக் காம்யத்தன்மை ஏற்படுமோ அப்படிப்பட்ட பாஞ்சராத்ரம் என்ற ஆகமத்தைச் சொன்னார்.
துர்யே தர்மகலாஸர்கே நரநாராயணா வ்ருஷீ
பூத்வா ஆத்மோபஸமோபேத மகரோத் துஸ்சரம் தப:
தர்மனின் பத்னியின் ஸ்ருஷ்டி ரூபமான நான்காவதான அவதாரத்தில் நரன் நாராயணன் என்ற இரு ரிஷிகளாகத் தோன்றி ஆத்ம நிக்ரஹத்தோடு, மற்றவரால் அனுஷ்டிக்கமுடியாததுமான தவத்தை செய்தார். 
அடுத்தப் பதிப்பில் கபிலாவதாரத்திலிருந்து கலிவரைக் காணலாம்