Friday, September 26, 2014

From Kapila to Pruthu - கபிலர் தொடங்கி ப்ருது வரை

அனர்த்தோபஸமம் ஸாக்ஷாத் பக்தியோகமதோக்ஷஜே

லோகஸ்யாஜானதோ வித்வாம்ஸ்க்ரே ஸாத்வத ஸம்ஹிதாம்
ஸ்ரீவாஸுதேவனிடத்தில் செய்யப்படும் பக்தியோகமானது நேரிடையாகவே ஜீவனுக்கு ஏற்படும் கஷ்டத்தைப் போக்கவல்லது என்ற உண்மையைக் கண்டு கொண்டதால் வ்யாசமுனி மக்கட்கு “ஸ்ரீமத் பாகவதம்” என்ற இதிஹாஸத்தைச் சொன்னார்.
இனி வருவது கபிலர் அவதாரம் தொடங்கி ப்ருது வரை இந்தப் பதிப்பில் காணலாம்.
பஞ்சம: கபிலோ நாம ஸித்தேஸ: காலவிப்லுதம்
ப்ரோவாசாஸுரயே ஸாங்க்யம் தத்வக்ராம விநிர்ணயம்
ஐந்தாவதாக ஸித்தர்களுக்கெல்லாம் ஈசனான கபிலர் என்று ப்ரஸித்தாராய் காலக்ரமத்தில், அழிந்துபோகும் தருவாயில் உள்ள தத்வங்களின் சமூகத்தை நிர்ணயித்து தருவதான “ஸாங்க்யம்” என்ற சாஸ்திரத்தை ஆஸூரி என்ற ப்ராம்மணனுக்கு சொன்னார்.
ஷஷ்டே அத்ரே ரபத்யத்வம் வ்ருத: ப்ராப்தோன்ஸூயயா
ஆன்விக்ஷிகீ மலர்காய ப்ரஹ்லாதாதிப்ய ஊசிவான்
அத்ரிமகரிஷியின் பத்னியால் வரிக்கப்பட்டவராய் ஆறாவதான அவதாரத்தில் அத்ரி மகரிஷிக்கு குழந்தையாயிருக்கும் தன்மையை அடைந்தவராய், அலக்கனுக்கும்,ப்ரஹ்லாதன் முதலானவர்களுக்கும் ஆத்மவித்யையை உபதேசம் செய்தார்.
தத: ஸப்தம ஆகூத்யாம் ருசேர் யஞ்ஜோப்யஜாயத
ஸ யாமாத்யை: ஸுரகணைரபாத் ஸ்வாயம்புவாந்தரம்
ஏழாவதான அவதாரத்தில் ருசியிடத்திலிருந்து ஆகூதியிடத்தில் யக்ஞன் என்ற பெயரோடு உண்டானார். அப்படிப்பட்டவர் யாமன் என்ற தனது குழந்தைகளான தேவக் கூட்டங்களோடும் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தை தானே காப்பாற்றினார்.
அஷ்டமே மேரு தேவ்யாம் து நாபேர்ஜாத உருக்ரம
தர்ஸயன் வர்த்ம தீராணாம் ஸர்வாஸ்ரம நமஸ்க்ருதம்.
எட்டாவதான அவதாரத்தில் எல்லா ஆஸ்ரமத்தினராலும் வணங்கத்தக்க வீரர்களின் மார்க்தத்தை காண்பிக்கின்றவராய் உரூக்ரமன் என்ற பெயரை உடையவராய் நாபியிடத்திலிருந்தும் மேருதேவியிடத்தினிலும் ரிஷபர் என்ற பெயரை உடயவராய் தோன்றினார்.

ருஷிபிர்யாசிதோ பேஜே நவமம் பார்திவம் வபு:
துக்தேமாமோஷதீர் விப்ராஸ்தேநாயம் ஸ உஸத்தம:
மகரிஷிகளால் வேண்டப்பட்டவராய் ஒன்பதாவதாக ப்ருது ரூபமான அரச ஸரீரத்தை அடைந்தார். பூமியிடத்திலிருந்து, அந்தந்த வஸ்துக்களின் தேவர்களை கன்றாக ஆரோஹித்து பூமியின் எல்லா வஸ்துக்களையும் கறந்து, எல்லா அவதாரங்களிலும் விரும்பத் தக்கதுமான அவதாரமாகச் சொல்லப்பட்டது.
ஸ வேத தாது: பதவீம் பரஸ்ய துரந்த வீர்யஸ்ய ரதாங்கபாணே
யோமாயயா ஸந்த தயாநுவ்ருத்யா பஜேத தத்பாத ஸரோஜகந்தம்
எவனொருவன் கபடமில்லாததுமான இடைவிடாது அனுவ்ருத்தியால் இறைவனது பாத கமலங்களின் வாஸனையை ஸேவிக்கின்றானோ, அவன் பகவானையும் அதிக வீர்யம் உடையவரான ஸ்ரீசக்ரபாணியின் ஸ்வரூபத்தை அறிகிறான்; அடைகிறான்.
மத்ஸ்யம் முதல் கலிவரை உள்ள எஞ்சிய அவதாரங்களை அடுத்த பதிப்பில் ஸேவிக்கலாம்.

No comments:

Post a Comment